தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை

 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்புரம், நாகை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, வேலூர், ராணிபேட்டை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைபெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை மழை பெய்தது. கிண்டி ,வடபழனி, விமானநிலையம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது. இதேபோல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ,மாம்பலம் , கோயம்பேடு ,ஆவடி ,பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,