ரமணமகரிஷி (28)

    ரமணமகரிஷி (28)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 28

பகவான் ஸ்ரீ ரமணரி

ன் இன்னொரு தொண்டர் மஸ்தான் என்னும் இஸ்லாமியர்.  வந்தவாசிக்கு அருகிலுள்ள தேசூரைச்  சேர்ந்தவர்.  முற்பிறவி புண்ணியத்தால் இவருக்கு அடிக்கடி சமாதி நிலையில் ஆழ்ந்து விடும் பாக்கியம் இருந்தது.

 பகவானின் இன்னொரு தொண்டரான அகிலாண்டம் அம்மையார், இவரின் நிலை தெரிந்து திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார்.  மஸ்தானை  முதல் முதலாகப் பார்த்தபோது பகவான் அசையாது சிலை போல் இருந்தார். அவரது கண்கள் கருணை மழை பொழிந்தன.  கண  நேரம் எதிரே நின்ற மஸ்தானின்  மனதில் மாற்றம் உண்டாயிற்று.சுமார் 8 மணி நேரம் நின்ற நிலையிலேயே அசைவற்று இருந்தார். பகவானிடம் வருகின்ற அன்பர்களில் சிலரே உரிய பக்குவ நிலையில் இருப்பார்கள். முதல் சந்திப்பிலேயே மஸ்தானின்  நிலையினைக் கண்ட பகவானுக்கு, அவர் மீது ஒரு வித ஈர்ப்பு வந்தது.

 விருபாட்சி குகைக்கு வந்து குகை  நெருங்கும்போதே ஆழ் நிலைக்கு போய்விடுவார்  மஸ் தான். தன்னை பற்றி பேசும்  அவர்களுக்கு நடுவே பிரபலமாக வேண்டும் என்றோ ஆசையோ  இல்லாதிருப்பார்.

 எந்த நிகழ்ச்சியிலும் பின்னணியிலிருந்து இருந்து உதவி செய்து கொண்டிருப்பார். தேசூர் அகிலாண்டம் அம்மையார் பகவானுக்கு உணவளிக்க மளிகைப் பொருட்கள், பாத்திரங்கள் போன்றவற்றை கொண்டு வர அதை தலையில் சுமந்து வருவதை மஸ்தான் பெரும் பேறாகக் கருதினார்.


 மஸ்தான்  தேசூரில்  ரமண மடாலயம் ஏற்படுத்தினார்.  இது தான் பகவான் பெயரில் உலகில் தோன்றிய மையம்.  ஆஹா ரமணா மடாலயம் வந்து விட்டது இனி என் பேரும் புகழும் பிரபலமாக போகிறது என்று பகவான் வேடிக்கையாகக் கூறினார் 

 தேசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலரும் பகவானைப் பற்றி அறிய மஸ்தானிடம் வந்து பேசுவார்கள்.

 பகவான் ஸ்ரீ ரமணரின்  நற்பண்புகளை,  அவ்வூர் மக்கள் கேட்டு ஆனந்தம் அடைந்தனர்.
 ஒரு சமயம் தேசூர்  மக்கள் பெரும்பாலோர் திருவண்ணாமலை ரமணரைக்கண்டு மகிழ்ந்தனர். இதற்கெல்லாம் காரணம் மஸ்தான் என்பதையும் பகவானும் உணர்ந்தார்.


 தலை மழித்து,  துறவு உடை அணிந்து அமைதியே உருவான 
மஸ்தான், தேசூர்  என்னும் ஊருக்கு அருகில் உள்ள மடம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம், ரமணரின் செயல்பாட்டினை அறிய வைத்தார்.

 ஒரு கட்டத்தில் மஸ்தான்  அவர்கள் மடம் கிராமத்திலேயே தங்கி விட்டார்.

மஸ்தான் அவர்களின் எண்ணங்கள் முழுவதிலும் பகவான் ஸ்ரீ ரமணரின் நினைவே.

 அந்த ஊர் மக்களிடம். நல்லதொரு மதிப்பையும் வைத்திருந்தார். ஊர் கிராம மக்களால் பெரிதும் கவரப்பட்டார். மதங்களைக் கடந்து அவ்வூர் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

மஸ்தானுக்கு  திடீரென்று  உடல்நிலை குன்றியது.1938 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி நன்னாளில் தேகம் நீத்தார். இவரது மறைவு பகவானை சொல்லப்பட்டது.

 குஞ்சு சாமியை பகவான் ஸ்ரீ ரமணர் அழைத்து மடம் கிராமத்திற்குச் சென்று,  அங்கேயே  மஸ்தானுக்கு இறுதியாக செய்யவேண்டிய காரியங்களை  ரமணரே முன்னின்று செய்தார்.

 பகவானிடம் முழுமையாக சரண் அடைந்தவர் மஸ்தான்.

 மதங்களைத் தாண்டி நேசம் கொண்டவர் ஸ்ரீரமணர் என்பது மஸ்தானின் வாழ்வின்  மூலம் தெரிய வருகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,