நாளும் சாதனை காணட்டும்..!!
நாளும் சாதனை காணட்டும்..!!
"கடந்து சென்ற
தேதிகள் போல
காயங்கள்
போகட்டும்,
புதிய வருடத்தின்
ஒவ்வொரு
நாளும் சாதனை
காணட்டும்..!!
அவமானங்கள்
தோல்விகள்
எல்லாம்
அழிந்து
போகட்டும்,
அன்பு
நெஞ்சங்களின்
அருமுயற்சி
அரியணை
ஏறட்டும்...!!
கடமை ,காதல்,
கவிதை, கல்வி
என
பின்னிலை
கண்டதெல்லாம்,
வீரியம் கொண்டு
வெற்றி படிகளில்
விரைந்து ஏறட்டும்..!!
அடக்குமுறையில்
நசிந்து போன
உயிர்கள்
வாழட்டும்,
அந்த தேவை
நிறைந்தோர்,
இல்லம் தேடி
நம் கைகள்
நீளட்டும்..!!
உலக அரங்கில்
நமது நாடு
உயர்வு காணட்டும்,
நமது நாட்டின்
ஒவ்வொரு
வீட்டிலும்
வறுமை தீரட்டும்,
நமது மண்ணும்,
நமது மனமும்
சுவர்க்கம் காணட்டும்..!!
#01/01.2021.
கவிமுரசு பிரவீன்..
Comments