அமெரிக்காவில் தொழிற்சங்கம் அமைத்த கூகுள் ஊழியர்கள்

 அமெரிக்காவில் தொழிற்சங்கம் அமைத்த கூகுள் ஊழியர்கள்!: உரிமைக்கான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க உதவும் என நம்பிக்கை..!!வாஷிங்டன்: அமெரிக்காவில் கூகுள் ஊழியர்கள் இணைந்து தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளனர். ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க இந்த தொழிலாளர் சங்கம் உதவும் என்று கூகுள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, கனடாவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 200க்கும் ஊழியர்களை ஒன்றிணைத்து தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல பன்னாட்டு நிறுவனமான கூகுளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.


அண்மை காலமாக பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை முறையாக விசாரிப்பதில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் மீது அதன் ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். இதனை அடுத்து கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒன்றிணைத்து தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். இதற்கு ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை குழுவாக பேசுவதற்காகவே இந்த தொழிற்சங்கம் ஏற்பட்டுள்ளதாக கூகுள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழிற்சங்க செயல்பாடுகள் குறைவாகவே உள்ள நிலையில் கூகுள் நிறுவன ஊழியர்களின் இந்த முயற்சி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கூகுள் இன்ஜினியர்கள் பருல் கோவுல் மற்றும் செவிஷா ஆகியோர் இச்சங்கத்தின் நிர்வாகத் தலைவராக மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நியாயமான ஊதியத்துடனும், துஷ்பிரயோகம் செய்யப்படுவோம். பாகுபாடு காட்டப்படுவோம் என்ற பயமில்லாமலும் பணியாற்றுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,