ரணமமகரிஷி (39)

  மமகரிஷி (39) 


பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :39



 பகவான் ஸ்ரீ ரமணர், வேங்கடராமனாக இருந்த காலத்தில் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உடன் படித்த சாப் ஜான் என்னும் பள்ளித் தோழன்.


 வேங்கடராமன் தமிழில் சிறந்த புலமை பெற்றதுடன் அவர் எப்போதும் தமிழ் இலக்கணத்தின் மீது ஆர்வம் கொண்டவர், இதனால் பள்ளியின் தமிழ் பண்டிதர் ஜான் பாலகிருஷ்ணன்  என்பவருக்கு வேங்கடராமனை  மிகவும் பிடிக்கும்.


இதர பள்ளிப்  பாடங்களில் அவருக்கு மிகவும் விருப்பம் கிடையாது.


 வேங்கடராமன்,  இளம் வயதிலேயே மிகுந்த தெய்வ பக்தி உடையவர். திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மிகுந்த ஈடுபாட்டுடன் பயபக்தியுடன்  களிப்புடன் வலம் வருவார்.

 என்னையும் பல முறை அந்த கோவிலுக்கு  அழைத்துச் சென்றிருக்கிறார் என்றார். அவருடைய பால்ய சிநேகிதனான  சாப் ஜான் என்பவர்.


 கடவுளின் படைப்புகள் அனைத்தும் ஒன்றே.  கடவுள் ஒருவரே மேலெழுந்தவாரியாக நோக்கும் போது கடவுளின் உருவங்களில் இருக்கும் வேறுபாடுகள் அனைத்தும் மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை  என்று அப்போதே  கூறியிருந்தார் வேங்கடராமன் அவர்கள்.


 அதன் பின்னர் அவரிடம் பல காலம் தொடர்பு கொள்ள இயலவில்லை.


1903 ல்,  நான் காவல் துறையில் பணியில் சேர்ந்த, காலத்தில் உத்திரமேரூர் என்ற ஊரில் இருந்த ஒரு கடையில் வேங்கடராமனின்  உருவப்படத்தை பார்த்து வியப்படைந்தேன். வித்தியாசமாக இருந்த அந்த  தோற்றம் கண்டு, இந்த உருவப்படம் எங்கிருந்து கிடைத்தது என்று கடைக்காரரிடம் கேட்டேன்.


 அந்த உருவப்படம் திருவண்ணாமலையில் வசிக்கும் ஒரு சுவாமி உடையதென்றும் அவர் அவ்வப்போது மௌனத்தில்  இருப்பதாகவும்  அந்த கடைக்காரர் கூறினார்.


 எனது பழைய நண்பனை சந்திக்கும் ஆர்வத்துடன்,திருவண்ணாமலையில் அவரது இருப்பிடத்திற்கு சென்றேன்.


 மிகவும் ஆவலுடன்   என்னை வரவேற்றார் ஆனால் அவர் பேசவில்லை.


 முன்பு பார்த்ததை விட அழகாகவும் சன்னியாசியின் ஒளிமிகுந்த தோற்றத்துடன் இருந்த எனது பள்ளித் தோழர் சந்திக்கும்போது மெய்சிலிர்த்துப் போனேன் என்றார்  சாப் ஜான் அவர்கள்.


 பின்னர் நான் பதவி உயர்வில், திருப்பத்தூரில் காவல்துறை அதிகாரியாக இருந்த போதும் ரமணாஸ்ரமம் சென்றுள்ளேன். எனது தந்தை இறந்த சமயமாதலால் நான் மிகவும் வருத்தத்துடன் இருப்பதை அவரிடம் தெரிவித்தேன். ஸ்ரீரமணரோ   தனது தாயாரின் சமாதியை  எனக்கு காட்டியபோது சற்று ஆறுதல் அடைந்தேன்.  வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும்,  இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பதை அங்கு தான் உணர்ந்தேன்.


 அதன் பிறகு நான் பகவான் ஸ்ரீ ரமணரை  பலமுறை சென்று சந்தித்துள்ளேன்.


 ஒவ்வொரு முறையும் சிறப்பாக கவனிப்புடன் அங்குள்ளவர்களுக்குஎன்னை அறிமுகம் செய்து வைப்பார் உணவகத்தில் என்னை அருகில் அமர வைத்ததுடன் என்னுடன் சேர்ந்து சாப்பிடுவார். அவ்வாறு அவர்  செய்தது மிகவும் அரிதானது.


 பள்ளி தோழனாக இருந்த நிலையிலிருந்து நான் அவருடைய பக்தன் என்ற நிலைக்கு மாறினேன்.


 காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியில் இருந்த போதிலும், என் மனதில் தனியி டம் பிடித்து பகவான் ஸ்ரீ ரமணரின் அன்பினாலும், நல்லதொரு  செயல்களாலும் மக்களால் ஈர்க்கப்பட்டவர்களுல்  நானும் ஒருவன் என்று நெகிழ்ந்து  உரைத்தவர்,  பள்ளித் தோழனாய் இருந்த  இஸ்லாமிய நண்பர் சாபி ஜான் அவர்கள்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,