ரமணமகரிஷி (36)

 ரமணமகரிஷி (36)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  


பகுதி 36

 பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்:36 முதலியார் பாட்டி என்பவர்  கிராமத்தில் தனது மகன்,  மருமகளோடு வாழ்ந்து கொண்டு அங்கிருந்த சாது  ஒருவருக்கு பணிவிடை செய்து வந்தார்.  சாது இறக்கும் தருவாயில் உங்களுக்கு பிறகு நாங்கள் என்ன செய்வது என்று அவரிடமே வினவினார் முதலியார் பாட்டி. அவரோ அருணாசலத்திற்கு செல்லுங்கள் அங்கு ஒரு ஞானி இருக்கிறார். அவருக்குத் தொண்டு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயனை  நீங்கள் பெறுவீர்கள் என கூறினார். பகவானிடம் வரும் போதே அவர் முதியவராகத் தான் இருந்தார்.


முதல் முதலில் விருபாட்ச  குகையில் பகவானை  பார்த்தார். அக்கணமே பாட்டிக்கு ஆனந்தமளிக்கும் ஆன்மீக  அனுபவம் ஏற்பட்டது. அந்த நொடியிலே, வாழ்நாள் முழுவதும் பகவானுக்கு  உணவளிக்க உறுதி பூண்டாள்.


 இயன்ற போதெல்லாம் பணமோ,மளிகை சாமான்களோ எடுத்து வருவார். பகவானுக்கு தொண்டு புரிவதற்காக தன் சொத்துக்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுவிட்டார்.


 கையில் சொத்து எதுவும் இல்லாத போது சந்தையிலே எள்ளை வாங்கி எண்ணெயாக ஆட்டிச் சந்தையில் விற்று வந்த சொற்பமான லாபத்தையும் பகவானுக்கு சமைப்பதற்காக தேவையான மளிகை சாமான்களை வாங்கவே செலவு செய்தார்.


 பகவான் ஒரு முறை "எனக்கு முதலியார்  பாட்டியிடமும், இராமநாத பிரம்மச்சாரியிடம் தான்  பயம் என்று கூறினார். அது என்ன பயம். உண்மையான பயம் அன்று. அவர்களின் சுயநலமற்ற சேவைக்கும் பூரண சரணாகதிக்கும் எல்லையில்லா பக்திக்கு அடிமையானார்.


 மலையிலிருந்து கீழே ரமணாஸ்மரத்திற்கு பகவான்  வந்த பின்னரும் கூட அவருக்கு தன் கைகளாலே உணவு பரிமாற வேண்டும் என கொள்கையோடு வாழ்ந்தவர் முதலியார்பாட்டி.


பாட்டிக்கு கண் பார்வை மங்கிப் போனது, ஒரு முறை பகவானுக்கு  பரிமாறும் போது படைக்கப்பட்ட இலையை காலால் தெரியாது மிதித்து விட்டார். பகவானின் தொண்டர் ஒருவர் உங்களுக்குத்தான் கண்பார்வை குறைந்து விட்டதே  நீங்க ஏன் எங்கே வருகிறீர்கள் என்று கேட்டபோது, நான் பகவானைப்  பார்க்க முடியவில்லை என்றாலும் என்னை அவர் பார்க்கிறார். பகவானின் அருட்பார்வை என் மேல் விழுகிறது அது போதும் என சூடாக பதிலளித்தார்.


 பகவான்                       ஸ்ரீ ரமணருக்கு முதல் முதலில் உடல் நலம்  சரியில்லாதபோது  பதறிப்போனார் பாட்டி.பகவான் உடல் நலம் விசாரிக்க,  நான் நன்றாக உள்ளேன் என்று பகவான் கூறினார்.


 பாட்டி திருப்தி அடையவில்லை அறையின் வாசலில் வந்து நின்று  கொண்டிருந்தார் பகவான் அறையிலிருந்து வெளியே வந்தபோது, பகவானே கொஞ்சம் நில்லுங்கள் எனக் கூறி அவரை  தலையிலிருந்து கால் வரை தமது  கைகளால் தடவிப் பார்த்தார்.


 முதலியார் பாட்டிக்கு மட்டும் அவ்வாறு செய்ய அனுமதித்தார். வேறு எவரும் அவரைத் தொட கூட அனுமதியில்லை. இதயம் குளிர மனக்கண்ணால் தொட்டுப் பார்த்த பின் பகவான் அவரிடம் இப்போது திருப்தி தானே என்று கேட்டார். தெய்வத்தை தொடுவதற்கு பேறு பெற்றேன் என்றார் முதலியார்பாட்டி. இந்த  முதலியார் பாட்டி  இரமணாஸ்மர  த்திற்கு அருகில் உள்ள ரமணா நகர் பகுதியில் கடைசி நாட்களை கழித்தார். 1949  ல் முதலியார் பாட்டிற்கு மிகவும் வயதாகி விட்டது.  தனது வாழ்நாளில் கடைசி நாள் வரை பகவானுக்கு சமையல் செய்து அனுப்பினார். தான் அனுப்பிய உணவு பகவான் உட்கொண்டார் என தகவல்  தெரிவிக்கப்பட்டது.   விரும்பிய செய்தி வந்தவுடன்  பேரானந்தத்தோடு  உயிர் நீத்தார் முதலியார்  பாட்டி.


 சேஷாத்திரி சுவாமிகள், அன்னை அழகம்மாள் போன்றவர்கள்  முக்தி  அடைந்த போது செய்தது போல, முதலியார் பாட்டிக்கும்  உரிய  ஏற்பாடுகளை செய்திட  குஞ்சு சுவாமிக்கு  பணித்தார் பகவான் பகவான் ஸ்ரீ ரமணர்.


 இசை மீது ஆர்வம் கொண்டு பகவான் ஸ்ரீ ரமணர் மீது,  கீர்த்தனைகளை பாடியவர் " மணவாசி ராமசாமி "அவர்கள்.  இவரைப் பற்றி நாளைய பதிவில்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,