ரணமமகரிஷி (37)

  மமகரிஷி (37)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்: 37



 1908ஆம் ஆண்டு தனது தந்தையுடன் ஒரு  கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் சமயம் வந்தவர் தான் மணவாஸி  ராமசாமி என்பவர்.

 உலகைத் துறந்த சாது ஒருவர் விருபாட்ச  குகையில் இருப்பதை அறிந்து அவரைக் கண்டு செல்லலாம் என்று இருந்தார். பகவான் ஸ்ரீ ரமணர் அப்போது தான் குகையிலிருந்து வெளியே வந்தார். அவரைப் பார்த்த போது மெய் சிலிர்த்து நின்றார்


எனது உடலை வெகுவாக பாதித்த நோய்களுக்கும் மன கவலைகளுக்கும் ஏதாவது பரிகாரம் உள்ளதா என்று கேட்டார் பகவான் ஸ்ரீரமணரிடம்.

நான்   மருத்துவருமில்லை குறி சொல்பவனுமில்லை என்று கூறியவாறு பகவான் சென்று கொண்டிருந்தார்.


 எல்லாம் என் தடையோவென  விரக்தியுடன் உரக்க குரலில் கூறியபோது.  இதனை காதில் கேட்ட பகவான் ஸ்ரீரமணர்  மன உறுதியோடு எது வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்னும் மனோபாவத்தை வளர்த்துக் கொள். உன்னை எதுவும் அசைக்க முடியாது என்று கூறி தனது கையை உயர்த்தி ஆசீர்வதித்தார்.



 அருளொளி அதிலிருந்து கிளம்பி  என்னை சூழ்ந்து கொண்டதாக உணர்ந்தேன் என்றார்  ராமசாமி அய்யர்.


 எதிர்காலத்தில் வருகின்ற சவால்களை என்னால் ஏற்க முடியும் என்ற நம்பிக்கை அந்த ஆசிர்வாதம் தந்ததோடு  தெய்வ சக்தி நிச்சயம் காப்பாற்றும் என்று தனது எண்ணத்தில் கலந்து  இருந்த அந்த அனுபவமே   பகவான் ஸ்ரீ ரமணரின் சிறந்த பக்தனாய் மாறுவதற்கு வழிவகுத்தது.


 ராமசாமி அய்யருக்கு அந்த அருணாச்சலம் தரிசனம் மிக முக்கியமாகதாக  இருந்தது. மலையை பார்க்க  மட்டுமே  வந்த  அவருக்கு  புனித மலையும் கோயில் கோபுரங்களும் ஆன்மீக சக்தியோடு விளங்கிய ஞானியும் நல்லதொரு சாட்சியாக வந்து  ஆழ்மனதில் வேரூன்றியது


தாம் சிலகாலம் அலுவலகப் பணியில் விடுப்பு எடுத்துக்கொண்டு

  குடும்பத்தோடு அருணாச்சலம் வந்தார்.  தினமும் மாலையில் பகவானை  பார்க்க வருவதும் ஒரு சில நேரம்  இரவில் பகவானோடும்  தங்கியும் விடுவார்.


 பகவானிடம் அப்போது ஓரிருவர் மட்டுமே இருந்ததால் தங்குவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை இசையில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அறிந்த பகவான் கீர்த்தனங்களை இயற்றுவதில் உள்ள நுணுக்கங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பகவான் உறுதுணையோடு அவரது உபதேசங்களை கேட்டு  இன்பமுற்றார்.


 முதலில் பார்க்க வரும் போது இருந்த மனக்கவலை,எங்கு போனது என்று தெரியவில்லை ராமசாமி அய்யருக்கு.

 


 தம் மனம் முழுக்க, பகவான் ஸ்ரீரமணர் இருப்பதை உணர்ந்து அவர் மேலே கீர்த்தனையில் எழுத ஆரம்பித்தார்.

 

    பல்லவி


 திக்கு வேரில்லை தீன ரட்சகா


 ஐயா மெய்யா அருண ரமணய்யா


 அனுபல்லவி


 மொய்க்கும் அடியவர் மோன  வண்டினங்களாய் கண்டு சுவைத்திடும்  செண்டு   மணப்பூவே


            சரணம்


வெய்ய  அகங்கார வெப்பமாதல் வருந்திப்  பொய் நினைவதனால்  மெய் நிலை வழிந்தேன் அருமருந் தொன்றுண்டு  அவனியிலுனதருள் கொடும் பிணி  தனை தீர்க்கும் குருவரக்ருபாகரா   ஆட்டினம்  கூடிய காட்டிளம் சிங்கத்தை நிஜ வடிவு காட்டி நீ என் இனம் என்றாப்  போல இங்கென  யாட்கொண்டு என்னை யறிவிக்க  தேன்மழை பெய்திடும் திவ்ய  வேதியன்  நீயே



என்ற கீர்த்தனம் பாடினார்.


 பகவானுடைய தமிழ் பக்தர்களுக்கு இந்தக் கீர்த்தனை இன்றும் பிரபலமாக உள்ளது.


 ஒரு நாள் இரவு விருபாட்ச  குகையில் பகவான் ராமசாமி ஐயரின் மீது  அரை மணிக்கு  மேலாக தன் கவனத்தை ஒழுங்குபடுத்தி செலுத்திய போது, எரிச்சல் தர கூடிய சக்தி பிரகாரம் தனக்குள் பாய்வதை அவர்  உணர்ந்தார். உடனே அவரது மனம் அகமுகமாகி  இதயத்தில் அடங்கியது. முதன்முறையாக பகவான் சாதாரண துறவி மட்டுமன்று ஆன்மீக சக்தியை வலிமையாகப்  பிறரிடம் பாய்ச்சக்  கூடிய தன்மை உடையவர் என்பதை உணர்ந்தார்.

 இந்த ஆன்மீக அனுபவம் பகவானிடம் அவருக்கிருந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்தது. அவருக்கு அஜீரணக் கோளாறு இருந்தது அதை பற்றி பகவானிடம் தெரிவித்த போது மீண்டும் அவரை ஒருமுகப்பட்ட நோக்கத்தோடு பகவான் பார்த்தார். உடனே புத்தியில் ஒருவித குளிர்ச்சியினை  உணர்ந்தார். அதன்பிறகு அஜீரணக்கோளாறு முழுமையாக குணமாகி விட்டது. தன்னைக்  குணப்படுத்திய பகவானுக்கு அவர் நன்றி கூறினார் பாடல் வரிகளால்



 பேரு உதவியை என்னென்று சொல்ல லாகும்


 ஐயா  நின் அருள் தரும் பேருதவியை என்னென்று சொல்லல் ஆகும்


 அரும்  அளி  கிளி அணில் மயில் குரங்கிற்க்கும் அழையாமலே இரங்கும் விழை  மனநிறைவே நின்   பேருதவியை


 என்னென்று  சொல்லலாகுமா ஐயா நின் அருள் தரும்.


 என்று பாடினார்.


 ராமசாமி அய்யருக்கு அலுவலகப் பணி வட இந்தியாவிற்கு மாற்றப்பட்டது.  மன  வருத்தத்துடன் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் விவரம் நாளைய பதிவில்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி