ராணி வேலுநாச்சியார்

 பெண்ணினத்தின் தனி அடையாளம், பேராளுமைக்குரிய ராணி அவர்கள், வீரத்திருமகள், சிவகங்கை கண்ட பேரரசி " ராணி வேலுநாச்சியார்" அவர்களுக்கு இன்று பிறந்தநாள். என்றென்றும் நாம் அவரை நினைவில்  கொள்வோம்.


 ராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத சேதுபதி, முத்தாள் நாச்சியாருக்கு மகளாக 1730 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி பிறந்தவர் வேலுநாச்சியார் அவர்கள். 


 இளம் வயதிலே தமிழ் மொழியை மட்டும் அல்லாமல், ஆங்கிலம், உருது போன்ற மொழிகளை கற்றுத் தெளிந்தது மட்டுமல்லாமல், குதிரையேற்றம், வாள் வீச்சு, வளரி விளையாட்டு, போன்றவற்றை மிகத் துணிவுடன் செய்யும் வல்லமை பெற்றவராக இருந்தார். 


 அவரது பெற்றோர்கள், தனது மகளை, வீர உணர்வினை ஊட்டி வளர்த்தனர். 

 

 இவர், முத்துவடுகநாதர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு வெள்ளச்சி என்று பெயர் வைத்து சீராட்டி வளர்த்தார். 


 இவர்கள் இருவரும், மக்கள் வாழும் பகுதிக்கு சென்று, குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் தேவையினை பூர்த்தி செய்வஅவர்களின் தேவையினை பூர்த்தி செய்ததால், மக்கள் செல்வாக்கினை பெரிதும் பெற்றிருந்தனர்.  


ஒரு முறை இவரது கணவர் முத்து வடுகநாதர், சிவ ஆலயம் சென்று வழிபடும் போது, அப்போது  எந்தவித ஆயுதத்தையும், உள்ளே எடுத்து செல்லாத  நிலையில், ரகசியமாக கொல்லப்படுகிறார். 


 தனது கணவரைப் பறிகொடுத்த வேலுநாச்சியார் அம்மையார், அரியாக்குறிச்சி என்று ஊருக்கு வந்தபோது, உடையாள் என்னும் மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப்பட்டாள். அச்சிறுமியிடம் விடைபெற்றுச் செல்லும்போது, பின் தொடர்ந்து வந்த ஆங்கிலப் படையினர், சிறுமி உடையாளிடம் விசாரிக்க வேலு நாச்சியார் சென்ற பாதையைக் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டாள். இதனால் வெள்ளையர்களால் அதே இடத்தில் உடையாள் கொல்லப்படுகிறாள். 


 இந்நேரத்தில், பெரிய மருதுவும் சின்ன மருதுவும், சிவகங்கை பகுதிக்கு வீர தளபதிகளாக இருந்தவீர தளபதிகளாக விருந்து நாட்டையும் காத்தனர்.


 வேலுநாச்சியார் அவர்கள், விருப்பாட்சி கோபால் நாயக்கர் அடைக்கலமாய் தங்குகிறாள்.


 வீரமங்கை முதன்முதலாக

 பெண்களுக்கு போர் பயிற்சி அளித்தார்.


 மைசூரில் உள்ள, ஹைதர் அலியுடன் உருது மொழியில் பேசி, வீரர்களை அனுப்பி வைக்க கூறினார்.

 ஹைதர் அலி, அம்மையாருக்கு, குதிரைப் படைகளையும், வீரர்களையும் அனுப்பி வைத்தார்.


 சிவகங்கை, வெட்டுடையாள் காளி அம்பாள் கோவிலில், விஜயதசமி நவராத்திரி அன்று நடைபெற்ற விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில்  புகுந்து. குயிலி என்ற பெண் தனது உடம்பெல்லாம் தீ வைத்து வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கினை     அழித்தனர்.


 தனது படையில் எவ்வித உயிர் சேதம் இல்லாமல், ஆங்கில ஆயுதக்கிடங்கு அழித்தும், அவ்வமயம் தந்திரமாக தனது ஆற்றலை வெளிப்படுத்தி அதனது ஆற்றலை வெளிப்படுத்தியவர் வேலுநாச்சியார் அவர்கள்.


 வீரம்,விவேகம், கல்வி. ஆளுமை, மக்களின் ராணியாக எல்லோரிடமும் மனதிலே பேரன்பு கொண்டு ஆட்சி செய்தவர்.


 இருப்பினும் அதன் பின்னர்  மீண்டும் போரிடவே, தனது மகள். மருமகன் உயிர் துறந்த பின்னர், தனது உடல் நலம் சரியில்லாத பேச்சுதனது உடல் நலம் சரியில்லாத பேத்தியுடன் சிறிது காலம் வாழ்ந்து வந்தார். தனது பேத்தியையும் இழந்து விடவே, தனது கடைசி காலத்தில், விருபாட்சி கோபால நாயக்கர் கோட்டையில் வாழ்ந்தார்.


 ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் சிவகங்கை ராணியாக சிறப்பாக ஆட்சி செய்து, மக்கள் மனதில் தனி இடம் பிடித்து, இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் வீராங்கனை என்ற வரலாற்றுப் பெயரினைப் பெற்று நாம் வாழும் இப்பூமியில் என்றும் புகழ் பெற்று வாழ்ந்து வருகிறார்.  

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,