படிக்காத மேதை காமராஜர்

 



காமராஜர் முதல்வரான பின், ஒரு முறை கும்பகோணத்துக்கு வந்திருந்தார். காரிலிருந்து காமராஜர் இறங்கும் நேரத்தில், ஒரு மூதாட்டி, அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி, போலீஸ்காரரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

இந்த சண்டையைப் பார்த்த காமராஜர், அவரை அனுமதிக்கும்படி போலீசாரிடம் சொல்ல, அந்த மூதாட்டி, காமராஜரை அணுகி, 'ஐயா... என்னைப் போல வயசானவங்க, தள்ளாத காலத்திலும், கூடைத் துாக்கிப் பிழைக்க வேண்டியிருக்கு, எங்களுக்கு ஏதாவது செய்யணும்...' என்றார்.
'ஆகட்டும் பார்க்கலாம்...' என்று சொல்லி, கிளம்பி விட்டார் காமராஜர். கார் புறப்பட்டதும், அந்த மூதாட்டி சொன்ன வார்த்தைகள் அவர் மனதிற்குள் வந்து மோதின. காரில் இருந்த அதிகாரிகளிடம், 'இந்த ஏழை மூதாட்டிக்கு மாதம் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?' என, கேட்டார். யோசித்த அதிகாரிகள், 'இருபது ரூபாய் ஆகும்...' என்றனர்.
சென்னை வந்து சேர்ந்ததும், மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் எத்தனை பேர் என கணக்கு எடுக்க உத்தரவிட்டார். உடனடியாக, 'முதியோர் பென்ஷன்' திட்டம் அமல்படுத்தப்பட்டது.
படிக்காத மேதை காமராஜர்' நுாலிலிருந்து:

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி