எம்ஜி சக்கரபாணி

 எம்ஜி சக்கரபாணி பிறந்த தினமின்றுஎம்,ஜி.ஆர். பற்றி எது எழுதுகையில் எம்.ஜி.சக்கரபாணியை பற்றி எழுதா விட்டால் அது முழுமை பெறாது.
குடும்பச் சூழ்நிலையால், கும்பகோணத்தில் இளமைக்கால முதலே எம்.ஜி.ஆரோடு இணைந்து நாடகங்களில் நடித்ததோடல்லாமல் எம்.ஜி.ஆரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கெடுத்துக் கொண்டவர்.
அண்ணன் தம்பி பாசத்திற்கு இவர்களிருவரும் ஓர் எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
எம்.ஜி.ஆர். நாடக மன்றம் நடத்திய முதல் நாடகம் “இடிந்தகோயில்” நாடகத்திலிருந்து உடனிருந்து நடித்தவர் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரரான எம்.ஜி.சக்கரபாணி. இவரை ‘பெரியவர்’ என்றும் எம்.ஜி.ஆரை ‘சின்னவர்’ என்றும் திரையுலகில்அன்பொழுக அடைமொழியிட்டு அழைத்தனர்.
படங்களில் அவர் ஏற்று நடிக்கும் கெளரவ வேடங்கள் கம்பீரமாக இருக்கும். எம்.ஜி.ஆரின் திரைப்படம் மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு எம்.ஜி.சக்ரபாணி எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தொடங்குவதற்கு மூலக்காரணமாக இருந்ததே சக்ரபாணிதான். இந்த நிறுவனத்தின் முதல் படமான “நாடோடி மன்னன்” படத்தை கே,ராம்நாத் இயக்கத் தொடங்கினார். அவர் திடீரென்று மறைந்துவிடவே அப்படத்தை இயக்கும்படி எம்.ஜி.ஆரை ஊக்கப்படுத்தியதே எம்.ஜி.சக்ரபாணிதான்.
1936-ஆம் ஆண்டு வெளிவந்த “இரு சகோதரர்கள்” முதல் 1975-ஆம் ஆண்டு வெளிவந்த “நாளை நமதே” வரை 37 படங்களில் வில்லனாக, அப்பாவியாக, பாசமுள்ள அண்ணனாக, மாமனாராக, தகப்பனாராக நண்பராக ஏகப்பட்ட கெளரவ வேடங்கள் எற்று நடித்து பாத்திரப்படைப்புக்கு உயிரூட்டியவர்.
எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து வெளியேற்றியபின் அவர் புதிய கட்சி தொடங்குவதற்கு உற்சாகப்படுத்தி அவரை முடுக்கி விட்டவர் எம்.ஜி.சக்கரபாணி. கட்சிப் பொறுப்புகள் எதிலும் தலையிடாமல் பெருந்தன்மையாக நடந்துக் கொண்டவர்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,