விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள ஸ்மித்

 ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள ஸ்மித்



பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளார்.


பாகிஸ்தானுக்கு எதிராக 238 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். 


919 புள்ளிகளுடன் அதிகப் புள்ளிகளை எடுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் 131, 81 ரன்கள் எடுத்த ஸ்மித், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளார். 


சிட்னி டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதையும் ஸ்மித் வென்றார்.


சிட்னி டெஸ்டில் இரு அரை சதங்கள் எடுத்த புஜாரா, 10-வது இடத்திலிருந்து 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 


ரிஷப் பந்த் 26-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


பந்துவீச்சாளரில் அஸ்வின் 9-வது இடமும் பும்ரா 10-வது இடமும் பெற்றுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி