ரணமமகரிஷி (46)
ரணமமகரிஷி (46)
பகவான் ஸ்ரீரமண குறித்தான தொடர்: 46
பகவான் ஸ்ரீ ரமணர், பசு லட்சுமியுடன் எந்த அளவு அன்பு கொண்டார், என்பதன் தகவலை மாட்டுப் பொங்கலாகிய இந்நாளில் பதிவிடுவதில் பெருமைப்படுகிறேன்
புது மாட்டுக் கொட்டிலை வைத்த நாளன்று லட்சுமி பசு மிகவும் உற்சாகத்துடன் என்னிடம் வந்து அந்த புனித நிகழ்ச்சிக்கு அழைத்துக்கொண்டு சென்றாள். பலவித சந்தர்ப்பங்களில் அவள் இவ்வளவு புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்ட விதத்தை பார்த்தால் அவர் ஒரு அசாதாரணமான பசு என்று கருதத்தான் வேண்டியிருக்கும். பசு சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றும் புனிதமானது. தோஷமற்ற விலங்கு பசு என பகவான் ரமணர் விவரித்தார்.
மனம் யாரிடம் வேண்டுமானாலும் வசப்படும். யார் வேண்டுமானாலும் அதனை வசப்படுத்திக் கொள்ள முடியும். அதே சமயம் யாரிடம் சாந்தமும் பொறுமையும் பெருந்தன்மை இருக்கிறதோ அந்த இடத்தில் மௌனம் கலந்த புன்னகை தோன்றும். அப்படித் தோன்றிய உறவு தான் பகவான் ஸ்ரீ ரமணருடன் லட்சுமி பசுவுக்கு ஏற்பட்டது.
பகவான் ஸ்ரீ ரமணர் மௌனத்திலிருந்து எல்லாவற்றையும் உற்று நோக்குவார் இலட்சுமி பசுவின் உற்று நோக்கும் விதத்தையும் அறிவார். அது தானும் ஒரு ஆலயத்தில் வாழ்வதாக நினைத்துக் கொள்ளும் என்று குஞ்சு சுவாமியிடம் வியந்து சொல்லியிருக்கிறார்.
பசு லட்சுமி சிறப்பான மேன்மையான ஆன்மீக குணங்கள் இருந்தது என்பது அவள் பகவானிடம் உறவாடிய விதத்திலிருந்தும் அதன் நடத்தையிலி ருந்தும் தெளிவாக தெரிந்துள்ளது.
ஒரு முறை பசு லட்சுமி கூடத்திற்கு வந்தாள். இன்னும் சில நாளில் கன்று போடும் நிலை. பகல் உணவு நேரத்திற்குப் பின் பகவான் ரமணர் செய்தித்தாள்களைப் படித்து கொண்டிருந்தாள் லட்சுமி பகவான் அருகே வந்து காகிதங்களை சுவைக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் இரு லட்சுமி என்றார் பகவான். செய்தித்தாள்களை பக்கத்தில் வைத்துவிட்டு தமது கைகளை அவளது கொம்புகளின் பின்னால் வைத்து தனது தலையை அவளது தலையுடன் பொருத்தினார். இருவரும் இந்த நிலையில் நீண்ட நேரம் இருந்தனர் அந்த அற்புதக் காட்சியை அங்கிருந்தவர்கள் கண்டனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு பகவான் குஞ்சு சாமியிடம் திரும்பி, லட்சுமி என்ன செய்கிறாள் என்று உமக்குத் தெரியுமா அவள் பரிபூரண மோன நிலையில் ஆழ்ந்து இருக்கிறார் என்றார். பசு லட்சுமியின் கண்களில் கண்ணீர் பொழிந்தது.அவளது கண்கள் பகவான் ஸ்ரீ ரமணர் மீது உன்னிப்பான நிலையாக பொருந்தி இருந்தன.
தாம் நினைப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அதனுள் இருக்கிறது. அதே சமயம் தன்னால் பேச முடியவில்லையே என்று வருந்தி அதனால் கண்ணீர் விடுகிறது என்று பகவான் ஸ்ரீரமணர் குஞ்சு சாமியிடம் விவரித்தார்.
பசு லட்சுமி தன் வாழ்நாளுக்குப் பிறகு சிலையாய் திருவண்ணாமலையில் உள்ள பகவான் ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் உள்ளதை இன்றும் காணலாம்.
Comments