பாப்பம்மாள் பாட்டி

 









பாப்பம்மாள் பாட்டி
60 வயதைக் கடந்து ஆரோக்கியமாக வாழ்வது அதிசயம். அதுவே, 100 வயதைக் கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்தால், அது பேரதிசயம். அப்படி ஓர் பேரதிசயத்துக்குச் சொந்தக்காரி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள். இன்ஸ்டன்ட் உணவு, இன்ஸ்டன்ட் லோன் என்று நம் படு வேகமாக நம் வாழ்வியல் முறையில், நோய்களும் இன்ஸ்டன்டாக வந்துவிடுகின்றன. ஆனால், 105 வயதிலும் இயற்கை விவசாயம், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், அரசியல் என்று சுறுசுறுப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பாப்பம்மாள் பாட்டி.
பாப்பம்மாள் பாட்டிபாப்பம்மாள் பாட்டி
அவரைச் சந்திப்பதற்காக, தேக்கம்பட்டியில் உள்ள பாப்பம்மாள் வீட்டுக்குச் சென்றோம். மேகங்கள் படையெடுத்து, மழைக்கு தயாராகிக்கொண்டிருந்தன. மேற்குத் தொடர்ச்சி மலைக் காற்று சிலிர்க்க வைத்தது.
வீட்டின் முன்பு அமர்ந்து, தனது 5 அடி கூந்தலை மைகோதி வைத்து கோதிக்கொண்டிருந்தார் பாப்பம்மாள். ``வாங்க கண்ணு… நீங்கதான் கோயம்புத்தூர்ல இருந்து வர்றீங்களா..? 3 நாளா கொஞ்சம் உடம்பு சரியில்ல. அவங்கள இன்னொரு நாள் வர சொல்லிக்கலாம்னு சொன்னாங்க. ஆனா, இவ்ளோ தூரம் வந்துட்டு, வேண்டாம்னு சொன்னா, நீங்க பொக்குனு போய்டுவீங்க. அதான், நான் ரெடியாகிக்கறேன்... வரச்சொல்லுனு சொல்லிட்டேன். உக்காருங்க சாமி. டிபன் சாப்டுங்க” என்றார்.
பாப்பம்மாள் பாட்டிபாப்பம்மாள் பாட்டி
``சாப்பிட்டுவிட்டோம். பாட்டிமா... வேண்டாம்” என்றதும்... ``கொஞ்சம் காப்பியாச்சு குடிங்கப்பா” என்று உபசரித்தார். 105 வயதிலும் பாட்டிக்கு பற்கள் இருக்கின்றன. அவரது பேச்சும் தெளிவாகவே இருந்தன. அங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள பாப்பம்மாளின் தோட்டத்துக்குச் சென்றோம். யாரின் உதவியில்லாமல் அவராகவே, காரில் ஏறி அமர்ந்தார்.
``உடம்பு சரியில்லயே பாட்டி, உங்களால முடியுமா?” என்று கேட்டோம். என்னைய யாராச்சும் பார்க்க வந்தா, எனக்கு தெம்பு வந்துடும்... அப்படியே மெதுவா போய்க்கலாம் வாங்க” என்று சிரித்தார். சில நிமிடங்களில் தோட்டத்துக்கு விரைந்தோம். தோட்டத்தில் அமர்ந்தபடி பேசத் தொடங்கினார் பாப்பம்மாள். ``தேனாவரம்தான் எங்க சொந்த ஊரு. நான் மூணு மாச குழந்தையா இருந்தப்ப தேக்கம்பட்டி வந்துட்டோம். ரூ.40-க்கு இடம் வாங்கி வீடு கட்டினாங்க.
பாப்பம்மாள் பாட்டி
அப்பா, அம்மா மளிகைக் கடை வெச்சு நடத்திட்டு இருந்தாங்க. அம்மா, அப்பா சின்ன வயசுல இறந்துட்டாங்க. பாட்டிதான் எங்களை வளர்த்தாங்க. எங்க பாட்டி கெண்டேபாளையத்துல கடை வெச்சுருந்தாங்க. வெறும் 50 ரூபாய்க்கு வீடு, கடை எல்லாம் வித்துட்டு அவங்க எங்கக் கூட வந்துட்டாங்க.
அம்மா 3 பவுன் நகை போட்ருந்தாங்க. அத அடமானம் வைக்க நான் போனேன். ஆனா, எனக்கு ரொம்ப சின்ன வயசு. வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லுனு சொல்லிட்டாங்க. அப்புறம் எங்க பாட்டியைக் கூப்பிட்டு போனேன். அப்ப ஒரு பவுன் 13 ரூபாய். 3 பவுனுக்கு ரூ.50 கொடுத்தாங்க. அதை வெச்சு அக்கா கல்யாணத்தை முடிச்சோம். எங்க அப்பா, அம்மா மாதிரியே நானும் மளிகைக் கடை வெச்சேன். நானும், எங்க பாட்டியும் கடைய பாத்துக்கிட்டோம். இதுதான், அதுதானு இல்லாம, எல்லா வேலையும் செஞ்சேன். 20 வயசுல கல்யாணம் ஆச்சு. அப்புறம், எங்க பாட்டியும் இறந்துட்டாங்க.
எங்களுக்கு குழந்தை பொறக்கல. கடைல வியாபாரம் நல்லா போச்சு. ஹோட்டல் கடை வெச்சோம். 4 ஏக்கர் 29 சென்ட் நிலத்தை வெறும் 700 ரூபாய்க்கு வாங்கினோம். அப்புறம் 2 ஏக்கர் 7 சென்ட் 3,000 ரூபாய்க்கு வாங்கினேன். இன்னும் மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கினோம். கிட்டத்தட்ட 10 ஏக்கர் பூமியாகிடுச்சு. அக்ரி காலேஜ்ல விவாதக் குழு அமைப்பாளரா இருந்தேன்” என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பெயர்களை வரிசையாகக் கூறி அசர வைத்தார்.
கலைஞரை பார்க்க ஆசைப்பட்டேன். ஸ்டாலினை பார்த்து என் ஆசைய சொன்னேன். ஆனா, மூணு மாசத்துல கலைஞர் இறந்துட்டாரு. அப்புறம், குன்னூர் வந்தப்ப ஒருதடவை ஸ்டாலினை பார்த்து பேசினேன். கடைசிவரை கட்சிக்காகப் பாடுபடுவேன். எல்லா கூட்டத்துலயும் முதல் ஆளா கலந்துப்பேன். சாகறதுக்குள்ள இன்னொரு தடவை ஸ்டாலினை பார்த்து பேசணும்னு ஆசையா இருக்கு” என்றவரிடம், அவர் ஆரோக்கியத்தின் ரகசியத்தைக் கேட்டோம். ``நாங்களா அந்தக் காலத்துல நல்லா பாடுபட்டோம்.
நல்லா உழைச்சும். ராகி, கம்பு, சோளம், வரகு, சாமை, தினைனு ஆரோக்கியமா சாப்பிட்டோம். ஏதாவது பண்டிகைனாதான் அரிசிச் சோறு. அப்பவும், கொஞ்சமாதான் சாப்பிடுவோம். இப்பவும், காலைல குளிச்சப்புறம், வாழை இலைலதான் சாப்பிடுறேன். நல்லா வெந்துருக்கணும். ஒரு, இட்லி, ஒரு தோசைனு அளவா சாப்பிடுவேன். வெள்ளாட்டுக்கறி ரொம்பப் பிடிக்கும். கறி நல்லா வெந்துருந்தா, ரெண்டு இட்லி சாப்பிடுவேன். கொத்துமல்லி காப்பி மட்டும் குடிப்பேன்.
அப்ப யார் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்போம். இப்ப, `நீ என்ன சொல்றது, நான் என்ன கேக்கறதுனு’ இருக்காங்க. வயசானவங்களை யாருக்கும் பிடிக்கறது இல்லை. அப்ப நாங்க ஆஸ்பத்திரி பக்கமே போக மாட்டோம். மருந்தை எல்லாம் கண்லயே பார்த்தது இல்ல. தலை வலி, வயித்து வலி எல்லாத்துக்கும் கை வைத்தியம்தான். உணவுதான் மருந்து. இதையெல்லாம் விட்டதாலதான், சீக்கு
கெட்டப்பழக்கம் எல்லாம் ரொம்ப சீக்கிரமா பழகிடுறாங்க. இன்னும் கொஞ்ச நாள் இருந்து, பாக்காத விஷயத்தை எல்லாம் பார்க்கணும். கட்சில எல்லா வேலையும் செஞ்சு, கஷ்டப்படுற மக்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்” என்று முடித்தார்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,