மதமாச்சர்யங்களைக் கடந்த மகான்
மதமாச்சர்யங்களைக் கடந்த மகான்
(பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஆராதனை ஜனவரி 10, 2021)
ஒரு வேளாள பக்தர் பெரியவரைக் கேட்டார். ';சாமி, நான் காயத்ரி மந்திரம் சொல்லலாமா?;.'
பெரியவர் மாறாத புன்னகையுடன் சாஸ்திர சம்பிரதாய நியதிகளைப் பற்றியெல்லாம் பெரிதாகச் சொல்லாமல் ';உன் பக்தி வீண் போகாது. உனக்கு எவ்வளவு பசங்க?;' என்றுகேட்கிறார்.
அவர் '3 பெண்கள்'; என்கிறார்.
\;நல்லதாப் போச்சு. ஒரு பொண்ணுக்குகாயத்ரின்னு பேர் வை. இன்னொருத்தியை சந்தியான்னு கூப்புடு. கடைக்குட்டி சாவித்ரியாகஇருக்கட்டும். எப்பவும் அவங்களை வாய் நிறைய இந்தப் பேர் சொல்லிக் கூப்புடு. இந்த பேபி,லில்லி, பில்லில்லாம் வேணாம். உனக்கு சந்தியா காயத்திரி சொல்ற பலன் கிடைக்கும் சந்தோஷமா போய்ட்டு வா; 'என்று அவரை மனம் நோகாமல் அனுப்பி வைக்கிறார் மஹாஸ்வாமிகள்.
காஞ்சி மடம் அருகில் இன்றும் ஒரு மசூதி உண்டு. வேளை தவறாமல் அதன் ஒலிபெருக்கியில் தொழுகை ஒலி கேட்டபடி இருக்கும். இதைக் காஞ்சி மடப் பக்தர்கள் சிலர் இடையூறாகப் பார்த்து பெரியவரிடம் சொல்லி அவர் சிபாரிசில் மசூதியை வேறு இடம் மாற்ற முயற்சி செய்தார்கள். பெரியவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். ; 'ஏன், நம்முடையது மட்டும் தான்
மடமா, அவர்களுடையதும் கோவில் தான். அவர்கள் தொழுகையை இடையூறு என்று ஏன் பார்க்கிறீர்கள்?'; என்றார் அவர்.
பெரியவரின் பேதமற்ற பார்வைக்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு அவர் பக்தர்களிடையே பிரபலமான ஒரு உண்மைச் சம்பவம். அவருடைய விஜய யாத்திரையில் கர்னூல் அருகில் ஒரு ஜமீன் கிராமத்தில் தங்க நேரிட்டது. அந்த கிராமத் தலைவர் உட்பட பலரும் சில நாட்கள் அங்கே தங்கிப் போகும்படி பெரியவரை வேண்டினார்கள்.
அவருடைய சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருவதாகச் சொன்னார்கள். அதற்கேற்றபடி ஸம்ருத்தியாக மலர்களை பூஜைக்குத் தந்து உதவினார்கள்.
பக்தர் கூட்டம் தங்க அழகான சத்திரம். பெரியவர் ஸ்னானத்திற்கு வளமான புஷ்கரணி.
இயற்கைச் சூழ்நிலை. வேறு என்ன வேண்டும்?
முதல் நாள் பூஜை ஆரம்பிக்கும்போது தான் பக்தர்கள் பார்த்தார்கள். ஸ்வாமிகள் பூஜைக்கு அர்ச்சிக்க வேண்டிய வில்வ தளங்கள் இல்லை. அருகில் சில இல்லங்களிலும் வெளிப் பிரதேசத்திலும் சல்லடை போட்டுத் தேடினார்கள். வில்வ மரத்தின் சுவடே தெரியவில்லை.
பெரியவர் பூஜைக்குத் தயாராகி வில்வ இலைக்கூடையைத் தேடினார். கைங்கர்யகாரர்கள் தயங்கியபடி விஷயத்தைச் சொன்னார்கள். பெரியவர் ;\வில்வம் இல்லாமல் இருக்காது. நல்லாதேடிப்பாருங்கோ \என்றார். அப்போது ஒரு அடியார் அவசர அவசரமாக ஒரு கூடை நிறைய பச்சைப் பசேலென்று வில்வ இலைகளை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.
சத்திரத்தின் வெளியே ஒரு ஓரமாகக் கிடைத்ததாகச் சொன்னார். “யார் கொண்டு வந்தது என்று தெரியவில்லை; என்றார். அன்றைய பூஜை விமரிசையாக நடந்தது. மறு நாளும் இப்படியே நடக்கவே, பெரியவர் “நாளைக்கு சீக்கிரமா யாராவது தயாராகி யார் கொண்டு வருகிறார்கள் என்று கவனித்து அவர்களை அழைத்து வாருங்கள்” என்று சொன்னார். அது மாதிரியே காத்திருந்து பூஜைக்கு இலை வைத்த ஒரு 12 வயது சிறுவனைக் குளிப்பாட்டி அழைத்து வந்தார்கள். பையன் நல்ல தமிழில் பேசினான்
ங்க வில்வ இலைக்காக கஷ்டப்படறதைப்பார்த்தேன். எங்கே என்னைப் பார்த்தா வில்வம் வேண்டாம்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்து இலையை வைச்சுட்டுப் போயிட்டேன்.;என்றான்.தம் பெயர் புரந்தர கேசவலு என்றும்
வீட்டில் பெரியவர்கள் யாராவது சாதுவைப் பார்த்தால் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததாகவும் சொன்னான். ;எதுக்கும் ஆசைப்படக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா எனக்கு ரெண்டே ரெண்டு ஆசை. எனக்கு சுமாராக சங்கீதம் தெரியும். பக்திப் பாடல்கள் பாடுவேன். உங்க முன்னாடி சில பாடல்கள் பாடணும் என்றான்.
இரண்டாவது ஆசை பற்றிக் கடைசி நாள் சொல்வதாகச் சொன்னான்.
பெரியவர் முன்னால் அவன் பக்தியுடன் தினமும் பாடினான். உச்சரிப்பில் பிழைஇருக்கும்போது அவ்வப்போது பெரியவர் அவனைத் திருத்துவார். பெரியவர் அந்த கிராமத்தில் தங்கியிருந்த 21 நாட்களும் அவன் வில்வ இலை கைங்கர்யம் செய்தான். விடைபெறும் கடைசி நாள் அன்று பெரியவர் மறக்காமல் அவனுடைய இரண்டாவது ஆசை என்ன என்று கேட்டபோது ;'எனக்கு மோக்ஷம் கொடுங்க சாமி. பெரியவங்களைப் பார்த்தா வேற எதுவும் கேட்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க'; என்றான். அங்கு சூழ்ந்திருந்த அனைவரின் கண்களும் குளமாயின.
பல வருடங்கள் கழித்து காஞ்சி காமாட்சியம்மன் புஷ்கரணியில் காஞ்சி மஹாஸ்வாமிகள் ஸ்னாநம் செய்துகொண்டிருக்கிறார். ஸ்னாநம் முடிந்து கரையேறி மறுபடியும் குளிக்கச்செல்கிறார். இதே மாதிரி 7,8 முறை செய்கிறார். வியந்து அவரையே பார்க்கும் பக்தர்களிடம்சொல்கிறார்: \முன்னம் ஒரு பக்தன் ஒரு விஜய யாத்திரையின் போது என் பூஜைக்கு உதவி
செய்து மோக்ஷம் கொடுங்கள் என்று கேட்டான். இன்று அவன் தேகத்தை உகுத்து விட்டான்.அவனுக்கு இன்னும் 7,8 பிறவி பாக்கி இருப்பதால் 7,8 தடவை காமாக்ஷி குளத்தில் மூழ்கிஅவனுக்கு நல்வழி கிடைக்கப் பிரார்த்தனை செய்தேன். இனி அவனுக்குக் கவலையில்லை.\என்கிறார்.
கடைசியாக ஒரு சம்பவம்
. மயிலை ஸமஸ்க்ரிதக் கல்லூரியில் பெரியவர் முகாம். பெரியவர்
பக்தர்கள் சூழ லஸ் வழியாக வருகிறார். பக்தர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டு பதைபதைக்கிறார்கள். ஒருவர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ;\வேற வழியா போகலாமே\;என்று சொல்கிறார். \;ஏன்?;' என்று பெரியவர் கேட்கையில் 'அருகில் ஒரு திராவிடர் கழகக்கூட்டம் நடப்பதாகச் சொல்கிறார். ;ராமசாமி நாயக்கரும் இதுக்கு வருகிறார். உங்களைப்பார்த்தா ஏதாவது பிரச்னை வரும்' என்கிறார்'. ;இருக்கட்டுமே. அவர் கொள்கை அவருக்கு. என் வழி எனக்கு '; என்று சொல்லியபடி முன்னேறுகிறார். ஈ வே ரா பெரியவர் வருவதைப் பார்த்து ;'பெரியவங்க வர்ராங்க. யாரும் எதுவும் பேசாமல் அவங்களுக்கு வழி விடுங்க;' என்கிறார். ஜாதி மதம் கடந்த அந்த உன்னத மனிதர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கூட்டத்தைக் கடந்து செல்கிறார்.
தொகுப்பு ஸ்ரீதர் சாமா
Comments