ரணமமகரிஷி (44)

   மமகரிஷி (44) \

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்: 44 பகவான் ஸ்ரீ ரமணர் பிற உயிர்களிடம் எவ்வளவு அன்பாக இருந்தார் என்பதற்கான ஒரு நிகழ்வை சொல்கிறார் அவருடைய பக்தரான டி.கே.சுந்தர அய்யர்.


விருபாட்சி குகையில்  இருந்த சமயம், வெட்டவெளியில் துணியை காய வைப்பதற்காக ஒரு கொடி கட்டப் பட்டிருந்தது. அக்கொடியிருந்த கயிற்றில் தன்னுடைய துண்டை பகவான் காய வைப்பார்.  அந்தக்  கொடி பக்கத்தில் ஒரு மரத்தில் குருவிக்  கூடு ஒன்று சிறியதாக கட்டி அதில் நான்கு  முட்டைகள் போட்டு வைத்திருந்தது.


 ஒருமுறை பகவான் அந்த காய்ந்த  துண்டை எடுக்கும் பொழுது,  கயிற்றின்  அருகில் உள்ள மரத்தின் மீது படவும்,  அதை இழுக்கும் பட்சத்தில், அந்த துண்டானது காற்றின் வேகத்தில் பட்டு  ஒரு முட்டை கீழே விழுந்து லேசாக உடைந்து விட்டது.


 பகவான் அதிர்ந்து போனார். இன்று நான் என்ன காரியம் செய்துவிட்டேன் என்று பார் என அருகில் இருந்த தொண்டர் ஒருவரிடம் கூறினார்.முட்டையை மெதுவாக கையில் எடுத்து,பாவம் இதன் தாய் மிகவும் வருந்துவாள்,சற்று நேரத்துக்குள் வரப்போகும் அவள் அந்த குஞ்சை நாசமாகிவிட்டேன்  என்று தன் மீது கோபம் கூட கொள்ளலாம். உடைந்த முட்டையை உற்றுப் பார்த்தார் அதில்  மிகவும் லேசான கீறல். முயற்சி செய்து பார்ப்போம் என கூறி ஈரத்துணி ஒன்றில் முட்டையை வைத்து சுற்றி வைத்தார். அருணாச்சலம் தான் இந்த பாவத்தில் இருந்து என்னைக் காக்க வேண்டும் என்றார்.முட்டையை அதனிடத்தில் வைத்து விட்டு சில நேரங்களுக்கு ஒரு முறை ஈரத்துணியை மாற்றிக்கொண்டே இருந்தார். சில நாட்களுக்குப்பின் விரிசல் விட்ட இடம் சேர்ந்து கொண்டதைக் கண்ட பகவான் என்ன அதிசயம் பார் விரிசல் மூடிவிட்டது. தாய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும் அதை பொரிக்க செய்துவிடுவாள். ஒரு உயிரைக் கொன்ற பாவத்திலிருந்து அருணாச்சலம் என்னை காப்பாற்றி விட்டது என்றார்.ஓரிரு நாட்களில் பின் குஞ்சு  வெளியில் வந்தது அதை கண்ட பகவான் ஆனந்தம் பொங்க அதை கையில் எடுத்து மற்றவர்கள் வியப்புறும் வகையில் தன்  மிருதுவான கைகளால் அன்போடு தடவி கொடுத்தார்.


 பிற உயிர்களின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது அல்லவா.


 ஒரு நாள் டி.கே சுந்தர

 அய்யர், பகவானிடம் உங்களுடைய உண்மையான உருவத்தை எனக்கு காட்டுங்கள் என பவ்வியமான குரலில் வேண்டுதல்  செய்தார்.


 பகவான் ஸ்ரீரமணர் புன்னகை கலந்த மனதுடன்,டி கே.சுந்தர அய்யரை அமரச்செய்து தனது அருட்பார்வையை அவர் மீது  செலுத்தினார்.


 அய்யரின் இதய கதவு திறந்தது. அவர் கண்களை மூடிப்  பரவசநிலை எய்தினார்.உனக்கு என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ அவற்றை இப்போதே பார்த்துக்கொள் என்றார். பகவான் டி. கே. எஸ் ,  தனது இஷ்ட தெய்வமான   ராமனைக் காண விரும்புவதாக தெரிவித்தார்.


 ராமன் சக்கரவர்த்தியாக கிரீடம் அணிந்து சீதையுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதையும்  தம்பி லட்சுமணன் அருகிலும்  நிற்க, அனுமன் அவரது காலடியில் வீற்றிருப்பது போன்ற காட்சிகள் அவர் இரண்டு மணி நேரம் தரிசித்தார்.


 நீ என்ன பார்த்தாய் என பகவான் கேட்டார். தான் பார்த்த காட்சியை விவரித்து கூறினார். பகவான் நீ போய் தட்சணாமூர்த்தி அஷ்டோதோத்திரத்தை எடுத்துவா, அதில்  ஐந்தாவது நாமத்தை படி அதில் தட்சிணாமூர்த்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நாமம்" யோக பட்டாபிராமாய நம " அதாவது தட்சணாமூர்த்தியை ராமன் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டிருந்தது என்பதையும் விவரித்தார். டி. கே 

 சுந்தர ஐயருக்கு  என்ன சொல்வதென்றே புரியவில்லை.  அவதார புருஷன்  ராமபிரானின், காணாத காட்சியை கண்டு, பகவான் ஸ்ரீ ரமணரால்  தனக்குக் கிடைத்த பாக்கியத்தை மனதில் எண்ணி பகவான் ஸ்ரீ ரமணரின் பெருமையே பெருமை,அவரின் கருணையே கருணை.


 இப்பிறவியில் தான் பெற்ற பயனை பகவான் ஸ்ரீரமணரால்  அடைந்துவிட்டோம் என டி.கே. சுந்தர அய்யர், அவரை இருகரம் கூப்பி வணங்கி அகமகிழ்ந்தார்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,