ரமணமகரிஷி (27)
ரமணமகரிஷி (27)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி 27
1938 ல், பகவான் ஸ்ரீரமணரின் ஆசிரமத்திற்கு வந்த முக்கிய பிரமுகர்கள் டாக்டர்.ராஜேந்திர பிரசாத் (பின்னாளில் இந்தியக் குடியரசுத் தலைவர்) தும், ஜம்னாலால் பஜாஜூம் மகாத்மா காந்தியின் பிரதிநிதிகளாக வந்தார்கள். ஒரு வாரம் தங்கி இருந்து விடைபெறும் போது டாக்டர் ராஜேந்திரபிரசாத் பகவானிடம் கேட்டார்.
மகாத்மா காந்திக்கு தங்களிடமிருந்து ஏதேனும் செய்திகள் உள்ளதா என்றார். அதற்கு பகவான் "இதயங்கள் பேசிக் கொள்கிற போது, புதிதான செய்தி என்ன இருக்க முடியும் என்று சிரித்ததுடன் அங்கேயும் இங்கேயும் ஒரே சக்தி தான் இயங்குகிறது என்றாராம்.
ஐயாசாமி என்பவர் தென்னாப்பிரிக்காவில், ஐரோப்பியரின் கீழ் பணியாற்றி நன்றாக சம்பாதித்து, சம்பாதித்த பொருளுடன் நேரே பகவானிடம் வந்து சரணடைந்தார். பணம் இருப்பினும் யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார் யாசகம் கேட்கும் பொழுது பகவானுடைய அன்பர்கள் பாட்டு பாடிக்கொண்டே போவதுண்டு ஆனால் ஐயாசாமிக்கு பாட்டுக்கள் ஏதும் தெரியாது.
ஆசிரமம் இருக்கும் விருபாட்ச குகைக்கு கீழே மலையடிவாரத்தில் அருகில் ஒரு நடுத்தர பெண்மணியொருவர் வாழ்ந்து வந்தார். அந்த அம்மையார் பல்வேறு இலக்கிய நூல்களை கற்றுத் தெளிந்தவர். அந்த அம்மையாரிடம், அய்யாசாமி தனக்கு சிவபுராணக் கதைகள்மீது ஆர்வமாக உள்ளது என்றும், தாங்கள் எனக்கு அருள்கூர்ந்து சிவபுராணம் கதைகளை சொல்ல வேண்டுமாறு தெரிவித்தார்.
பிறகு அந்த அம்மையாரும். ஐயாசாமிக்கு கதைகளைச் சொன்னார்.
சிவபுராணம் தெரிந்துகொண்ட அவர், சில பாடல்களையும் மனப்பாடம் செய்து ஆசிரமத்தில் உள்ள அன்பரிடம் பாடிக் காண்பித்தார்.
அதன்பிறகு, ஐயா சாமி ஆசிரமத்துக்கு போகும் போது சிவ புராண பாடல்களைப் பாடி மிகவும் மகிழ்ந்தார்.
அய்யாசாமி எதற்கு யாசகத்திற்கு போக வேண்டும் அவரிடம் இல்லாத பொருளா? என்று பகவானே வேடிக்கையாக ஒரு முறை சொன்னார்.
இது ஒருவகையான பாராட்டு, கையில் காசு இருந்தாலும் யாசகம் செய்து சாப்பிடும் மனப்பக்குவம் அவருக்கு வந்து விட்டது. நீ சரியான பாதையில்தான்
போகிறார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது.
அதன் பிறகு அய்யாசாமி சும்மாயில்லை, மரக்கிளைகளை அளவாய் உடைத்து கைத்தடிகளையும் தேங்காய் சிரட்டையை உலர வைத்து தேய்த்துக் எண்ணங்களையும் செய்வதில் வல்லவரானர் அய்யாசாமி கவனத்துடன் கிண்ணங்களை பளபளவெனச் செய்து சாதுக்களுக்கு கொடுப்பதையும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அவர் செய்த செயல் மகிழ்வைத் தந்தது.எவ்வாறு ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆசிரமத்தில் தங்கி இருந்தார்.
ஐயாசாமி அவர்கள் ஆசிரமத்தில் தங்யிருந்த காலத்தில் பல்வேறு
பணிகளையும், தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்த வந்த சம்பாதித்த தொகையினையும் வந்த பொருளில் ஒரு பங்கையும் அந்த ஆசிரமத்திற்கு அளித்தார்
ஒருசமயம் ஆஸ்ரமத்தில் உணவுக் கூடத்தில் எல்லோருக்கும் உணவு படைக்கப்பட்டது ஆனால் எல்லோரும் காப்பி வழங்க முடியாத நிலை
ஒரு சமயம் ஆசிரம உணவுக் கூடத்தில் எல்லோருக்கும் உணவு படைக்கப்பட்டது. காப்பி வழங்க முடியாத நிலை. பகவானின் பார்வைக் கெட்டாத தூரத்தில் இறந்தவர்களுக்கு காபிக்கு பதிலாக தண்ணீர் வழங்கப்பட்டது. பின்னர் பகவானும் தண்ணீர் கொடுக்கும் படி சொல்லி விட்டார்.
பகவான் ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில், சிலருக்கு காபி கொடுக்கப்படவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
பகவான் ஸ்ரீரமணர் மதம் தாண்டிய நேசம் கொண்டவராய் திகழ்ந்தவர்.இதன் விவரம் நாளைய பதிவில்.
Comments