ரணமமகரிஷி (41)

 மமகரிஷி (41) 


பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :41
 பகவான் ஸ்ரீ ரமணர் தமது ஞான திருஷ்டியால் தொலைதூரக்  காட்சிகளைக் கண்டார்.  அவர் தமது சித்தம் சித்துக்களோடு  நின்றுவிடவில்லை. சிவானுபவத்தில் நினைப்பதையே பிரதானமாக கொண்டிருந்தார்.


இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த போது ஆர்தர் ஆஸ்பர்ன் திடீரென்று காணாமல் போனார். அவரை யுத்த கைதியாக்கி  ஜப்பானுக்கோ  ஜெர்மனிக்கோ  கொண்டு சென்றுவிட்டார்கள் என்று அவரது குடும்பம் பதைபதைத்தது.


தனது கணவரின் இருப்பிடம் தெரியாத அவருடைய மனைவி என்ன செய்வது என்று திகைத்தார்.


 பால் பிரண்டன் எழுதிய புத்தகத்தின் மூலம்,பகவான் பற்றி தெரிந்து கொண்டதும் தனது குழந்தையுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அந்தப் பெண்மணி தனது கணவனை உயிருடன் கொண்டு சேர்க்கும்படி பகவானிடம் பிரார்த்தனை செய்தபடி இருப்பார்.


 அவரது மகள் கிட்டியும், மகன் ஆதமும்  கூட பிரார்த்தனையில் கலந்து கொண்டிருந்தார்கள்.


தீபாவளி பண்டிகை நேரம் அப்போது.


 கிட்டி தனது  சகோதரனை  அழைத்துக்கொண்டு பகவானிடம் வந்தாள்.

" உனக்கு என்ன வேண்டும்? "பகவான் சிரித்தபடி கேட்டார்.


எங்க அப்பா எப்போது திரும்பி வருவார் குழந்தை ஏக்கத்துடன் கேட்டது.


 இவ்வளவு தானே  கவலைப்படாதே நாளை உன் அப்பா வந்து விடுவார் என்று பகவான் அருள் கூறினார்.


 அடுத்த நாள் மதியம் ஆர்தர் ஆஸ்பர்ன் அங்கு வந்து சேர்ந்தார்.


 பகவான் ஸ்ரீ ரமணரின் வாக்கு பலித்தது.


 ஆர்தர் ஆஸ்பர்ன்,  சில காலம் தனது மனைவி, குழந்தைகளுடன் திருவண்ணாமலையில்  தங்கியிருந்தார்.


 பகவான் ஸ்ரீ ரமணரின் மகத்துவங்களை மேலும் அறிய,  அதன் பயனாய் "Ramana Maharishi and the path of  self " என்னும் நூலை எழுதினார். இதன் மூலம் பகவான் ஸ்ரீ ரமணரின் மகத்துவம்  உலகம் அறிந்தது.


 பகவான் ஸ்ரீ ரமணர் அசலான சாமியாரா அல்லது போலி சாமியாரா என்று தெரிந்து கொள்ள  ஒரு சிலருக்கு ஏற்பட்டது.  அவர்கள் தங்களை  பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு முறை  பாலில் விஷம் கலந்து கொடுத்து விட்டார்கள்.

 அது விஷம் என்று தெரிந்தும் அவர் தட்டாமல் வாங்கிக் குடித்திருக்கிறார்.  அதன் விளைவாக ஒரு பல் சொத்தையானது. பகவான் இந்நிகழ்ச்சியை தமது பால்ய சினேகிதரான இரங்கநாத ஐயர் தம்மை சந்திக்க வந்த போது இதை  தெரிவித்திருக்கிறார்.


 ஒரு சமயம் மேற்கத்திய பக்தர் ஒருவர் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். வயது முதிர்ந்த பண்பாளர். அப்போது ஆஸ்ரமம் மலை அடிவாரத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அங்கிருந்து எப்படியோ மலைமீது ஏறிச் சென்று விட்டார் அவர் மீண்டு வர வழி தெரியவில்லை. நல்ல வெயில் நேரம் அங்குமிங்குமாய் வழி தேடிக் களைத்துப் போனார் அவர். பகவான் அந்நிலையில் அவரை கடந்து வந்தார். ஆசிரமத்திற்கு வழிகாட்டினார்


 என்னோட இந்த வெள்ளைக்கார எங்கே போனார் இன்னும் வரக்காணோம் என்று ஆசிரமவாசிகள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிருந்தனர். அவர்  உள்ளே நுழையவும், என்ன  ஆச்சு  என்று ஆளுக்காள் கேட்டார்கள்.நான் பொழுதுபோக்கா மலைப்பக்கம் உலாவ போனேன் வழி தவறிவிட்டது. எனக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. நல்ல காலமா பகவான் அங்கு வந்து வழி காண்பித்தார் என்றார்  வெள்ளைக்காரர்.


எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள் காரணம் பகவான் அந்தக் கூடத்தை விட்டு எங்கேயும்  அன்று  போகவில்லை.


அந்தப் பெரியவருக்கு அன்று மலையடிவாரம் செல்ல  யார் தான் வழி காண்பித்தது.


 பகவான் ஸ்ரீ ரமணரின் விநோதங்களை அறிய அறிய  வாழ்வில் வருவது ஆனந்தமே.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,