கணவருடன் செக்ஸ் வச்சுக்கறதுக்கு போய் சம்பளமா கங்கனா அதிரடி கேள்வி

 கணவருடன் செக்ஸ் வச்சுக்கறதுக்கு போய் சம்பளம் போடுவீங்களா
இல்லத்தரசிகளுக்கு மாதச் சம்பளம் வழங்கும் யோசனையை தெரிவித்துள்ள கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தோ கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கினார். அவர் குமரி, நெல்லை, கோவில்பட்டி, மதுரை, விருதுநகர், சிவகாசி, சிவகங்கை. சென்னை உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தபோது அவர் தேர்தல் வாக்குறுதியாக ஒரு வித்தியாசமானதை கூறியிருந்தார். அதாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதச் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கமல்ஹாசனின் இந்த யோசனை தேசிய அளவில் உற்று நோக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரான சசி தரூர், கமல்ஹாசனின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில் கமலின் யோசனையின்படி வீட்டு வேலையையும் ஒரு பணியாக அங்கீகரித்து அவற்றை செய்யும் பெண்களுக்கு அரசாங்கமே சம்பளம் தருவது என்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

இதுகுறித்து அவர் கூறுகையில் எங்கள் அன்பானவர்களுக்கு பணிவிடை செய்வதற்கு விலை நிர்ணயிக்க வேண்டாம். எங்களுக்கு சொந்தமானவர்களை நாங்கள் தாயைப் போல கவனித்து கொள்வதற்கு ஊதியம் தர வேண்டாம். எங்கள் மாளிகையில் நாங்கள் இல்லத்தரசிகளாக இருப்பதற்கு கூலி தேவையில்லை.
அனைத்தையுமே வர்த்தகமாக பார்க்க வேண்டாம். எங்களிடம் உங்களை ஒப்படைத்துவிடுங்கள். அதற்கு பதிலாக நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது எல்லாம் அன்பும் மரியாதையும்தான் என்று கூறியுள்ளார். கங்கனா ரனாவத் எப்போதும் ஏட்டிக்கு போட்டியாகவே பேசி வருவார். விவசாயிகளின் போராட்டத்தையும் கிண்டல் செய்தவர் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,