ரணமமகரிஷி (48)

  மமகரிஷி (48) 

பகவான் ஸ்ரீரமணர் குறித்தான தொடர் :48

பகவான் ஸ்ரீரமணர் குறித்தான தொடர்: 48 திருவண்ணாமலையில்  கிரிவலம் செல்வதென்பது 19ம் நூற்றாண்டிலே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.


 பகவான் ஸ்ரீ ரமணர், வேங்கடராமனராய் 1896 ல் திருவண்ணாமலைக்கு வந்ததும்,  அவர்  பரம்பொருளாகிய அருணாச்சலம்  நினைவாகவே வாழ்ந்து இருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே.


 அக்காலத்தில்,  தனது  காலொன்றில் உணர்விழந்த ஒரு பெரியவர் கவட்டுக் கட்டையின் உதவியுடன் நொண்டிக் கொண்டே கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.

 அடிக்கடி அப்பெரியவர் வலி இருந்தாலும் பரவாயில்லை என்று கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


 ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி மிகுந்த  வருத்தமுடனும் அந்த மாற்றுத்திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.


 அதற்குக் காரணம் இருந்தது பல முறை கிரிவலம் சென்றாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அப்பெரியவர் வந்திருந்தார்.


 தனது உணர்விழந்த காலொன்றின் நிலைமையால் வேலை செய்யாது குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்கு ஏனோ தோன்றிற்று. குடும்பத்திற்கு தன்னால் என்ன ஒரு பிரயோஜனம் இல்லையென அவருக்கு புலப்பட்டது.  குடும்பத்திற்கு இனியும் பாரமாக இருக்கக் கூடாதென்றும்,  தனது பிள்ளைகளை விட்டு விலகி கண் காணாமல் எங்கேயாவது  சென்று விடலாம் என்று நினைத்தார் அப்பெரியவர்.


 அதனால் கடைசியாக ஒரு முறை கிரிவலம்  சுற்றுவோம் என நினைத்து தனது  கட்டை கால்களால் திருவண்ணாமலை கிரிவலம் வந்த போது, பாதி வழியில் ஒரு வாலிபர் எதிர்ப்பட்டார். அப்பெரியவரை நெருங்கிய அந்த வாலிபர்,ஓய் கால் சரியில்லாத நீயேன்  ஊன்று கோலுடன்  கிரிவலம் வர வேண்டும் என்று யார் அழுதார்கள். இப்படி எல்லாம் நடந்தால் நீ மலையைச் சுற்றி வர முடியாது என கூறிக்கொண்டே எதிர்பாராத விதமாக 

அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த ஊன்று கோல்கள் இரண்டையும் வெடுக்கென பிடிங்கி தூர எறிந்து விட்டு அவர் பாட்டுக்கு சென்றுவிட்டார்.


 அந்தப் பெரியவருக்கு வலி தாங்க முடியவில்லை. கோபமும் வந்தது.  இப்படியாக ஒருவர் மனிதாபிமானம் இல்லாமல் செயலை செய்வான்என்று அவரைத் திட்ட ஆரம்பித்தார்.


  அந்தப் பெரியவருக்கு உடம்பும் மனசும் மெய்சிலிர்த்தது. ஆமாம் தனது உணர்விழந்த கால் மூலம்  தானாக எவ்வித  உதவியுமின்றி  ஜம்மென்று  நின்றார்.


 மெல்ல  மெல்ல காலடி எடுத்து நடக்க ஆரம்பித்தார். அவர் முகத்தில் ஒரு புன்னகை. அந்த இளைஞர் சென்ற திசை நோக்கி வணங்கினார்.


 தனது ஒரு காலில் உணர்வற்ற செயல் மாறி புதிய சக்தி கிடைத்தது போல சொந்தக்காலில் நடந்து கிரிவலம் சென்று வீட்டிற்கு திரும்பினார். தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடந்த விஷயத்தைச் சொன்னார். அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெரியவர் நன்றாக நடப்பது கண்டு ஆனந்தம் அடைந்தனர்  குடும்பத்திற்கு தன்னாலான  உதவிகளை பின்னாளில் செய்து தானும் மகிழ்ந்தார். அதன் பிறகு அப்பெரியவர் திருவண்ணாமலை விட்டு வேறு எங்கும் சென்றதில்லை.


 இந்த உண்மைச் சம்பவத்தை பகவான் பலரிடம் சொல்லியிருக்கிறார்.


 அண்ணாமலையைச் சுற்றி  கிரிவலம் வருவதால் பலன் உண்டு என்று சுட்டிக் காட்டவே இக் கதையை சொன்னார்.


 தனது இருபதாவது வயதில்,  அவரை அப்பெரியவரின்,  ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்தது நான் தான் என்றார் பகவான் ஸ்ரீ ரமணர்.


 பகவான் ஸ்ரீ ரமணரின் கருணையே கருணைComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,