ரணமமகரிஷி (43)

  மமகரிஷி (43) 

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்:43















பகவான் ஸ்ரீ ரமணர் குறித்த தொடர்: 43

 பகவான் ஸ்ரீ ரமணர்  வாழ்ந்த காலத்தில் ஆசிரமத்தில் இருந்த டி.கே.சுந்தர அய்யரை தனது குருவாகக் கொண்டவர் கணேசன் என்பவர்.  இவரின் தாயாரும் பகவானின் பக்தை.

பகவான் ஸ்ரீ ரமணரைப் 
 பற்றி கணேசன் அவர்கள் சொல்லும் கருத்துக்களே இன்றைய பதிவு.

 எனக்கு இரண்டு உப குருக்கள்.  முதல் குரு என் தாய். எனக்கு ஒன்றரை வயது ஆகியிருந்த அக்காலத்தில் நான் தொட்டியில் கிடந்தேன்.என் அன்னை,ரமணர் தாலாட்டு ஒன்றை பாடிக் கொண்டிருந்தாள்.

 என்னை தூங்கச்  செய்ய வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் அந்த ரமணர் தாலாட்டை பாடுவார்.இப்போது கண்ணை மூடிக்கொண்டு, என் இதயத்தின் மீது கவனம் திரும்பும் போதெல்லாம் அந்த தாலாட்டு பாடலை கேட்க முடிகிறது.

 குருபக்தியின் விதையை  என்னிடம் விதைத்து,
 மேற்காணும் செயலை  செய்தியாய்   பின்னாளில்   தெரிவித்தார் எனது தாயார்.

 எங்கள் வீட்டில் இருக்கும் பகவானின் போட்டோ.
 நான் தவழும் பருவத்தில் என்னை அப்போட்டோவைக் காட்டி அதனருகில் உட்கார வைப்பார்.

சற்று வளர்ந்த பின் தினமும் பகவான் முன் சென்று அவரை வணங்கச் சொல்லுவார்.
அவரது கண்ணை பார்த்து அருளைப் பெற்றுக் கொள் என்பார்.

 நான் பள்ளி செல்லத் துவங்கியபோது அன்னையிடம் ஏதாவது நிகழ்ச்சி பகிர்ந்து கொண்டால் உடனே இதை  பகவானிடம் கூறு  என்பார். நான் புதுப் பேனா வாங்கினால் அதை கொண்டு போய் பகவானிடம் காட்டு என்பார்.

" உனக்கு பகவான் மட்டுமே போதும் வேறு எதுவும் தேவையில்லை" என்றாள் எனது தாய்.

 எனது இரண்டாவது குரு எனது பள்ளி ஆசிரியர் டி.கே. சுந்தர அய்யர். அவரது பணி அபூர்வமானது அவரை எளிமையும் அதே போலத்தான்.
 ஆறாம் வகுப்பு படித்த போது எனக்கு ஆசிரியராக இருந்த தால் என்னிடம் விசேஷ கவனம் செலுத்துவார்.என் மீது தனிப்பட்ட அக்கறை காட்டுவார். கணேசா இங்கு வா என அழைத்து பகவானின் செயல்களைப் பற்றி எடுத்துச்  சொல்லுவார்.

 ஒரு முறை டி.கே. சுந்தர அய்யர்,  நமக்கு பகவான் குருவாக விளங்கும் போது என்னையேன்  மற்ற ஞானிகளிடம் செல்லுமாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட போது அழகான விளக்கம் ஒன்றை தந்தார் டி. கே. சுந்தர அய்யர்.

  பகவான் ஒரு பெரிய சமுத்திரம். ஒட்டுமொத்தமான உணர்வின்  வடிவம்.மற்ற 
 தெய்வீக புருஷர்கள், சாதுக்கள் சன்யாசிகள், ஞானிகள் முதலியோர் நதியை போன்றவர்கள். உன்னுடைய நிலை என்ன கணேசா நீ ஒரு சொட்டு தண்ணீராக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

 உன்னை சமுத்திரத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய பெரிய நதிகள், சிற்றாறுகள், ஓடைகள்  இவற்றின் அன்பை உணர்ந்தால் மட்டுமே,நீ ஒரு சொட்டு தண்ணீர் என்பதை உன்னால் உணர முடியும்.

 நீர் தொடர்ந்து ஓடுவது அது எங்கிருந்து பிறந்ததோ  அந்தக் கடலை அடைவதற்காகவே என்று நமது ஆன்மீக நூல்கள் கூறுகின்றன.இது தொடர்ந்து நிகழும் ஒன்று.

 கடலை சென்றடைய வேண்டுமென்றால் நீ இப்போது ஒரு சொட்டு தண்ணீராக  இருப்பதை உணரவேண்டும். அந்த ஒரு துளி தண்ணீர் நதியோடு கலந்தால் மட்டுமே சமுத்திரத்தை அடைய முடியும். அவ்வாறு இல்லாவிடில் அந்த சொட்டுத்  தண்ணீரால் கடலை அடையமுடியாது என்று விளக்கம் தந்தார் டி.கே சுந்தர ஐயர்.பக்தர்கள் ஞானிகள் இவர்களின் பெருமை எல்லாம் இந்த ஆசிரியர் எனக்கு கற்றுக் கொடுத்தார்.

 சாதுக்கள், சன்னியாசிகள் முதலியோரின் பெருமையை உணராமல் பணிவு ஏற்படாது. ஏனென்றால் அந்நிலையில் ஒருவர் மனம் முற்றிலுமாக ஆன்மீக ஆதிக்கத்தில் இருக்கும். அருணாச்சலரே ரமணர் என்றும், ரமணரே  அருணாசலம் என்றும்  எனக்கு முதல் முதலில் தெளிவுபடுத்தி பகவானின் அருள் செயலை உணர்த்தியவர்  எனது ஆசிரியர் டி.கே சுந்தர அய்யர்  என  கணேசன் தனது கருத்தினை தெரிவித்தார்.






Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,