பக்வான் தாஸ்

 பக்வான் தாஸ் பிறந்த தினமின்று


பகவான் தாஸ் ஓர் இந்திய இறை மெய்யியலாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பிரித்தானிய இந்தியாவில் மத்திய சட்டப் பேரவையில் அங்கத்தினராக இருந்தவர். இந்துத்தானி பண்பாட்டு சமூகத்துடன் இணைந்திருந்த பகவான் தாசு, அரசியல் எதிர்ப்பைத் தெரிவிக்க "கலவரங்களில்" ஈடுபடுவதை கண்டித்தார். பிரித்தானிய அரசு இந்தியாவிற்கு விடுதலை வழங்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டால் பலமுறை ஆங்கிலேய அரசின் கொடுமைகளுக்கு ஆளானார்.
வாரணாசியில் பிறந்த பகவான் தாஸ் 1894ஆம் ஆண்டில் அன்னி பெசண்ட்டின் பேச்சால் கவரப்பட்டு இறை மெய்யியல் சங்கத்தில் இணைந்தார். 1895ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரிவின்போது அடையாறு இறை மெய்யியல் சங்கத்தில் சேர்ந்தார். இந்த சங்கத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு எதிரான குழுவில் செயல்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார். 1955ஆம் ஆண்டில் இவரது சிறந்த தேசியப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி