ரணமமகரிஷி (38)

 மமகரிஷி (38)  


பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்: 38




 மணவாசி ராமசாமி ஐயர் வட இந்தியாவில் உள்ள பொரம்பூர் என்னும் இடத்திற்கு பணியில்  சேர்ந்தார். பலகாலம் அங்கு பணியில் செய்தார். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் பகவான் ஸ்ரீ ரமணர் நினைப்பாகவே இருந்தார்.  ஒரு முறை கோடை காலம் அதிக வெயில் அப்பகுதியிலிருந்து. அந்தக் காலத்தில் அவரது கால்களில் கொப்புளங்கள் வந்தன. மிகவும் வலியால் துடித்தார். அறுவை சிகிச்சை செய்தும் வலி குறையவில்லை. ஒரு  சமயம் கண்ணீர் விட்டு அழும்போது பகவானே என் வலி குறைய ஏதாவது செய்யுங்கள் என வேண்டினார்.


 மறு நாள் காலை கதவை தட்டும் சட்டம் கேட்டு கதவைத் திறந்த போது இரண்டு சாதுக்கள் வெளியில் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் தீர்த்த யாத்திரைக்காக அருணாசலத்தில் இருந்து வந்துள்ளோம். நாங்கள் கிளம்பும் போது பொரம்பூரில் உள்ள தங்களைப் பார்த்து வரச்  சொல்லி பகவான் கூறினார். அய்யர்  அவர்களை அன்போடு வரவேற்றார்.


 ஐயரின் கால்களில்  கொப்பளங்களினால்  வேதனைப்பட்டு இருப்பதை கண்ட இரண்டு சாதுக்களும் வீட்டில் உள்ள புளி  மட்டும் சாம்பிராணி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வரச் சொல்வார்கள்.


 இரண்டு பொருட்களைக்   கொண்டு  தண்ணீருடன் கலந்து ஆயுர்வேத பசையை தயார் செய்து அக்  கொப்புளங்களின் மேல் தடவினார்கள். அதன் பின்னர் சாதுக்களும் அங்கிருந்து கிளம்பினார்கள்.  இரண்டு நாட்களில் ராமசாமி ஐயர் குணமடைந்தார்.


 பகவான் ஸ்ரீ ரமணரின் நாம் நினைத்தோம், திருவண்ணாமலை இருந்த அவர் என்னை நினைத்து என் வலி  தெரிந்தும்,  அதனை சரி செய்யவே இரண்டு சாதுக்களை அனுப்பியது அய்யருக்கு ஆச்சரியமாயிருந்தது.



 பரம்பொருளின் நினைவாக உள்ள பகவான் ஸ்ரீ ரமணரின் கருணையே  கருணை.



 தனது பணி ஓய்வுக்குப் பின்னர், ராமசாமி ஐயர் மீண்டும் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.

பகவான் ஸ்ரீ ரமணரு  டனிருந்தார்.



பகவான் ஸ்ரீ ரமணர் ஸ்கந்தமரத்தில்  இருந்த சமயம் நாங்கள் சிலருடன் கிரிவலம் செல்வது வழக்கம்.  அன்று கிரிவலத்திற்கு  புறப்படும்போது ராமசாமி ஐயருக்கு திடீரென உடல்நலம் குன்றிய நிலையில் விருபாட்சி குகையில் உள்ளதாக செய்தி கிடைத்தது.  பகவான் உடனே படுத்திருந்த இடத்திற்கு சென்றார்.கபாலி சாஸ்திரி ஆகிய நானும் உடன் சென்றேன்.


 ஐயருடைய இதயம்  படபடவென துடித்துக் கொண்டிருந்தது.  பகவான் அவரருகில் அமர்ந்து தன் கையை அய்யரின் தலைமேல் வைத்தார்.ஐந்து  நிமிடங்களில் ஐயர் எழுந்து சாதாரண நிலைக்கு வந்தார். அவர் அருகில் உட்கார்ந்திருந்த பகவான் ஒரு மணி நேரம் ஆகியும் எழுந்திருக்க முடியாமல் அமர்ந்திருந்தார். ஸ்கந்த மரத்தில் இருந்த என் பையில்  ஆலிவ்  எண்ணெய் வைத்திருந்ததால்  ஓடிச்சென்று அதை எடுத்து வந்து பகவானின் தலையில் நன்கு தேய்த்து விட்டேன். அதன் பின் எல்லோரும் அமைதியுற்றோம்.  சிறிது நேரம் கழித்து என்னவாயிற்று பகவான் என்று கேட்டதற்கு ராமசாமி ஐயர் எழுந்துவிட்டார். நான் உட்கார்ந்து விட்டேன். தலையில் எண்ணெய் தேய்க்க படுவதை உணர்ந்தேன் அது மிகவும் இதமாக இருந்தது என்று மட்டுமே தவிர கூறினாரே தவிர தன்னால் அற்புதம் நிகழ்த்தப்பட்டதன் றோ, வேறு விதத்திலோ விளக்கம் தரவில்லை. இதை அருகில் பார்க்க கபாலி சாஸ்திரி பகவான் ஸ்ரீ ரமணரின் மகிமை என்ன சாதாரணமானதா. என்றென்றும் அவர் அடுத்தவர் மனதை புரிந்து கொண்டு செய்வதெல்லாம் நன்மையொன்றே  என உணர்ந்தார் கபாலி சாஸ்திரி.



பகவான் ஸ்ரீரமணருடன் பள்ளியில் பயின்று பிற்காலத்தில் காவல்துறையில்  அதிகாரியாக இருந்தவர்,  பகவான் ஸ்ரீ ரமணர் பற்றி சொல்லும் விளக்கம் நாளைய பதிவில்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,