ரமணமகரிஷி (34)
ரமணமகரிஷி (34)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி 34
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்:34
1946 ல் பகவான் திருவண்ணாமலை வந்து 50 ஆண்டுகள் நிறைவையொட்டி பெரிய கொண்டாட்டம் ஏற்பாடானது. வெகு தொலைவில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். பொன் விழா மலரும் வெளியிடப்பட்டது.
அன்றைய நாளில் திருவிழாக்கோலம் போல காட்சியளிக்கும் ரமணாஸ்ரமம்.
இது ஒரு ஆடம்பரம் என்று பகவான் அவர்கள் நினைத்தாலும் அவர்களின் சீடர்கள் மனமுவந்து அன்பின் வெளிப்பாட்டால் செய்கின்ற செயல்கள் என்பதால் அமைதி காத்தார்.
பக்தர்களின் அன்புத்தொல்லையை தவிர்க்க பகவானுக்கு முன்பாக ஒன்றரை அடி உயரத்தில் ஒரு தடுப்பு வேலை ( நகர்த்தக் கூடியது) போடப்பட்டிருக்கும். பகவானை மற்றவர்கள் தீண்டாமல் இருக்க ஆஸ்ரம நிர்வாகம் செய்த ஏற்பாடு அது. ஒரு சமயம் ஒரு பக்தர் பகவானுக்கு முன்பாக தேங்காய் உடைத்து,அவருடைய தலை மீது பால் ஊற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் அபிஷேகம் செய்து விட்டார். அப்புறம் தான் ஆசிரம நிர்வாகிகள் பகவானை சற்றுத் தள்ளியே இருக்கை வைக்க வேண்டும் என்று தீர்மானித்த போது, இருக்கை தள்ளி போட்ட பிறகு பகவானுக்கு எந்த தொந்தரவும் இல்லை.
பகவான் முன்னிலையில் அமர்ந்திருக்கும் தம்மை ஒரு பெரிய குடும்பத்தின் அங்கமாகவே பக்தர்கள் உணர்வார்கள். சிலர் தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே மத சம்பந்தமாக ஏதாவது கேட்பார்கள். தமக்காகவோ,தன் நண்பர்களுக்காவோ பகவானிடம் கோரிக்கை வைப்பார்கள். யாராவது ஒருவர் தமது சொந்த விவகாரமாக ஆலோசனை பெறவேண்டி பகவானின் இருக்கை அருகே சென்று தாழ்ந்த குரலில் பேசுவார் அல்லது காகிதத்தில் எழுதிக் கொடுப்பார். பகவான் பதில் கிடைத்தாலும் இல்லை அவரிடம் தகவல் தெரிவித்துவிட்டாலும் எல்லாம் நல்லபடி நடக்கும் என்ற நம்பிக்கை.
பண்டிதர் கூட்டம் ஒன்று அவரது இருக்கைக்குப் பக்கமாய் அமரும். சமஸ்கிருத நூல் எதையேனும் மொழிபெயர்த்துக் கூறும்.அவ்வப்போது அதில் காணும் ஏதாவது ஒரு விஷயத்தை அவர் விவரிக்க கேட்கும். சில சமயம் சிறுவன் கூட தான் கற்ற சிறுகதையையும் பகவானிடம் சொல்லிக் கொண்டிருப்பான். பகவானும் அதை ஆர்வத்துடன் அதனைக் கேட்டபடி இருப்பார்.
பகவான் தங்களிடமே நெருங்கி இருப்பதாக ஒவ்வொருவரும் எண்ணிக் கொள்கிறார்கள் அந்த சிறுவன் உட்பட.
பகவானின் பார்வையில் எல்லாமே திறந்த புத்தகங்கள் தாம். அவர் தமது சீடர்களை ஊடுருவலாக பார்ப்பார் தியானத்தில் யார் யார் எந்த அளவுக்கு முன்னேறி இருப்பார்கள் என்பதை அளவெடுத்து விடுவார்.
கூடத்தில் இருக்கும் பக்தர்கள் தமக்காக எழுந்து நிற்பதை அவர் விரும்பமாட்டார் நான் வரும்போது எழுந்து நிற்பதாயின் இங்கு வருகிற ஒவ்வொருவருக்காகவும் எழுப்பி நிற்க வேண்டும் என்பார்.
தம் வாழ்நாளில் எளிமை என்னும் கொள்கையே கடைபிடித்து, அருட்கடவுள் அண்ணாமலையார்நினைவிலே இருப்பவர் பகவான் ஸ்ரீரமணர் அல்லவா.
உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருப்பது பகவான் ஸ்ரீ ரமணரின் மீதான ஈர்ப்பு தானே.
பகவான் ஒரு நடமாடும் தெய்வம் என்று உரைத்த ஒரு பக்தையின் விவரம் நாளைய பதிவில்.
Comments