தமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள்

 தமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள்


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புத்தாண்டையொட்டி நேற்று பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்தும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து வரும் 67 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களை 95 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதால், கூடுதல் வாக்குப்பதிவு எந்திரம் மராட்டியம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது. கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டியது இருப்பதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் வாக்களிக்க சிறப்பு படிவம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி