ஞாயிறு திரை மலர்




 ஞாயிறு திரை மலர்  03/01/2021                      










====================================================================




பெரும்பான்மையான தமிழ் இல்லங்களின் ஞாயிறுகளை அலங்கரித்த கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரர். மேடை நாடக நடிகர், பண்பலை அறிவிப்பாளர், பாடலாசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், திரையிசை ஆர்வலர் எனப் பல அவதாரங்கள் எடுத்தவர். அவர் ஆனந்த விகடனுக்கு வழங்கிய நேர்காணலில் இருந்து சில பகுதிகளை இங்கே நன்றியுடன் பிரசுரம் செய்கிறது வணக்கம் லண்டன்.
“டி.எம்.செளந்தர்ராஜன் – எஸ்.பி.பி முதல் ஏ.ஆர்.ரஹ்மான் – தேவா வரை… பல இசைக்கலைஞர்களுடன் இணைந்து பயணித்திருக்கிறீர்கள். சிலருடன் இணைந்து பணியாற்றியும் உள்ளீர்கள். அவர்கள் காலத்து இசைக்கும், நிகழ்காலத்து இசைக்கும் என்ன மாதிரியான வேறுபாட்டை உணர்கிறீர்கள்?”
“அந்தக் காலத்தில் இசை என்பது ஒரு கூட்டு முயற்சியாக இருந்தது. ஒரு பாடலைப் பார்க்காமலேயே, அதன் இசை நுணுக்கங்களைக் கேட்டபடியே அது படத்தில் எந்தச் சூழலில் இடம்பெறுகிறது, எந்த இடத்தில் கதை மாந்தர்கள் நின்று பாடுகிறார்கள் என எல்லாவற்றையும் உணரமுடியும். அத்துணை ஆழமும் அழுத்தமும் அக்காலத்துப் பாடல்களில் இருக்கும். ஆனால், இன்று உருவாகும் பல பாடல்கள் ‘இன்ஸ்டன்ட்’ என ஆங்கிலத்தில் சொல்வதைப்போல உடனடி ஆக்கத்தில்தான் உருவாகின்றன. படத்தின் கதை, கதை மாந்தர், கரு, இடம், காலம் இவை எல்லாவற்றையும் உணர்ந்து இசைப்பதற்குப் பதிலாக, வெறும் மேற்கத்திய இசையின் தாக்கத்தை மட்டுமே வைத்து உருவாகின்றன. உதாரணமாக, ஒரு கிராமத்துப் பின்னணியிலிருக்கும் பாடலில்கூட மேலைநாட்டு இசைக்கருவிகளும், ஒலிகளும் இருப்பது இந்த மண்ணின் தன்மையை இசையால் உணர்த்தாது.”
“ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவு… அவர் பாடல்களில் உங்கள் பங்கு என்னவாக இருந்தது?”
“ரஹ்மானை முதன்முதலில் பேட்டியெடுத்தது நான்தான். அங்கு தொடங்கியது எங்கள் உறவு. ‘ஜென்டில்மேன்’ படத்தின் வெளியீட்டுக்குப் பின், ஒரு தமிழ் வார இதழ், அவர் இசையை மிக அருவருக்கத்தக்க முறையில் விமர்சித்திருந்தது. அதில் கொஞ்சம் துவண்டுபோயிருந்தார். அப்போது நான் அவரைப் பேட்டி காண நேரம் கேட்டபோது, முதலில் மறுத்தார். பின்னர், பேட்டிக்கான தலைப்பு, ‘ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு புதிர்’ என அவரிடம் கூறினேன். உடனே ஒப்புக்கொண்டார். பிறகு, அவர் இசையில் இரண்டு பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ‘தெனாலி’ படத்தில் ஒரு பாடலும், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ஒரு பாடலும் என யாழ் தமிழில் இரு பாடல்கள் எழுதியுள்ளேன். 1993-ல் நான் பார்த்த அதே மென்மையான, அமைதியான, தன்னடக்கமான ரஹ்மானைத்தான் இன்றும் பார்க்கிறேன்.”
“தெனாலி படத்தில் உங்களின் பங்கு மிக முக்கியமானது அல்லவா?”
“கமலை எனக்கு ‘தெனாலி’க்கு முன்னரே தெரியும். பலமுறை அவரை வியந்திருக்கிறேன். ஒருநாள் அவர் என்னைத் தொடர்புகொண்டு, ‘நீங்க எனக்குத் தமிழ் கத்துக்கொடுக்கணும்’ எனக் கேட்டார். நான் உடனே ‘உங்களுக்கே பல வட்டார வழக்குத் தமிழ் தெரியுமே, நான் என்ன கற்றுக்கொடுத்துவிட முடியும்’ என்றேன். ‘எனக்கு நீங்க இலங்கைத் தமிழ் கத்துக்கொடுக்கணும்’ என்றார். நான் மீண்டும், ‘இலங்கைத் தமிழ் என்றொரு தமிழ் இல்லை’ என்றதும், ‘இல்லை இல்லை. இந்த யாழ்ப்பாணம் பக்கம் பேசுவாங்கல்ல, அந்த வகைத் தமிழ்’ என்றார். நான் முதலில் யாழ் தமிழ் நன்றாகப் பேசும் என் நண்பர் ஒருவரை அனுப்பிவைக்கிறேன் என்றேன். ஆனால், அதை மறுத்த கமல் என்னையே மீண்டும் அழைத்தார். நாடக மேடைகளுக்காக யாழ் தமிழில் வசனங்கள் இயற்றியுள்ளேன். அந்த அனுபவத்தில் ‘தெனாலி’ படத்தில் கிரேஸி மோகன் கமலுக்காக எழுதிய எல்லா வசனங்களையும் யாழ்ப்படுத்தினேன். ஒரு பாடலையும் யாழ் தமிழில் மாற்றிக்கொடுத்தேன்.”
“அப்துல் ஹமீது என்றால் குரலும் தமிழும்தான். அதைத்தாண்டி உங்கள் நினைவாற்றலும் உங்களுடைய அடையாளமாக இருக்கிறதே… 85 ஆண்டுக்கால தமிழ்த் திரையிசையின் நடமாடும் தரவுக்கூடமாக இருக்கிறீர்களே?”
“அதுவும் இலங்கை வானொலியில் கிடைத்த அனுபவம்தான். நான் அங்கே ஆறு மாதகாலப் பயிற்சியில்தான் இருந்தேன். எங்கள் பயிற்சிக் காலத்தில் எங்களுக்குத் தரப்பட்ட முகாமையான பொறுப்பு, நிலையத்திலிருந்த இசைத் தட்டுகளையெல்லாம் வரிசை பார்த்து அதன் படம், பாடல்கள், பாடியவர்கள் என எல்லாவற்றையும் ஒரு பதிவேட்டில் எழுதிவைப்பதுதான். அதனால், எனக்குப் பெரும்பான்மையான பாடல்களின் விவரங்கள் நன்றாகத் தெரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதற்குத் தூண்டுகோல், என் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். அவர்கள் ஒரு பாடலைப் பாடும்போது, அதன் விவரம், வரிகள் என எல்லாம் எனக்குச் சரளமாக வந்துவிடும். ஆனால், அதையே பேச்சுவாக்கில் கேட்டால் என்னால் கூற இயலாது.”
“ ‘சரிகமப’வில் உங்களுடைய பங்கு என்னவாக இருக்கும்?”
“இன்றைய ரியாலிட்டி யுகத்தில் ஏற்கெனவே பல சேனல்கள் தங்களின் நிகழ்ச்சிகளுக்கு என்னை நடுவராக அழைத்துள்ளனர். தொகுப்பாளராக அழைத்திருந்தால், கண்டிப்பாக ஏற்றிருப்பேன். ஆனால், நடுவராக அமரும் அளவுக்கு எனக்கு இசை ஞானம் இல்லை என்பதாலேயே தவிர்த்து வந்துள்ளேன். இம்முறை, நடுவராக இல்லாமல் பங்கேற்கும் இளைஞர்களுக்கு அவர்கள் பாடும் பாடல் குறித்த செய்திகளை, அதில் இருக்கும் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும், சொல் உச்சரிப்பு உட்பட பாடல்களின் நுணுக்கங்களைப் பற்றி விவரிக்கும் பொறுப்பு என்னுடையது.”

இணையத்தில் இருந்து எடுத்தது


================================================
எம்.ஜி.ஆர். பேட்டிகள்





ஒவ்வொரு முறையும் புத்தக கண்காட்சி/புத்தக நிலையங்களுக்கு செல்லும்போது எம்.ஜி.ஆர் பற்றிய நூல்களை வாங்குவதிலும், அவர் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை படிப்பதிலும் தனியார்வம் எப்போதும் எனக்குண்டு. 2011 புத்தக கண்காட்சியின்போது ஒரு ஸ்டாலில் தலைவர் புத்தகங்கள் இரண்டினை வாங்கி பில் போட சென்றபோது அங்கிருந்தவர் சொன்ன செய்தி: 'வருடா வருடம் எம்.ஜி.ஆர். பற்றி எழுதப்படும் புத்தகங்கள் சிறப்பாக விற்பனை ஆவதுண்டு. பெரும்பாலும் அவற்றை வாங்கிச்செல்வது இளைஞர்கள்தான். எவர்க்ரீன் ஹீரோங்க அவர்'.
இம்முறை எனக்கு படிக்க கிடைத்த நூல்:கிருபாகரன் தொகுத்த எம்.ஜி.ஆர்.பேட்டிகள். பொம்மை, பேசும் படம், குமுதம், விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களுக்கு 1950 களின் இறுதி முதல் 1980 களின் துவக்கம் வரை புரட்சித்தலைவர் அளித்த பேட்டிகள் ஒரே புத்தக வடிவில்.
நூலில் முதலாவதாக இருப்பது 1968 ஆம் ஆண்டு ஜெயலலிதா வாய்ல அடி. வாய்ல அடி. மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி முதல்வர் அம்மா அவர்கள் பொம்மை ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரிடம் எடுத்த பேட்டி. நடிப்புத்துறையில் ஈடுபட காரணம் என்ன எனும் கேள்விக்கு கிடைத்த பதில் -வறுமை. சுவாரஸ்யமான கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர்.அளித்த பதில்கள் சில உங்கள் வாசிப்பிற்கு:
வாழ்க்கையில் பெரிய சோதனையாக அமைந்த நிகழ்ச்சி எது?
ஒரு பெண் என்னை காதலித்ததுதான். தயவு செய்து இதற்கு மேல் அது பற்றி எதுவும் கேட்க வேண்டாம்.
அதிர்ஷ்டம், ஆருடம், ராசிகளில் நம்பிக்கை இருந்ததுண்டா?
உறுதியாக. மிகப்பலமான நம்பிக்கை இருந்தது உண்டு.
கருணாநிதியுடன் முதல் சந்திப்பு எப்போது நிகழ்ந்தது?
ஜூபிடரின் 'அபிமன்யு' பட உரையாடல் எழுத அவர் கோவை வந்தபோது.
சினிமா நடிகர்கள்தான் தி.மு.க.வின் பலமா?
இல்லை. அது தவறான கருத்து. நடிகர்கள் இல்லாமலே தி.மு.க. இயங்கும்(நோட் திஸ் பாய்ன்ட் மிஸஸ் குஷ்பூ). சாகும் வரை தி.மு.க.வில் தான் இருப்பேன்(நாஞ்சில் சம்பத் உங்களுக்கும்தான்).
சினிமாவில் அழும் காட்சிகள் குறித்து...
நாடகங்களில் இயற்கையாக அழுதே ஆக வேண்டும். சினிமாவிலும் அவ்வாறே நடிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் க்ளிசரின் போட மறுத்தேன். ஆனால் அப்படி நடித்த காட்சிகளை திரையில் பார்த்தபோது நான் அழுவது போலவே இல்லை. ஏனெனில் இயற்கையாக அழும்போது ஷூட்டிங் லைட் சூட்டில் கண்ணீர் கன்னத்திற்கு வரும் முன்பே உலர்ந்து விடும்(எப்படி சமாளிக்கிற பாரு வாத்யாரே). பிறகுதான் க்ளிசரின் போட ஆரம்பித்தேன்
செல்வி ஜெயலலிதாவிற்கும் தங்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சில மஞ்சள் பத்திரிக்கைகள் எழுதுகின்றன. அதற்கு தங்கள் பதில் என்ன?
மஞ்சள் பத்திரிக்கைகள் எழுதுவதை காசு குடுத்து படித்து உங்கள் நேரத்தை வீண் செய்ததோடு என் நேரத்தையும் வீண் செய்து விட்டீர்களே.(டேய் நாதஸ் அது ஏன்டா என்னப்பாத்து அந்த கேள்விய கேட்ட..)
20 வயதுடைய அழகிய பெண் தங்களை காதலிப்பதாக கூறினால் திருமணம் செய்து கொள்வீர்களா?
ஏன் செய்து கொண்டால் என்ன? இப்போதுதான் மறுமணம், விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இருக்கிறதே.
சினிமா உலகில் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?
நான் சுடப்பட்டது கூட என் மேல் அன்பு வைத்த நண்பரால் என்று கூறுகிறீர்களா?
7 முதல் 17 வயது வரை நாடகங்களில் நடித்த தலைவர் 1935 ஆம் ஆண்டு ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் சதிலீலாவதி மூலம் திரைத்துறைக்கு நுழைந்தார். நீங்கள் நடித்ததில் பிடித்த படமெது என்பதற்கு பதில்: பெற்றால்தான் பிள்ளையா.
அரசியலில் இருந்து விலகி படங்கள் மூலம் அண்ணா கொள்கைகளை பரப்பினால் என்ன?
அப்படியானால் பல தமிழர் குடும்பங்களை அவல நிலைக்கு ஆளாக்கி இருக்கும் கருணாநிதி அல்லவா அரசியலை விட்டு விலக வேண்டும்.
சமீபகாலமாக தொப்பி போடுவதன் காரணமென்ன?
'அடிமைப்பெண்' வெளிப்புற காட்சிக்காக ஜெய்ப்பூர் பாலைவனத்திற்கு சென்றிருதோம். வெயிலின் சூட்டை தணிக்க அன்பர் ஒருவர் தொப்பி ஒன்றை தந்தார். தேர்தல் நேரத்தில் வெயில், மழை போன்றவற்றை சமாளிக்க தொப்பி சௌகர்யமாக இருக்கவே தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தேன்.
அறிஞர் அண்ணாவிற்கு பிறகு கலைஞர் ஆட்சி(1972) எப்படி உள்ளது?
அறிஞர் அண்ணா இப்போது இருந்தால் என்ன செய்வாரோ அதை எல்லாம் கலைஞர் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்(அட கர்த்தரே கர்த்தரே).
உங்களுக்கு சேரும் கூட்டமெல்லாம் நீங்கள் சினிமா பிரபலம் என்பதால் மட்டும் இருக்கலாம் அல்லவா?
என்னைப்போல் எத்தனையோ நடிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் என் போலவே இயக்கம் ஆரம்பித்தால் அவர்களுக்கு இப்படி கூட்டம் சேரும் என்று சொல்ல முடியுமா?
(இந்த யூ ட்யூப் லிங்கை நீங்க பாத்து இருந்தா இப்படி பேசி இருக்க மாட்டீங்க வாத்யாரே...
டி.ஆர். அதிரடி)
ஓவர் ஆக்டிங் என்றால் என்ன? (சபாஷ் மாப்ள. இது கேள்வி....)
ஒரு மனிதனின் தாயார் இறப்பது போல் காட்சி என்று வைத்து கொள்வோம். தான் அழுவது மூலம் பிறரின் துன்பத்தை அதிகரித்து விடுவோமோ என்று அவன் உணர்கிறான். எனவே அழுகையை அடக்கிக்கொண்டு தழுதழுத்த குரலில் பிறருக்கு ஆறுதல் சொல்கிறான். பெற்ற தாய் இறந்தாலும் வெடித்தெழும் உணர்வினை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறான் என்பதை நாமும்(ரசிகர்கள்) புரிந்து கொள்கிறோம்.
ஆனால் 'ஒரு நடிகன்' பாத்திரத்தின் தன்மையை மறந்துவிட்டு தான் நன்றாக நடிப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற 'குறிக்கோளில்' ஆறுதல் சொல்ல வந்தவர்களை பார்த்து கதறி, உரத்த குரலில் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, முகத்தை பல்வேறு கோணங்களில் அசைவுபடுத்தி கொண்டு மற்றவர்களிடம்(பிற நடிகர்கள்) இருந்து மக்களை தன் பக்கம் ஈர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு நடிக்கின்ற நடிப்புதான் ஓவர் ஆக்டிங்(சுமதி..கேட்டியாம்மா..கேட்டியா.. - கேட்டேன் கோப்பால் கேட்டேன்.)
இப்படி ஆங்காங்கே நடிகர் திலகத்தை ரவுசு கட்டி இருக்கிறார் மக்கள் திலகம். 'அண்ணா நான் உங்கள் ரசிகன். எனக்கு உங்கள் அறிவுரை என்ன?' டைப்பில் ஏகப்பட்ட ஸ்டீரியோ டைப் கேள்விகள். அதற்கு 'நாட்டுக்கு நல்ல பிள்ளையாய் இரு. தாயே தெய்வம்' என அறிவுரை வழங்குகிறார் எம்.ஜி.ஆர்.
சிறப்பான அச்சில் மொத்தம் 208 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ 130. கண்களை உறுத்தாத அளவில் வார்த்தை வடிவமைப்பு, மிகச்சில படங்களுடன் ஏராளமான பேட்டி தொகுப்புகள் இப்புத்தகத்தின் ப்ளஸ். பொன்மனச்செம்மலின் ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
.......................................................
நடிகை புஷ்பவல்லி பிறந்த நாள் இன்று ஜனவரி 3
ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் பெந்தபாடு என்ற ஊரில் தொண்டாபுரம் ஜமீன் குடும்பத்தில், ஆந்திர வைணவ மரபில் பிறந்தவர் புஷ்பவல்லி. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ. வி. ரங்காச்சாரி என்பவரைத் திருமணம் புரிந்தார்.
பிற்காலத்தில் இவர் ஜெமினி கணேசனைத் திருமணம் புரிந்தார். நடிகை ரேகா இவர்களின் மகள் ஆவார்.
திரைப்படங்களில் நடிப்பு தொகு
1936 ஆம் ஆண்டில் துர்கா சினிடோனின் சம்பூர்ண இராமாயணம் என்ற தெலுங்குப் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தார். இவரது திறமையைக் கண்ட இயக்குநர் சி. புல்லையா தனது சல் மோகனரங்கா திரைப்படத்தில் நல்ல சந்தர்ப்பமளித்தார்.[6] தொடர்ந்து மோகினி பஸ்மாசுரா, வரவிக்ரயம் ஆகிய படங்களில் நடித்து நல்ல இடத்தைப் பிடித்துக் கொண்டார். தசாவதாரம், மாலதி மாதவம், தாராசசாங்கம் சூடாமணி, சத்தியபாமா போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற பின்னர் தமிழ்த்திரையுலகில் நுழைந்தார். இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் தாசி அபரஞ்சி (1944) இவருக்கு நல்ல பெயரைத் தந்தது. தொடர்ந்து, பாதுகா, விந்திய ராணி, மிஸ் மாலினி, சக்ரதாரி, சம்சாரம் போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Image may contain: 1 person





((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
சுஹாசினி




தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்தவர் சுகாசினி. இப்போதும் அவருக்குரிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சென்னை, திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படிப்பை படித்த பின் அப்போதைய முன்னணி ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார்.
1980ம் ஆண்டு வெளிவந்த 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம் மூலம் சுஹாசினியை நடிகையாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மகேந்திரன். அந்தப் படம் வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 1988ல் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படும் மணிரத்னத்தை திருமணம் செய்தார்.
1995ம் ஆண்டு அரவிந்த்சாமி, அனுஹாசன் நடித்த 'இந்திரா' படத்தையும், சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'புத்தம் புதுக் காலை' ஆந்தாலஜி படத்தில் 'காபி, எனிஒன்' பகுதியை இயக்கியுள்ளார். 1991ல் 'பெண்' என்ற டிவி தொடரையும் இயக்கினார்.
பாலசந்தர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த 'சிந்துபைரவி' படத்திற்காக சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றார். பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
தமிழில், “பாலைவனச்சோலை, கோபுரங்கள் சாய்வதில்லை, தாய் வீடு, பாலைவன ரோஜாக்கள், மனதில் உறுதி வேண்டும், தர்மத்தின் தலைவன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், சாக்லெட், ” ஆகிய படங்களில் குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சுஹாசினி.
நேற்று நடைபெற்ற 'மாயத்திரை' இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுஹாசினி “நான் திரையுலகிற்கு அறிமுகமாகி 40 வருடங்கள் ஆகின்றது. வேறு எந்தத் துறையைத் தவிர சினிமாவை மட்டுமே நான் மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதுகிறேன்,” என தன்னுடைய 40 வருட சினிமாவைப் பற்றி தெரிவித்தார்.
நன்றி: தினமலர்


*****************************************************************************************
.. பாரதிராஜா புகழாரம்





நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற... இயக்குனர் பாரதிராஜா படவிழாவில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் பாரதிராஜா பேசும்போது, நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பார்த்து பழகிய சிம்பு வேற.. சிம்பு ஒரு ஒழுக்கமான மனிதர். ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுகிறார். ஒரே டேக்கில் சாதாரணமாக நடித்து விட்டு சென்று விடுகிறார். சிம்புக்கு எதுவும் மறைக்கத் தெரியாது. இப்போ சிம்புவை நான் ரொம்ப நேசிக்கிறேன். என்றார்.

################################################################

அரிய புகைப்படங்கள்










Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி