ரணமமகரிஷி (42)

 மமகரிஷி (42) 

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்:42


 ஆன்மிக மேம்பாட்டுக்கும் கட்டுப்பாடான உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டு. விரதம் என்றால் அறவே பட்டினி கிடக்க வேண்டும் என்பதில்லை. குறைந்த உணவை, தியானத்திற்கு உகந்த உணவை உண்ண வேண்டும் என்பதே பகவான் ஸ்ரீ ரமணரின் கோட்பாடு

 சாத்வீக உணவே மனதின் தூய்மையை  வளர்க்க உதவும். பழம், காய்கறி, பால் போன்றவை சாத்வீக  உணவுகளாகும்.

 சில உணவுகள் மனதை பாதிக்கும். சுவையான உணவைத் தான் மனம் நாடுகிறது.

 ஆத்ம சாதனைக்கு தேவையான தெம்பு உடலுக்கு வேண்டும். ஆகவே குறைந்தபட்ச அளவு சாப்பிடலாம் அறவே பட்டினி போடக்கூடாது அது மனதை பலவீனப்படுத்தும்.

 ஒருமுறை பகவான் ஸ்ரீ ரமணர், விருப்பாட்சி குகையிருந்த சமயம்
 விலையுயர்ந்த காய்கறிகளைக் கொண்டு சத்தான சூப் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு நடுத்தர பெண்மணி.
 பகவானது அன்புடன் ஏற்று  அந்த சூப்பை சுவைத்து குடித்தார்.

 மறுநாளும்  அந்த நடுத்தர பெண்மணி,  அதே மாதிரி போல  சூப் கொண்டு வந்தார்.

 பகவான் ஸ்ரீ ரமணர் அதை வாங்க மறுத்துவிட்டார். இங்குள்ள அனைவருக்கும் இதே போல் தர முடியுமா என்றார்.

 அந்தப் பெண்மணி பகவானிடம், அதெப்படி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அளித்தேன் என்றார்.

 அப்படி என்றால் இங்கு  உள்ளவர்கள் அனைவரும் உடல்நலத்தோடு இருக்க வேண்டும் அல்லவா, என்று பகவான் சொன்னார் அந்தப் பெண்மணியிடம்.

 மேலும் அந்தப் பெண்மணியிடம் அவர்,  நீங்கள் விலை உயர்ந்த காய்கறிகள் போட்டு சூப் கொண்டு வருவதற்கு பதிலாக. கேழ்வரகு வாங்கி, அதை மாவாக்கி முதலில் கஞ்சி காய்ச்சி,  முந்தைய நாள் மீதமிருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி, அதை  மண்பானையில் போட்டு,  அதனுடன் எலுமிச்சை இலை, சுக்கு,உப்பு போட்டு, மறுநாள் புளித்து  போனதை  சாப்பிடும்பொழுது அது அமிர்தமாக இருக்கும்.  அதை சாப்பிடும் பொழுது எந்த நோயும் விரைவில் அணுகாது என்றார்.

 பகவான் ஸ்ரீ ரமணரின்,  கருத்தி னைக் கேட்ட அந்த அம்மையார், தனக்கு மட்டும் நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அனைவருக்கும் குறைந்த செலவில் உணவை தயார் செய்து அளிக்க கேட்டுக்கொண்டது கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்.

 அடுத்தவர்களும் உடல்நலம் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும், என்று நினைத்தவர் தான் பகவான் ஸ்ரீ ரமணர்,

 பகவானின் கருத்துக்கிணங்கி அந்த நடுத்தர பெண்மணி, ஆஸ்ரமத்தில் உள்ளவர்களுக்கும் புளித்த கஞ்சி தயார் செய்து கொடுத்தார்.  அதனையும் பகவான் குடித்தார்.

 அந்த நடுத்தர பெண்மணியிடம் பகவான் ஸ்ரீ ரமணர்
 இறைவனது படைப்பில் அனைவரும் சமம்.  உள்ளத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாதிருந்தால், மனம் அமைதியுறும்.  சுயநலத்தில்  ஒரு வித ஆசை ஏற்படும். பொதுநலத்தில் ஒரு சுகம் ஏற்படும்.

 எனக்கு நீங்கள் கொடுத்த சூப்,  நான்  குடித்த பிறகு உடல் நலத்துடன் மனநிறைவு அடைந்தேன். ஆனால் தற்போது நீங்கள் கொடுத்த கஞ்சியினால், ஆசிரமத்தில் உள்ள எல்லோருக்கும் நல்லதொரு உணவாய் அமைந்தது மட்டுமல்லாமல், அதனை குடிக்கும் போது அவர்களின் மனதிலும் நீங்கள் குடியேறி விட்டீர்கள் அல்லவா என்றார்.

 நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவு இந்தக் கஞ்சி. நாளைய உலகத்தில்  உள்ளவர்களுக்கும் இதன் முக்கியத்துவம் தெரியும்.

 பகவான் ஸ்ரீ ரமணரின் கருத்தைக் கேட்ட நடுத்தர பெண்மணிக்கு மெய்சிலிர்த்தது. தனக்கென மட்டும் வாழாமல் பிறருக்காக வாழும் அந்த ஞானியை கண்டு இரு கை கூப்பி வணங்கினாள்.

 தூய்மையான பகவான் ஸ்ரீ ரமணரிடம் ஒரு அபூர்வ சக்தி உள்ளதென்று புரிந்துகொண்டாள்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,