ரமணமகரிஷி (31)

 ரமணமகரிஷி (31)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  


பகுதி 31


குஞ்சு சுவாமிக்கு,   எலப்புள்ளி சாமியார் சொன்ன பிறகு,பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான எண்ணம் மேலும்  அதிகரித்தது.  யாரிடமும்  சொல்லாது வீட்டை விட்டு வெளியேறினார். அவரது ஆன்மீக நண்பர் ஏற்கனவே திருவண்ணாமலையில் ரமணரிடம் சேர்ந்து விட்டார் என்ற செய்தி கிடைத்ததால் அவருக்கு அங்கு  போனால் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.


 பயணங்களில் பல தடைகள் இருந்தும் குஞ்சு சுவாமி திருவண்ணாமலை அடைந்தார்.  சிலர் வழிகாட்ட மலையேறினார். மிக உன்னதமான ஆத்மாவை தரிசிக்கப் போகிறோம் என்கிற ஆவல், பரபரப்பு தொற்றிக்கொண்டது. பகவானை பார்த்ததும் என்ன செய்ய வேண்டும் என பல முறை யோசித்து வைத்துக் கொண்டார் மலையேறி அங்கு பகவானை கண்டதும் மெய் சிலிர்த்து நின்றார்.விழுந்து வணங்கினார் அவரது  ஆன்மீக நண்பர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் குஞ்சு சுவாமியை  வரவேற்றார்.  பகவானிடம் அறிமுகப்படுத்தினார் பகவான் புன்முறுவல் பூத்தார்.


எலப்புள்ளி சாமியிடம் கேட்ட கேள்விக்கு பதில் இப்போது கிடைத்தது.


 இறைவனைத் தன்னுள் கண்ட பகவானை,  தாம் கண்டது   பெறற்கரிய பேறாக நினைத்துக்கொண்ட குஞ்சு சுவாமியின் ஆனந்தத்திற்கு அளவில்லை.


 தன் நண்பர் ராமகிருஷ்ணன் உடன் ஆசிரமத்திலேயே தங்கினார். பகவானை அருகிலேயே பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.  பகவானின் தோற்றம், செய்யும் செயல் எல்லாவற்றிலும்  எளிமை மட்டும் இருப்பதை அருகிலிருந்து கண்டு ஆச்சரியப்பட்டார்.


 பகவான் எப்போதுமே தன்னை கரைகண்ட ஞானியாகவும், கரைகடந்த  மகானாகவும் எண்ணிக் கொண்டதில்லை. ஒரு சமயம் பக்தர்களில் ஒருவர் அண்ணாமலை அடிவாரத்தில் உள்ள வனத்துக்குச் சென்று வரலாமே என்ற போது பகவான் அதற்கு ஆர்வமுடன் சம்மதித்தார். திருவண்ணாமலையில் தம் கால்படாத இடமே இல்லை என்று குதூகலத்துடன் சொன்னார். தம்மிடம் குழந்தைகள் கொண்டு வந்து  காட்டும் புத்தகங்கள்  அல்லது பொம்மைகளை  வாங்கிப்  பார்த்து மகிழ்ச்சியை  வெளிப்படுத்துவார். அதனால் குழந்தைகளும் மகிழ்ச்சி அடையும் என்பதையும் அவர் அறிவார்.


 பக்குவம் இல்லாத மனிதர்களை இறைவனை விக்ரக வடிவில் காண்கிறார்கள்.


 பல நிலைகளையும் கடந்து ஞானியரோ   தமது உள்ளத்தில் காண்கிறார்கள். பகவானை போன்றவர்கள் மரம், செடி,கொடிகளும் மரங்களும் பறவைகளும் கூட அந்த இறைவனை கண்டு மகிழ்கிறார்கள்.



 பகவானுக்கு எப்போதுமே அண்ணாமலையாரின் சிந்தனைதான் அவர் எதைத் தேடினாரோ  அது அவருக்கு கிடைத்தது. அனைவரும் தம்மை போல அதனை அடைய வேண்டும் என்று எண்ணியே அநேக நூல்களை அவர் இயற்றி அருளினார். அத்துடன் நிற்கவில்லை.


 தமது சிறு செயல்களிலும் சொற்களிலும் அண்ணாமலையார் மீது வைத்த அன்பை வெளிப்படுத்தி வந்தார். எப்பொழுது எழுதத் தொடங்கினாலும், எழுதுகோலை சோதிப்பதற்கு அருணாச்சலம் என்றே எழுதுவார்.




 இயற்கை வினோதங்களை மிக உன்னிப்பாக ஆராய்ந்தவர் அவர்.  புழு எப்படி குளவியாகிறது. பறவை எப்படி கூடு கட்டுகிறது எறும்புகள் எப்படி தமக்கென சில நியதிகளை வகுத்துக்கொண்டு வாழ்வது என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி. அவற்றைத் தாம்  விளக்கும் விதத்தில் கேட்பவர்களை வியப்பின் எல்லைக்கே கொண்டு போய்விடுவார்.



 குஞ்சு சுவாமிகளுக்கு பகவான் ஸ்ரீ ரமணரின் செயல்களெல்லாம் வினோதமாக இருந்தது.


 பகவான் ஞானியர்கள் நடுவே மகா ஞானியாகவும் பாமரர்கள் நடுவே  அவர்களில் ஒருவராகவும்  மாறிவிடுவார்.


 பகவானின் மௌனம்,  மக்களிடம் கொண்ட உன்னத உறவு, விலங்குகள் மீது வைத்துள்ள பாசம், பதட்டப்படாமல் செய்யும் செயல்கள், கனிவு கலந்த பார்வை இவற்றையெல்லாம் நேரடியாக கண்டதிலிருந்து தன் வாழ்நாளில் பெற்ற பேரின்பமாக கருதினார் குஞ்சு சுவாமிகள்.

 சில நாட்கள் கழித்து குஞ்சு சுவாமிகள்,  ஒரு முறை கேரளாவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம்,  தன் நிலைமையை எடுத்துக்கூறி, நான் அடையும் பேரின்பம் திருவண்ணாமலையில் மட்டுமே உள்ளது என்று சொல்லிவிட்டு மீண்டும் பகவான் ஸ்ரீரமணரின் ஆஸ்ரமத்திற்கு வந்துவிட்டார்.


 பகவான் ஸ்ரீரமணரிடம்  பல காலம் உடனிருக்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.


 பகவான் ஸ்ரீ ரமணரின் பால்ய சிநேகிதர் குறித்தான விவரம் நாளைய பதிவில்



.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி