எந்தன் துணையே...
எந்தன் துணையே...
--கவிதை
இருள் வானமாய் நான்,
பகலாய் மாறிப்போனாய் ...
வாழ்வில் ஒளியூட்டும் நிலவாய்
வந்தால் அவள் ...
வெண்மை மேகமாய் அவளின்
தூய அன்பே...
மழையாய் காதலை கொட்டி தாகம் தீர்ப்பவளாய் ...
விண்மீனாய் புன்னகை சிதறும்
முத்துக்கள் ஏந்தியவள்...
தோகையாய் நானோ, பறவையாய்
பறந்தவள் என்னுள்...
புவியாய் வளம் வந்தேன்
தூய தேசத்தை...
கதிரவனாய் கோபித்தாலும் கரைத்து
விடும் நேசம்...
குளுமையாய் கொட்டும் மகிழ்ச்சி
உன்னுடன் இருக்கயில்...
நட்சத்திரங்களாய் ஆசைகளை அலங்கரித்தோம் அழகாய் வாழ்விலே...
எரிகற்களையும் நேசித்தோம் சோதனை தகர்க்க உதவியாய்...
கோள்களாய் சுற்றி திரிந்தோம்
எல்லையற்ற உலகிலே ...
நீல ஆகாயமாய் நீண்டு இருப்போம்
நித்தமாய் உயிரே எந்தன் துணையே..!!!
சிறுகவி மு.மாஜிதா.
Comments