ரணமமகரிஷி (49)

 பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்: 49

 உயர்வு என்பது இருக்கும் இடம் , அமரும் இடம் பொறுத்தது அல்ல.  உள்ளத்தில் வளரும் நல்லதொரு எண்ணங்களைப் பொறுத்ததே.


 பகவான் ஸ்ரீ ரமணரின் ஆசிரமத்திற்கு வந்த ஒரு வெளிநாட்டுக்கார பக்தர் கொஞ்சம் பருமனான உடல் வாகு உடையவர்.


 பொதுவாக ஆசிரமத்திற்கு வருபவர்கள், பகவானை தரிசனம் செய்யும்போது தரையில் உட்கார்ந்து பகவான் ஸ்ரீ ரமணரைப்  பார்ப்பதும், அவர்களின் ஆசி பெறுவதும்,  பஜனைப்பாடல்கள்  கேட்பதுமாக இருப்பார்கள்.


 வெளிநாட்டிலிருந்து வந்த அந்த பக்தர் தாம் தரையில் உட்கார சற்று சிரமப்படுவதால் சற்று தொலைவில் இருந்து  தானாகவே ஒரு நாற்காலி எடுத்து வந்து ஆசிரமத்தில் பகவான் இருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளியே அமர்ந்து இருந்தார்.


 இதனைப் பார்த்த பகவான் ஸ்ரீ ரமணரின் சீடர்கள், அவருடன் நெருங்கி பகவானை தரிசனம் செய்ய வரும் எவரும் அவருக்கு சரிசமமாக உட்காரக் கூடாது என்று அந்த பக்தரிடம் தெரிவித்தனர்.


 அந்த வெள்ளைக்காரப் பக்தரோ, எனக்கு தரையில் உட்கார்ந்து பழக்கமில்லையென்றும்,நான் அலுவலகத்திலோ, வீட்டிலோ நாற்காலியில் உட்கார்ந்துதான் பழக்கம் என்றார்.


 அந்த வெளிநாட்டு பக்தர் சொன்ன கருத்துக்களை அவர்கள் ஏற்கவில்லை. அந்த நாற்காலியை அவர்கள் எடுத்தனர். பின்னர் அந்த பக்தர் நிற்க வேண்டிய சூழ்நிலையானது.


 இந்த நிகழ்வுகளை எல்லாம் சற்று தொலைவில் இருந்த பார்த்துக்கொண்டிருந்த பகவான் ஸ்ரீ ரமணர் தனது சீடரை அழைத்து, அந்த வெளிநாட்டு பக்தர் அமருவதற்கு நாற்காலியை போடச் சொன்னார்.


 அந்த வெளிநாட்டு பக்தருக்கு நாற்காலி போடப்பட்டது.  அதில் அமர்ந்துக் கொண்டார். பகவான் ஸ்ரீரமணர் சொல்லித்தான் தனக்கு உட்கார நாற்காலி போடப்பட்டதென  அறிந்து கொண்டார்.


   பகவான் ஸ்ரீரமண ரிடம்  சென்று அந்த வெள்ளைக்கார பக்தர் கையெடுத்துக் கும்பிட்டு வணங்கினார்.


 என்ன இப்போது தங்களுக்கு திருப்தி தானே என்றார் பகவான் ஸ்ரீ ரமணர்.

 ஆமாம் என்று சொன்னார்  அந்த வெள்ளைக்கார பக்தர்.


 உங்களுக்கு   வேறென்ன சௌகரியம் தேவைப்படின் கேளுங்கள் என்றார் பகவான் ஸ்ரீ ரமணர்.


 அந்த வெளிநாட்டு பக்தர் மௌனப் புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பி மீண்டும் நாற்காலியில் வந்து அமர்ந்தார்.


 பொதுவாக, மேடைகளிளோ அல்லது விழாக்களிளோ முக்கிய பிரமுகர்கள்

 தனக்கு மற்றவர்களால் எவ்வளவு மரியாதை செய்யப்படுகிறது, அதில் ஏதும் குற்றம் குறை காணலாமா என்று தன்னை மட்டுமே யோசிப்பவர்கள் ஏராளம்.


 தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு வரும் பக்தர்களையும், உற்றுநோக்கி அவர்களுக்கு ஏதேனும் இடர்ப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதனை சரி செய்வது என்பது மேன்மையான செயல், இதனால்தான் எல்லோர் உள்ளங்களிலும் நிலைத்து நிற்பவர் பகவான் ஸ்ரீ ரமணர்.

 நம் இடத்துக்கு  வந்த அந்த வெளிநாட்டு பக்தருக்கு நாற்காலியில் உட்கார இடம் கொடுத்ததாலும் பகவான் ஸ்ரீ ரமணர் நிலையானது மேலும் உயருமே.


 உயர்வு என்பது, அமரும் இடத்தைப் பொறுத்தது அல்ல.  மற்றவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி செயல்படுவதும், உள்ளத்தால் மற்றவர்களை ஈர்த்து அவர்களின் மனதிலும் நிலைத்து நிற்பதே உயர்வு என்று தனது சீடரி டம் சொன்னார் பகவான் ஸ்ரீ ரமணர்.






Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,