நங்கையின் ஓராயிரம் ஆசைகள்
நங்கையின் ஓராயிரம் ஆசைகள்
தென்றலோடு நடனமாடும் தென்னங்கீற்றுப் போல் நீயும் நானுமாக வேண்டும்
நிலவைத் தொட்டிடமுனையும் மேகமாக வேண்டும் நான் அதில் உன்முகம் பார்க்க வேண்டும்
நீரோடை மீன்போல் உன்விழிக்குள் நீந்திக்குதிக்க நீ இதழ்ரசம் அருந்தியபடி சுவையறிய வேண்டும்
முள்ப்புதருள் முயல்கள் போல் செவியாட பாம்பின் பிணைப்புப்போல் கலந்தாட வேண்டும்
நெளிந்து வரும் நதிபோல் என் தேகம் வளைய நீட்டிச்செல்லும் இரவுகளாக காரிருள் சூழ வேண்டும்
ஈச்சம் பாயும் சுருளாத வரம் வாங்க வேண்டும்
மூங்கில் பாய்விரித்தாற் போலாகவேண்டும்
கண்ணாடி வளையலோ சில்லாகிச் சிதறி கோலம் போடவேண்டும் எனதான தேக்குமரத்தேகத்தில்
மெட்டிகளும் முணுமுணுக்க கொலுசு ஓசையும் காதைக்கிழிக்க தூரிகையோ நழுவிட மெழுகாக நிற்கவேண்டும்
கால் ஊனம் கொண்ட ஓர் ஆமைப் போல் காலமெல்லாம் உன்னுடனே வாழவேண்டும்
வியாதி தீர்த்திடும் நறுந்தேன் போல் நீயாக வேண்டும்
என் பித்தம் கலைத்து சித்தமாக வேண்டும்
வெந்தழலயற்று சீதலமாக
உன்வார்த்தைக் கோவைக்குள் நான் ஒளிந்திருக்க வேண்டும்
பனிப்போன்ற பார்வையால் பாவை என் நெஞ்சில் ஈட்டிமுனை தைத்தது போலாக வேண்டும்
கட்டவிழ்த்த மலராக உன் மீது படர்ந்திடல் வேண்டும் விளக்கிரண்டும் தீப்பற்றி வெறுமையிருள் போக்க வேண்டும்,,
________________________________________________________________________________________________________
Comments