நமது உடல் 70 சதவீதம் நீராலானது.

 நமது உடல் 70 சதவீதம் நீராலானது.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைசுற்றல், படபடப்பு ஏற்படும்.


உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், ரத்த ஓட்டம் சரியாக இருக் கும். ரத்த ஓட்டம் சரி யாக இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.


குறைந்த அளவு நீரைக் குடிப்பவர்களுக்கு, சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.


சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகி அறுவைசிகிச்சையின் மூலம் அதை அகற்றிவிட்டாலும்கூட, மீண்டும் சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அப்படியென்றால் அதற்கு இரண்டு பங்கு நீரை அவர்கள் குடிக்க வேண்டும்.


அதிக தண்ணீர் குடிக்காவிட்டால், மூலப்பொருட்களின் அடர்த்தி காரணமாக அடர்த்தியான சிறுநீர் வரும். இது உடல்நலனை பாதிக்கும்.


கால் வீக்கம், இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரகச் செயல் இழப்பு பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்தக் கூடாது. இப்படிப்பட்டவர்களின் உடலில் அதீதமான நீர் சேர்வது ஆபத்தில் முடியும்.


மனித மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் (Thirst Center) உள்ளது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது. 3 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது.


அதனால் இந்த வயதில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றாது. அவர்களுடைய தாகத்தை அறிந்து நீரை அளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவர் களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். ரத்த அழுத்தம் குறையும்.


நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர்!


இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை எவ்வளவு குடிக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீர் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. கோடை காலம், கடுமையான உடற்பயிற்சி, வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் உண்டாகும் நீர்ச்சத்து இழப்பினால் நீரின் தேவை இன்னும் அதிகரிக்கலாம்.


பொதுவாக நாம் தாகத்தின்போது மட்டுமே தண்ணீர் அருந்துகிறோம். அதுவே போதுமானது எனக் கூறமுடியாது. பிற நேரங்களில் உட்கொள்ளக்கூடிய திரவ ஆகாரங்களினாலும் உணவுப்பொருட்களின் வளர்ச்சிதை மாற்றங்களினாலும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கப்பெறுகிறோம். சொல்லப்போனால், செல்களால்  ஆன நம் உடலில், செல்களுக்கு வெளியில், கொள்கலன்போல் தண்ணீர் பாதுகாக்கப்படுகிறது. அதுதான் அதிகப்படியான நீர் இழப்பு (Dehydration) ஏற்படும்போது ஈடு செய்து நம்மைக் காப்பாற்றுகிறது. எப்போதுமே உடலில் உள்ள நீருக்கும், வெளியேற்றப்படும் நீருக்கும் இடையே  இருக்கும் சமநிலையில்தான்  பற்றாக்குறையில் இருந்து தற்காத்துக்கொள்ள இயலும். அதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம்.


குறிப்பாகச் சொல்ல வேண்டிய தகவல் என்னவெனில், தோராயமாக 1500 மி.லி தண்ணீர் ஒருநாளைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றால், அதுமட்டுமே உடலின் இயக்கச் சீர்பாடுகளை கட்டமைத்து சிறுநீராக வெளியேறுகிறது எனக் கணக்கில்கொள்ள முடியாது. இயல்பிலேயே உடலில் சுரக்கப்படும் நீர், தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும்.


உதாரணமாக, உமிழ்நீரில் 1,500 மி.லி, இரைப்பையில் 2000 மி.லி, பித்தநீரில் 500 மி.லி, கணையத்தில் 1,500 மி.லி, சிறுகுடலில் 1,500 மி.லி எனத் தண்ணீர் உடலின் அத்தனை பாகங்களிலும் சுற்றிச் சுழல்கிறது. குடல் பகுதியில் 1,400 மி.லி, (Colonic reabsorption), போர்டல் வெயின் பகுதியில் (Portal vein reabsorption)....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,