தெருவோரக்கடையில் சாப்பிட்ட அஜித்குமார்
தெருவோரக்கடையில் சாப்பிட்ட அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் நண்பர்களுடன் புண்ணிய தலங்களுக்கு பயணம் சென்ற தகவல் மற்றும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுள்ளார். பின்னர் சாரநாத், வாரணாசி பகுதிகளுக்கு சென்றுள்ளார். தொப்பி மற்றும் முக கவசம் அணிந்து இருந்ததால் யாரும் அவரை அடையாளம் காணவில்லை. வாரணாசியில் தெருவோரத்தில் இருந்த ஒரு சாட் மசாலா கடைக்கு சென்று உணவு ஆர்டர் கொடுத்தார். கடை உரிமையாளருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. சாப்பிடுவதற்காக முக கவசத்தை கழற்றியபோது அஜித்குமார் என்பது தெரிந்து ஆச்சரியமானார். பின்னர் அவர் அஜித்குமாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. கடை உரிமையாளர் கூறும்போது, ‘பனாரசி சாட் உணவு வகைகளை அஜித் விரும்பி வாங்கி, அவற்றை மற்ற சுற்றுலா பயணிகளைப்போல் நின்று கொண்டே சாப்பிட்டார். சில உணவு வகைகளை எப்படி தயாரிப்பது என்று கேட்டு அவற்றை போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார்’ என்றார். அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக கியூமா குரோஷி நடிக்கிறார். வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி
Comments