ரணமமகரிஷி (45)

    மமகரிஷி (45) 

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்: 45 மனித பிறப்பு மட்டும்தான் எல்லாவற்றிலும் உயர்வானது என்பதும், மனிதனாக இருந்தால் தான் ஆன்ம ஞானம் பெறுவது என்பதும் உண்மையில்லை. ஒரு மிருகம் கூட ஆன்மீக ஞானம் பெறவும் முடியும். அது இருக்கின்ற இடத்தை பொறுத்தும், அன்புநெறி கலந்து  செய்கின்ற செயலைப்  பொறுத்தும்  மேன்மை  பெற்று ஆன்ம நிலை அடையும்.


 ஒரு சமயம்,  ரமணாஸ்மரத்திற்கு ஒரு பசு தானமாக கொடுக்கப்பட்ட போது, பகவானே அதற்கு லட்சுமி என்று பெயர் வைத்தார். அந்த லட்சுமிக்கு ஒன்பது கன்றுக்குட்டிகள் பிறந்தன.


 அவற்றில் நான்கு கன்றுக்குட்டிகள் அதிசய நிகழ்வாக பகவான் ரமணரின் பிறந்த நாட்களில் பிறந்தன.


 ஒரு முறை, ரமணரின் உதவியாளர் குஞ்சு சுவாமி அவர்கள், பகவானின் பிறந்த நாளன்று பசு லட்சுமி கன்று ஈன்றிருப்பது  அவளுக்கு நல்லதொரு தெய்வ கடாட்சம் கலந்த மங்களம்  தான் என்றார். உடனே பகவான் ஸ்ரீ ரமணர் குறுக்கிட்டு சொன்னார், கொஞ்சம் திருத்திக்கொள்ளுங்கள் குஞ்சு சுவாமி, லட்சுமிக்கு கன்று பிறந்திருக்கும் மங்கள நாளன்று என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன என்றார்.


பகவான் ஸ்ரீ ரமணரின் தன்னடக்கம் யாருக்குத்தான் வரும்.


 ரமணர்  மாட்டுக் கொட்டிலுக்கு முறையாக சென்று வந்தார். ஒவ்வொரு நாளிலும் ஏதாவது ஒரு சமயத்திலாவது பகவானை பார்க்காமல் பசு லட்சுமி இருக்காது.  அதை போல லட்சுமியை, ரமணரால்  பார்க்காமல் இருக்க முடியாது.இவ் விருவர்களின் பாசமும் நேசமும் அப்படி.


 லட்சுமி தன் இருப்பிடத்திலிருந்து தானாகவே   பகவானும், பக்தர்களும் அமர்ந்திருந்த கூடத்திற்கு நடந்து வந்து விடுவாள்.


 ஒரு நாள் பசு லட்சுமி கூடத்திற்கு வந்து தனது தலையை மகரிஷியின் தோள் மீது வைத்து அழுது கண்ணீர் சிந்தினாள். சுமார் அரை மணி நேரம் கழித்து பகவான் ரமணர் அவரிடம் ஏன்  இவ்வளவு சோகமாக இருக்கிறாய்

 உன்னை பார்த்துக் கொள்ள நான் இங்கு இல்லையா என்ற வாறு சொல்லி அழுவதை நிறுத்தும் வரை  தேற்றினார்.


 வருடந்தோறும், லட்சுமி ரமண மகரிஷியின் நெருங்கிய பக்தர்கள் ஒருவராக விளங்கி வந்தாள்.  ரமணர் அவள் மீது அன்பு செலுத்தி, தனது கைகளால் தடவிக் கொடுத்து. வாழைப்பழங்கள்,   இட்லி,  தண்ணீர் போன்றவைகளையும்  தருவார்.


 லட்சுமி பசு மிகவும் அதிகாரத்துடன், உரிமையுடன் ரமணரை அணுகிய விதம் கொண்டு பக்தர்கள், இவர்கள் இருவரும் பூர்வ  ஜென்மத்தில் ஏதோ ஒரு பிணைப்பு இருந்திருக்கக்கூடும் என்று நம்பினார்கள்.


 பசு லட்சுமி ஆசிரமத்துக்கு வந்தபிறகு செல்வாக்கும் அதிர்ஷ்டமும் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.இது பகவான் ரமணரே  சொன்ன உண்மையாகும். 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,