தொப்பையை குறைக்க

 தொப்பையை குறைக்க டிப்ஸ்!!




எலுமிச்சை ஜூஸ் :



👉 தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து நாளடைவில் தொப்பையை மறைந்துவிடும்.


வெள்ளை சாதத்தை தவிர்க்கவும் :


👉 தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.


தண்ணீர் குடிக்கவும் :


👉 பெல்லி குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.


இனிப்பு உணவுகளை தவிர்க்கவும் :


👉 இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதில் தடையை உண்டாக்கும்.


பூண்டு சாப்பிடவும் :


👉 தினமும் காலையில் 2-3 பூண்டுகளை பச்சையாக சாப்பிட்டு, பின் எலுமிச்சை ஜூஸை குடித்தால், உடல் எடை ஆரோக்கியமான வழியில் விரைவில் குறைவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.


அசைவ உணவுகளை தவிர்க்கவும் :


👉 வயிற்றில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க வேண்டுமெனில், முதலில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


பழங்களை சாப்பிடவும் :


👉 தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு கப் பழங்களை சாப்பிட்டால், தொப்பை குறைவதோடு, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.


பொரித்த உணவுகளை தவிர்க்கவும் :


👉 தொப்பை குறைய வேண்டுமெனில், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் கொழுப்புக்களை அதிகரிக்கும்.


பச்சை கறிவேப்பிலை :


👉 பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், கறிவேப்பிலையை காலையில் எழுந்ததும் சிறிது உட்கொண்டு வாருங்கள்.


அன்னாசி :


👉 அன்னாசி மிக குறைவான அளவே கலோரி உள்ளது. 100 கிராம் அன்னாசியில் 40 சதவீதமே உள்ளது. அன்னாசியில் 90 சதவீதம் நீர்சத்து உள்ளது. மேலும் அதிலுள்ள பொட்டாசியம் அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. இதனால் கொழுப்புகள் கரையும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,