ரமணமகரிஷி (35)

 ரமணமகரிஷி (35)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  


பகுதி 35


பகவான் ஒரு நடமாடும் தெய்வம். தம்முடைய பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார்" திருமதி தலேர் கான்  என்ற பக்தை இவ்வாறு குறிப்பிட்டது  உண்டு.  காரணம் பகவான் ஸ்ரீ ரமணரின் ஆற்றலை உணர்ந்தவர் அவர்.


 தன்னை ஏதுமற்ற நிலைக்கு கொண்டு வந்து, எல்லாமாக இருக்கின்ற பரம்பொருளின் நினைவிலே  இம்மண்ணில் வாழ்வதால்  மிகவும் உயர்ந்தவராக கருதப்படுகிறார் இதனால் எல்லோர் மனதிலும் அவர் நிலை கொள்கிறார் என்பது திருமதி தலேர் கான் என்பவரின் எண்ணம். ஆஸ்ரமத்தில் பரோடா மகாராணி கொடுத்த வெள்ளை மயில் ஒன்று இருந்தது. அது ஆசிரமம் முழுவதும் சுதந்திரமாக உலாவரும்.

பகவான் அருகே வந்து அவரை ஆவலாக பார்க்கும்.


 பகவானும் அதற்கு பொரி,கடலை போடச்சொல்லி ஆர்வமாக பார்ப்பார்.


 ஆசிரமத்துக்கு வந்தவர்கள் யாரோ தரையில் வெள்ளை மயில் போல அழகாக கோலம் வரைந்து இருந்தார்கள். நிஜ  வெள்ளை மயில் பொரிகடலை கொத்துவதை  விட்டுவிட்டு அந்த முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அது சலனமில்லாமல் கோலம் பார்த்ததை  கண்ட பகவான் யாரோ போட்டிக்கு   வந்து விட்டார்கள் என்று பார்க்கிறாயாயென  சிரித்துக் கொண்டே கேட்டார்.


  உடனே மயில் பொரி,கடலை கொத்தி தின்ன ஆரம்பித்தது. அந்த நிஜ மயிலே திகைத்துப் போகும் அளவுக்கு கோலமயில் தத்ரூபமாக இருந்தது.


 பலரும் கோலம் போட்டவரை  பாராட்டினார்கள். இந்தக் கோலத்தைப் பார்த்த பகவான் இந்த மாதிரி கலைஞர்களுக்கு எல்லாம் ஆத்ம விந்தை  மிக சுலபமாக கை வரும். ஏனெனில் அவர்கள் புத்தி ஓட்டம் அத்தனை சூட்சும மாய்  இருக்கிறது. இன்று இந்த மயில் பிரமிக்கும் அளவுக்கு போட்ட கோலத்தை நாளைக்கு இன்னொரு மயில் தோகை விரித்து ஆடும் அளவிற்க்கு போட வேண்டும் என்றும் தோன்றும். ஒருமுறை படித்த இளைஞன் ஸ்ரீ ரமணரின் எதிரே வந்து அமர்ந்தான். கேள்வி கேட்க விரும்புவது போல ஆவல் காட்டினான்.  கூட்டத்தில் மௌனம் கலைந்து கேள்வி எழுப்பினான்.


 சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தரை  தொட்ட மாத்திரத்தில் சமாதியில் இருக்க வைத்தது போல், பகவானும்  சமாதியில் இருக்க வைக்க முடியுமா என்று கேட்டான்.


 பகவான் பதில் ஏதும் கூறவில்லை மௌனமாய் இருந்தார்.

 இளைஞனோ  பதில் பெறும் எதிர்ப் பார்ப்போடு இருந்தான்.


சிறிது நேரம் பொறுத்து  பகவான் அந்த இளைஞரைப் பார்த்து,கேட்டது விவேகானந்தரோ என்றார்.


அந்த இளைஞனுக்கு பதில் சொல்ல  முடியவில்லை. ஆர்வம் இழந்த அவன்  அந்த இடம் விட்டு நகர்ந்தான்.


 யாருக்கும் தன் நிலை பற்றிய  கவலையே இல்லை. தான் எல்லாம் உணர்ந்த பூரணன்  என்ற நினைப்பு. தன்னைப்பற்றி தெரிந்து கொள்ளாததே பிறரை ஆராய தொடங்குதலின்  காரணம்.


 இந்த ஆராய்ச்சிதான் சகல விபரீதங்களுக்கு காரணம் ஆகிறது.


 என்னடா இது சோபாவில் அமர்க்களமாக உட்கார்ந்திருக்கிறான்  இவரைச் சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே. இவர் பெருமை என்ன?


 நான் சொல்வதை இவர் காட்டுவாரா பார்ப்போம் என்று என்பது அந்த இளைஞனின் நோக்கம்.


 என்னை ராமகிருஷ்ணபரமஹம்சராக  என்று  சோதிக்க விரும்பினானே தவிர நான் விவேகானந்தன் என்று தெளிய முற்படவில்லை. தனக்கு எல்லா தகுதியும்  இருப்பதாக நினைப்பு.


தான் யார் என்று  விசாரம் இருந்தால் இந்த  கேள்வி வந்திருக்காது. ஒரே ஒரு விவேகானந்தரை தான்  ராமகிருஷ்ண பரமஹம்சர்  அப்படி சமாதியில் ஆழ்த்தினார் என்பது புரியவும் இல்லை.


 மனம் பிறரை ஆராய்வதை விட்டு  தன்னை அறிந்தால் எந்த கேள்வியும் எழாது . எல்லா கேள்விகளுக்கும் சமாதானம் தன்னுள்ளே இருப்பது தெரிய வரும் என்றார். பகவான் ஸ்ரீ ரமணருக்கு, தனது இறுதிக்காலம் வரையில் உணவு அளித்தவர்  முதலியார்பாட்டி.  இவரை பற்றி நாளைய பதிவில்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,