ரமணமகரிஷி (29)

 ரமணமகரிஷி (29)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  


பகுதி 29



1922 ஆம் ஆண்டில் மலையின் தென்புறச்  சரிவில் கூரையிட்ட ஒரு   கட்டிடந்தான் தான் இருந்தது. பகவான் ஒரு சமயம் தனது தாயாரின் சமாதிப் பக்கம்  நாள் முழுவதும் அமர்ந்துவிட, பக்தர்கள்  அதை ஒட்டிய பகுதியில் ஆசிரமத்தை விரிவு செய்ய விழைந்தனர். முறையான ஆசிரமத்தை உருவாக்கும் முயற்சியில் நன்கொடைகள் வந்து குவிந்தன. பகவான் அமர்கின்ற தியான கூடம், உணவுக் கூடம் சமையல்கட்டு, விருந்தினர் விடுதி, அலுவலகம் புத்தக விற்பனை நிலையம், அஞ்சலகம், ஆசிரமத்தில் குறுகிய காலம் தங்குவதற்கான அறை,நீண்ட நாள் தங்குவதற்கு வீடுகள் என பலவும் உருவாயின.


 ஆசிரமத்தில் கிழக்கே பெங்களூர் செல்கிற சாலை  கிழக்கு மேற்காய் அமைந்துள்ளது.


 சாலையிலிருந்து காண்பவர் கண்ணில்  "ஸ்ரீரமணஸ்ரமம் " பொன்னெழுத்துக்களில் மின்னுவதை அறிவோம். முன்புறத்தில் வாவென்றழைக்கும் தென்னை மரங்கள், தென்னங்கீற்றுகள்  உள்ளிருக்கும் கட்டடங்களுக்கு திரையிட்டிருக்கும்.  கட்டடங்களின் பின்னணியில் கம்பீரமாக உள்ள மலை.


 கட்டடங்களைத்  திட்டமாகவும், பணத்தை சரியான அளவில் கையாளவும், கட்டிடங்களை பராமரிக்கவும்  ஒரு நிர்வாகம் தேவை அல்லவா.


 அந்த நிர்வாகத்தின் அதிகாரம் பெற்ற தலைவராகயிருந்தார்  நிரஞ்சனானந்தர், சுவாமியின இளைய சகோதரர்.ஆசிரம வாழ்க்கைக்கான விதிமுறைகள் வரையறுக்கப்பட்டது அவற்றில் சில செயல்பாடுகள் பக்தர்களுக்கு சங்கடமாக இருந்தது உண்மை.  விதிமுறைகளை எதிர்க்க  முனைந்த வர்களை பகவான் கட்டுப்படுத்தினார். தாமே விதிகளுக்கு உட்பட்டு நடப்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டினார்.


 தங்களுடைய வாழ்வின் அமைதிக்கு வழி தேடி வருகிறார்கள். இங்கே வந்த பிறகு அதை மறந்து விடுகிறார்கள் ஆசிரம அரசியலில் சிக்கி கொள்கிறார்கள். அவர்கள் எதற்காக வந்தார்கள் என்றே தெரியவில்லை. தங்களை சீரமைத்துக் கொள்ள வருகிறார்களா இல்லை ஆசிரமத்தை சீரமைக்கவா என்று பகவான் சில  நேரத்தில், மாறுபட்ட செயல்பாடு அறிந்ததன் காரணமாய் வருத்தப்பட்டது உண்டு.


 அவர் எப்போதும் எதற்கும்  எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் அநியாயங்களை மற்றவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் கவன ஈர்ப்பு செய்வார்.


 பகவான் தன்னுடைய, செயல்பாட்டிலேயே பிறரை ஆச்சரியப்படுத்தும் வகையில் தன்னை ஒரு சாதாரணமான நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி, பிறருக்கு தெரிய வைப்பதில் எப்போதும் தயங்குவதில்லை.


 ஒரு முறை, எல்லோருக்கும் மதிய உணவு தயார் செய்யப்பட்டது. அவ்வமயம் உணவு பரிமாறுவதற்கு முன்,  அன்றைக்கு ஓரளவு கூட்டம் இருந்தது.


 கூட்டத்தை கட்டுப்படுத்த,  எல்லோருக்கும் சரியான வகையில் உணவு பரிமாற, ஒரு அன்பர் ஒலிபெருக்கியில், வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாம் முதல் பந்தியிலும்,


 வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் இரண்டாவது பந்தியிலும்,


உள்ளூர் பிரமுகர்கள் மூன்றாவது பந்தியிலும்,


 மீதமுள்ளவர்கள் நான்காவது பந்தியிலுமாய் அமர்ந்து உட்கொள்ளுமாறு பணித்தார்.


 முதல் பந்தியில் உணவு பரிமாறப்பட்டது, பகவான் ஸ்ரீரமணர் அவரது இருப்பிடத்தில் இல்லை.   அவர்களது சீடர்கள் தேட ஆரம்பித்தனர்.


 இரண்டாவது பந்தியும் முடிந்தது.  பகவான் எங்கு சென்றார் என்று  ஆசிரமத்தில் இருந்த சீடர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர்.


 மூன்றாவது பந்தியம் முடிந்தது.


 நான்காவது பந்தியில் உணவு பரிமாறும் பொழுது. அவரும் அமர்ந்திருந்தார். அவர்களது சீடர்களுக்கு, பகவானைப் பார்த்து விட்டோம் என்ற ஒரு மகிழ்வு இருந்தாலும்,


 நான்காவது பந்தியில் ஏன் இவர் சாப்பிட்டார்  என்ற ஐயம்  பிறரை வாட்டி வதைத்தது.


 ஏன் இவ்வாறு செய்தீர்கள் என ஒரு சீடர் கேட்டார். அப்போது ஒலிபெருக்கியில் உணவு பரிமாற ஆரம்பிப்பதற்கு முன் யார் யார் எந்த  பந்தியில் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்று சொன்னார்கள்  அல்லவா.


 முதல் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட நான் என்ன வெளி நாட்டுக்காரனா?


 இரண்டாவது பந்தியில் உட்கார்ந்து சாப்பிட நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவனா?


 மூன்றாவது பந்தியில் உட்கார்ந்து சாப்பிட நான் என்ன உள்ளூர் முக்கியப் பிரமுகரா?


 இம்மூன்றிலும் 

 எனக்கு வாய்ப்பில்லை. நான் மிகச் சாதாரணமானவன்  எனக்கு தகுதி   உண்டு என்றால் நான்காவது பந்தில் சாப்பிடுவது தானே நியாயமும், முறையும் என்றார்.


 இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்கள், பகவான் ஸ்ரீ ராமரின் பேச்சினால் வாயடைத்துப் போனார்கள்.


 பகவான் ஸ்ரீரமணர் தன்னை எப்போதுமே பெரிய ஆளாக காட்டுவதில்லை என்பதற்கு இந்த செயல் ஒரு உதாரணம்


.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,