மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

 எல்லாருடைய தேவையும் கேள்வியும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?



மகிழ்ச்சியாக இருப்பதற்கென்று தனியாக வாழ வேண்டுமென்று அவசியமில்லை.நம்முள்ளே மகிழ்ச்சியை காண நிறை வழிகள் உள்ளன.நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் விதம் என்று இரண்டு உள்ளது.அவற்றிலிருந்து தான் நாம் மகிழ்ச்சியை பெறுகிறோம் மற்றும் பிறரிடம் பகிர்கிறோம்.


இப்படியான மகிழ்ச்சிக்கு காரணமான நான்கு "ஹேப்பி ஹார்மோன்கள்" நம் உடலிலே சுரக்கின்றன.

டோபமைன் (Dopamine), ஆக்சிடோசின் (oxytocin), எண்டோர்பின் (endorphin) மற்றும் செரட்டோனின் (Serotonin) இவை தான் நம் மகிழ்ச்சிக்கு காரணமான ஹார்மோன்கள்.


செரட்டோனின் பற்றி ஏற்கனவே வெளிவந்த கட்டுரையில் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி நிறைய பேசியுள்ளோம்.கீழே லிங்க் இணைத்து உள்ளோம்.


வாங்க..!இயற்கையாகவே நம் உடலில் சுரக்கும் மற்ற மூன்று ஹார்மோன் பற்றி பார்ப்போம்.


1. டோபமைன் ( Dopamine) 


சிலருக்கு பிடித்த பொருட்களின் வாசனையை நுகரும் போது, புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளும் போது,புதிதாக ஒரு பொருளை வாங்கும் போது,இப்படியான சூழ்நிலையில் டோபமைன் உற்பத்தியாகிறது.மேலும், சிலர் போதை பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள்.


2. ஆக்சிடோசின்( oxytocin)


 அதீதமான காதல் அன்பென்று யார் மீது உங்களுக்கு தோன்றுகிறதோ அவர்களே உங்களின் ஆக்சிடோசின்.அதாவது,இதொரு "லவ் ஹார்மோன்".

பிடித்தவர்களுடன் நேரம் செலவிடும் போது ஆக்சிடோசின் உடலில் சுரக்கிறது.பொதுவாகவே மனத்திற்கு நெருக்கமானவருடன் போன் பேசும் போது வெயிட்டிங் - ல வரும் அனைத்து அழைப்புகளையும் ஏற்க மறுப்போம்.அது ஏனென்றால் உலகமே அவர்கள் தான் என்று நினைத்து இருப்பதால் தான்.அப்படி நினைப்பவர்களுடன் நேரம் செலவிடும் போது நாம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து விளையாடுவோம்


மேலும், சிலருக்கு கூட்டமாக இருப்பதன் மூலம் ஆக்சிடோசின் அளவை அதிகரிக்க முடியும்.தனிமையை‌‌ உணராமல் இருப்பதற்கு ஆக்சிடோசின் உதவுகிறது.


3.எண்டோர்பின் (endorphin)


ஒரு வேலையை நமக்கு பிடித்தவர்களுக்கு செய்கிறோம்.அதே வேலையை நமக்கும் செய்ய வேண்டும்.ஆனால், பிடித்தவர்களுக்கு செய்து தர கூடிய வேலையில் உள்ள சுறுசுறுப்பும் உத்வேகம் நமக்கு செய்யும் போது இருக்காது.அப்படி பிடித்த வேலைகளை பிடித்தவர்களுக்கு செய்யும் போது எண்டோர்பின் உற்பத்தியாகிறது.


"இயற்கை வலி நிவாரணி" ஹார்மோன் என்று அழைக்கிறார்கள்.எத்தனை பேர் நம்முள் Goal நோக்கி பயணிக்கிறோம் என்று தெரியவில்லை.அப்படி Goal - யை நோக்கி பயணிக்கும் போது அதில் வரும் கஷ்டங்களையும் கவலைகளையும் வலியையும் இந்த ஹார்மோன் பார்த்துக் கொள்ளும்.


சைக்கிள் ஓட்டுவது உங்களுக்கு பிடிக்குமென்றால் நீண்ட பயணம் சைக்கிளில் சென்றாலும் அந்த வலி நம்மைப் பெரிதாக பாதிப்பது இல்லை.ஏனென்றால் சைக்கிளில் நீண்ட பயணம் செல்வது என்பது நம் கனவாக இருந்திருக்கலாம் அல்லது வாழ்க்கை இலட்சியமாக இருந்திருக்கலாம்.


இப்படி நமக்குள் நாமே சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றில் கவனத்தைச் செலுத்தும் போது வலி எல்லாம் வழியாக மாறிவிடும்.


வாருங்கள்..! 


மகிழ்ச்சியை முதலில் நாம் அனைவரும் நம்முள் தேடுவோம்.நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நாம் செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சி நிறையும் என்பதில் உறுதியாக இருப்போம்.இந்ந நிமிடமே உறுதி கொள்ளுங்கள் நான் இன்று மகிழ்ச்சியை தேர்ந்தெடுத்கிறேன் என்று.


கீர்த்தனா பிருத்விராஜ்


Comments

Suresh Subbiah said…
ஆகா ஆகா, அசத்தல் கட்டுரை
இதுவரை அறியாத தகவல்கள் ஆனால் உணர்ந்த உணர்வுகள்

நீங்க சொன்ன அனைத்தையும் நான் உணர்ந்து வாழ்கிறேன்.

முதலில் சொன்ன லிங்க் கிடைக்குமா?

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி