மார்கழித் திங்கள்'

 நடிகைகளுடன் இணைந்து சுஹாசினி மணிரத்னம் எடுத்த முயற்சி!



தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் நோக்கோடு, நடிகை சுஹாசினி மணிரத்னம் 'மார்கழித் திங்கள்' என்ற நகர்வை முன்னெடுத்துள்ளார். இதில், தொழில் ரீதியான பாடகர்கள் அல்லாத 9 நடிகைகள் இணைந்து ஆண்டாளின் 'திருப்பாவை' முதல் பாசுரத்தைப் பாடியுள்ளனர்.
இதுபற்றி சுஹாசினி மணிரத்னம் கூறும்போது, "உமா பத்மனாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனு ஹாசன், கனிஹா, ஜெயஶ்ரீ, ஷோபனா நான் என மொத்தம் ஒன்பது பேர் இப்பாசுரத்தைப் பாடியுள்ளோம். நாங்கள் தொலைப்பேசியிலேயே பாடிய பாடல்களை, சுபஶ்ரீ தணிகாசலம் அழகாகத் தொகுத்துள்ளார். பாடல்களுக்கான ஒளிப்பதிவை பகத் மேற்கொண்ட போதும் சிலர் தங்களது தொலைப்பேசியிலேயே காணொளியாகப் பதிவு செய்தனர். ரவி ஜி இசையமைக்க, படத்தொகுப்பு பணிகளைக் கெவின்தாஸ் கவனித்துக்கொண்டார். இந்த வருடம் மட்டுமின்றி அடுத்த வருடமும் இது போல ஒரு பாசுரத்துடன் உங்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கம்" எனத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,