ரமணமகரிஷி (26)
ரமணமகரிஷி (26)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி 26
பகவான் ஸ்ரீ ரமணர் மக்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் அன்பு கொண்டிருந்தார் என்பதற்கான சில நிகழ்வுகளை இங்கே பதிவிடுகிறேன்.
விருபாட்சி குகையில் இருந்த காலத்தில். அக்குகையில் எதிரில் அமர்ந்து குரங்குகள் போடும் கூச்சலையும் சண்டைகளையும் பகவான் ரமணர் கவனிப்பது வழக்கம்.
குரங்குகளை தனித்தனியாக இருக்கும், சில சமயம் இரு குழுக்களாக இருந்துகொண்டு, திடீரென்று ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொள்ளும். குரங்குகள் சண்டையிட்டு ஓய்ந்து போய் பகவானிடம் வந்து நின்று அவரின் முகத்தை ஏற இறங்கப் பார்க்கும். பகவான் அவைகளிடம் புன்முறுவல் செய்வார். தவறு செய்வதை சுட்டிக்காட்டுவார். குரங்குகள் அவரது செய்கையை தெரிந்து கொண்டு மௌனமாகவும் இருக்கும்.
ஒரு முறை, ஒரு குரங்கு இன்னொரு குரங்கிடம் சண்டையிட்டு தாக்கியும் அழுத்தமாகவும் கடித்தது. அடிபட்ட குரங்கு மிகவும் துடித்தது. காயம்பட்ட குரங்கு விருபாட்சி குகை வாசலில் மயங்கி கிடந்தது.
பகவான் ஸ்ரீ ரமணர், அந்தக் காயம் பட்ட குரங்குக்கு மருந்து தடவினார், குரங்கின் காலில் பலமாக அடிபட்டதால் அந்தக் கால் முடம் ஆனது, பகவான் அதற்கு நொண்டி பையன் என்று பெயர் வைத்தார். மற்ற குரங்குகள் எல்லாம் வாசலிலேயே நிற்க இவர் மட்டும் விருபாட்ச குகையில் நுழைந்து பகவான் எதிரே சரிசமமாக உட்கார்ந்து சாப்பிடுவதுண்டு. இதனை மற்ற குரங்குகள் வியப்புடன் பார்க்கும் தனியாக சாப்பிடும் குரங்கான நொண்டி பையன் உணவைக் கீழே இரைக்கும். பகவான் அதன் பார்த்து உணவை கீழே இரைக்க கூடாது என்று சொன்ன பின்னும், இரைத்த உணவை முதலில் சாப்பிட்டு விட்டு மறுபடியும் தட்டில் இருப்பதை சாப்பிடும். பகவான் மடியில் கொஞ்சி விளையாடும். முதுகில் ஏறிக்கொள்ளும். மற்ற குரங்குகளுக்கு நடுவே நொண்டி பையனுக்கு பெரிய மதிப்பு இருந்தது.
கோடையில் ஒரு முறை கிரிவலம் செய்யும் போது அங்கிருந்த எல்லோருக்கும் தாகம் ஏற்பட்டது.அருகில் கிணறோ, குளமோ ஏதுமில்லை. தொலை தூரம் நடந்து போனால் நான் குடிக்க தண்ணீர் கிடைக்கும். அப்போது திடீரென்று ஒருங்கு குரங்கு கூட்டம் வந்தது. அங்கிருந்த நாவல் மரத்தில் ஏறி கிளைகளை உலுக்குகியது. கீழே நாவல் பழங்கள் விழுந்தன. ஒரு பழங்களைக் கூட அந்த குரங்குகள் எடுக்கவில்லை பகவானும் அன்பர்களும் அந்த நாவல் பழங்களை உண்டு தாகம் தீர்த்துக் கொண்டனர்.
குரங்கிடம் மட்டுமல்லாமல், நாயிடமும் அன்போடு
இருந்தவர் பகவான்.
ஸ்ரீரமணரிடம் அவைகள் அளப்பரிய பிரியம் காட்டின. அவரின் விழி அசைவுக்கும் விரல் அசைவுக்கும் கட்டுப்பட்டன.
விலங்குகளுக்கு உண்டான அசுத்தப் படுத்தும் அற்பமான குணம் அவைகளிடம் அறவே இல்லை. பகவானுக்கு சின்னகருப்பன் என்னும் நான் எப்போதும், விருபாட்சி குகை வெளியிலேயே இருக்கும்.
பகவான், மலைகளில் எங்கேயாவது நடைபயணம் போகும் போது சின்னக்கருப்பன் வாலாட்டிக் கொண்டே செல்லும்.
பகவான் அவர்கள் கிரிவலம் செல்லும் போது பல சமயம் சின்னக்கருப்பன் உடன் செல்வதும் உண்டு. மலை சுற்றும் பாதையில், மற்ற நாய்கள் சின்னக்கருப்பனை பார்த்து குரைக்கும் போது,பகவானுடன் அது அமைதியாகவே செல்லும்.
இந்தப் பிறவியில் இவைகள் விலங்காக இருக்கின்றன.நம்மைபோல் இவைகளுக்கும் ஆத்மா என்பது உண்டு. எல்லா உயிரையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற நியதிப்படி விலங்குகளிடமும் பகவான் அன்பை பொழிந்தார் என்பதற்கு சில உதாரணம் இவைகள்.
ஆஸ்ரமத்திற்கு வந்த முக்கிய பிரமுகர் விவரம் நாளைய பதிவில்.
Comments