நந்திபெருமானுக்கு மகரசங்கராந்தி விழா

 நந்திபெருமானுக்கு மகரசங்கராந்தி விழா



தஞ்சை பெரிய கோயில் மகாமண்டபத்திற்கும் ராஜராஜன் திருவாயிலுக்கும் இடையே அமைந்துள்ள உயரமான மேடையோடு கூடிய மண்டபத்தில் 12 அடி உயரமுடைய மிகப்பெரிய நந்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த நந்தியும், மண்டபமும் நாயக்க மன்னர்களின் கொடைகளாம். ராஜராஜன் வைத்த நந்தி, ராஜராஜன் திருவாயிலுக்கு வெளியே இருந்திருக்கலாம் என்றும், அது தற்போது வராகி அம்மன் கோயிலுக்கு அருகே இருப்பதாகும் என்று கருதப்படுகிறது.

இந்த நந்தி மண்டபம் சுமார் 5 அடி உயரமுடைய மேடை மீது 16 தூண்கள் கொண்டு எடுக்கப்பெற்றுள்ளது. மேற்கூரை ஓரே மட்டமாக இல்லாமல் நடு அங்கணம் உயரமாகவும் மற்ற இரு அங்கணங்களும் தாழ்வாகவும் உள்ளன. ஈசனாரை நோக்கிய வண்ணம் படுத்த நிலையிலுள்ள இந்த நந்தி உருவால் பெரிதெனினும் எழிலால் சோழர்களின் படைப்பவைவிடச் சற்றுக் குறைவுடையதாகவே திகழ்கின்றது.
இந்த நந்திபெருமானுக்கு மகரசங்கராந்தி விழா பொங்கல் பண்டிகையையொட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. நேற்று மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி பக்தர்கள், வியாபாரிகளால் வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சவ்சவ், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற பல்வேறு வகையான காய்களாலும், ஆரஞ்சுபழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பால்கோவா போன்ற பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மொத்தம் 300 கிலோ காய்-கனிகள், மலர்கள், இனிப்புகளால் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி