பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

 திறப்பு விழாவின் போது இடிந்து விழுந்த அம்மா மினி கிளினிக்... பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்ட அமைச்சர்



கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லக் கூடிய சாய்வு தரையின் கை பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது.


கரூரில் அம்மா மினி  கிளினிக் திறப்பு விழாவின் போது கட்டடத்தின் நடைபாதை கைபிடி சுவர் இடித்து விழுந்தது. இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார்.


கரூர் மாவட்டம் கொசூரில் அம்மா மினி கிளினிக் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அங்கு புதிய கட்டடம் இல்லாததால் அங்கிருந்த சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக


அம்மா கிளினிக்காக பயன்படுத்த முடிவு செய்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு இன்று மாலை அம்மா கிளினிக் திறந்து வைத்தார்.


திறப்பு விழா முடிந்து அமைச்சர் வெளியே வரும் முன்பே, கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லக் கூடிய சாய்வு தரையின் கை பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், அருகில் நின்றிருந்த குழந்தைகள் உட்பட இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு இருந்த மக்களிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்டுள்ளார். அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,