மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை

 மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை



துணை சூப்பிரண்டு ஆன மகளுக்கு காவல் ஆய்வாளராக பணி செய்யும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.
ஐதராபாத்,

.‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்” என்ற வள்ளுவரின் கூற்றின்படி தனது தந்தைக்கு பெருமை கேர்க்கும் வகையில், ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

ஆந்திரா காவல்துறையில் போலீஸ் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய்.ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார்.

இந்நிலையில் ஒய்.ஜெஸ்ஸி பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தியின் வருகையைக் கண்ட ஷியாம் சுந்தர், பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்து வரவேற்றார்.

இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தனது மகளுக்கு சல்யூட் அடித்தது குறித்து காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் கூறுகையில்,

தனக்கு இது பெருமையான விஷயம். வீட்டில் தான் அப்பா-மகள் உறவு எல்லாம். பணியின்போது மகள் தனது உயர் அதிகாரி என்றார். இதுதொடர்பாக கூறிய ஜெஸ்ஸி பிரசாந்தி

நாங்கள் கடமையில் சந்தித்தது இதுவே முதல் முறை. அவர் எனக்கு வணக்கம் செலுத்துவதில் எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் எனது தந்தை. எனக்கு வணக்கம் செலுத்த வேண்டாம் என்று கேட்டேன், ஆனால் அவர் வணக்கம் செலுத்தினார். பதிலுக்கு அதிகாரி என்ற முறையில் நானும் வணக்கத்தை செலுத்தினேன் என்றார். 

"என் தந்தை தான் எனக்கு ரோல் மாடல். அவர் இடைவிடாமல் மக்களுக்கு சேவை செய்வதைப் பார்த்து நான் வளர்ந்திருக்கிறேன். அவர் தன்னால் முடிந்த வழியில் பலருக்கு உதவியுள்ளார். இதுதான் இந்தத் துறையைத் தேர்வுசெய்ய எனக்கு உதவியாக அமைந்தது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,