உடல் எடை குறைய வழிகள்!!
உடல் எடை குறைய வழிகள்!!
காலை உணவின் மூலம் உடல் எடையை எப்படி குறைப்பது?
👉 காலை உணவை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள மெட்டபாலிசத்தை எளிதாக தூண்ட முடியும். இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது. காலையில் சாப்பிடும் அதே உணவை மாலையில் சாப்பிட்டாலும் கூட, இந்த அளவிற்கு மெட்டபாலிசத்தை தூண்ட முடியாது.
👉 பலர் காலை உணவை தவிர்த்துவிட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகமாக பசி எடுக்கிறது. இதனால் மதிய உணவை அதிகமாக உட்கொண்டு விடுகிறார்கள். மாலை ஸ்நேக்ஸ் உடன் சேர்த்து காலை உணவை தவிர்த்தாலும் கூட அதிக உணவை சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.
👉 காலை உணவை தவிர்க்கும்போது உங்களது உடலில் பசிக்கான ஹார்மோன் அதிகமாக தூண்டப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.
👉 காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், உடலுக்கு தேவையான கார்போஹைட்ரைட்டுகள், புரோட்டின், கொழுப்பு, வைட்டமின் போன்ற இன்னும் சில சத்துக்களை இழக்கக்கூடும்.
👉 உடல் எடையை குறைக்க நினைத்தால், வெறும் வயிற்றில் ஓட்ட பயிற்சி செல்லலாம். இது உடல் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது.
👉 காலை வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டுவர, உடல் எடை குறையும்.
வாழைப்பழம் :
👉 வாழைப்பழம் காலையில் சாப்பிடுவது நல்லது. இந்த வாழைப்பழத்தை ஓட்ஸ் உடன் சேர்ந்து சாப்பிடுவதால் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும்.
ஆப்பிள் :
👉 தினமும் காலையில் ஆப்பிள் சாப்பிடலாம். இந்த ஆப்பிள் உங்களது இடுப்பில் உள்ள சதைகளை குறைக்க உதவியாக உள்ளது. மேலும் ஆப்பிள் உங்களது உடலுக்கு தேவையான சக்தியை தருவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
முட்டை :
👉 காலையில் முட்டையை மட்டும் சாப்பிடுவதால், பசி எடுக்காது. ஆகையால் காலையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு வேக வைத்த முட்டைகளை மட்டும் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
உடல் எடை குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்
காலை :
👉 காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கக்கூடாது. காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை இரண்டு - மூன்று இட்லி, நிறைய சாம்பார் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
👉 காலையில் அதிகளவு உண்ணுவதோ, உணவை அறவே தவிர்ப்பதோ என்பது கூடாது. காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.
மதியம் :
👉 மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
இரவு :
👉 இரவு உணவாக சப்பாத்தி, காய்கறிக் கூட்டு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் பரோட்டா, நூடுல்ஸ் முதலான மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உடல் எடையை குறைக்கும் கொள்ளு
👉 கொள்ளுப் பருப்பில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதை ஊற வைத்து சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம்.
👉 கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுப் பருப்பிற்கு உண்டு. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
👉 அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.
👉 கொள்ளுப் பருப்பு உடலில் இருக்கும் ஊளைச்சதையை குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவையும் கொடுக்கக்கூடியது. எனவே, கொள்ளுப் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
உடல் எடை குறைய டிப்ஸ்
👉 முட்டைக்கோஸ், குடமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.
👉 குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
👉 எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைப்பதோடு, நச்சுக்களை வெளியேற்றி, விரைவில் எடையைக் குறைக்க உதவும். எனவே, தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது எனர்ஜியாகவும் செயல்பட உதவும்.
👉 பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
👉 தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறையும்.
👉 சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
👉 கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
👉 அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலியும்.
👉 வாழத்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
👉 உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை அளவோடு சாப்பிடுங்கள்.
👉 நொறுக்குத் தீனி சாப்பிடுவதை அறவே விட்டுவிடுங்கள்.
👉 கொழுப்பு சத்துள்ள உணவை தவிருங்கள்.
👉 இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய்ப் பொருட்களை சாப்பிட வேண்டாம்.
👉 பசிக்காத போது சாப்பிட வேண்டாம்.
👉 உணவை அளவோடு சாப்பிடுங்கள். சுவை கருதி உணவை அதிகம் சாப்பிடாதீர்கள்.
👉 பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையாது, உடலுக்கு கெடுதலே வரும்.
உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் சீரகம் !!
தேன் :
👉 தினமும் காலையில் வெந்நீரில் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்து வந்தால் தேவையற்ற எடை கூடுதல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். மேலும், உணவு செரிமானம் நல்ல முறையில் நடக்கும்.
👉 வெந்நீருடன், எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டால் காலை நேரத்தில் வயிறு சுத்தமாக உதவும். வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
சீரகம் :
👉 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
👉 சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
👉 சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
👉 தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
👉 சீரகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.
Comments