ஞாயிறு திரை மலர்

ஞாயிறு திரை மலர் 10-01-2021


_____________________________________________________________________________


 Koyambedu Rohini theater for Master tickets now===============================================================

ரஜினியின் பழைய பேட்டி

கேள்வி : நீங்க ஆன்மீகவாதியா? காந்தியவாதியா?
ரஜினி பதில்: இரண்டுக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்லைங்க.
கே : உங்களைக் கவர்ந்த அரசியல் தலைவர் யார்?
ப : சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்வான்யூ
கே : உங்களுடைய கருத்தை என்றைக்காவது மாற்றியதுண்டா?
ப : நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி
கே : தங்களை மிகவும் கவர்ந்த நடிகர் யார்?
ப : கமல்ஹாசன்
கே : மனிதன் முட்டாளாக ஆவது எப்போது?
ப : தன் மீது நம்பிக்கை வைக்காமல், மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கும்போது
கே : பணம் வரும்போது மனிதன் எதை மறைக்கிறான்?
ப : உண்மையை மறைக்கிறான். பணத்தை மறைக்கிறான்?
கே : சோ, உங்களை அடிக்கடி பாராட்டிப் பேசுகிறாரே?
ப : அதாங்க எனக்குப் பயமா இருக்கு. நான் அரசியலுக்கு வரலீங்க. அதனால தான் பாராட்டிப் பேசிக்கிட்டு இருக்கார். வந்துட்டேன்னு வைச்சுக்குங்க. பீஸ் பீஸா கிழிச்சுடுவாரு. உண்மையாகவே சோ சார் சிறந்த அறிவாளி. மிகச்சிறந்த மனிதர். என்னுடைய நல்ல நண்பர்
கே : நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றிச் சில வார்த்தைகள்?
ப : என்னை ‘ஸ்டைல் கிங்’னு சொல்லுவாங்க. நான் ‘ஸ்டைல் கிங்’னா, சிவாஜி சார் ‘ஸ்டைல் சக்கரவர்த்தி’.
நன்றி: தாய்


======================================================
20 வருடங்களாக உயிருக்கும் போராடும் நடிகர் பாபு... நேரில் சந்தித்து கண்கலங்கிய பாரதிராஜா

பாபுவுடன் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-வின் நிலைமையை பற்றி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாபு, அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். அந்த நடிப்பால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு.
ஆனால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்த பாபுவுக்கு "மனசார வாழ்த்துங்களேன்" படத்தில் நடித்தபோதுதான் சோதனை ஏற்பட்டது. ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த போதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து நடமாட முடியவில்லை. படுத்த படுக்கையான அவர், கடந்த 20 வருடமாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க போன பாரதிராஜா கண்கலங்கி கொஞ்சம் உதவி செய்து விட்டு வந்துள்ளார். பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.
நன்றி: மாலை மலர்

=================================================================
அரிய புகைப்படம்


எம்.ஜி.ஆர் நடித்த அடிமை பெண் படத்தில் தனது முதல் பாடலான ஆயிரம் நிலவே வா பாடலை சுசிலாவுடன் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்
சார்லி சாப்ளின் மனைவியுடன்


-------------------------------------------


-
கவிஞரைச் சாடிய வாலிஎம்.ஜி.ஆரின் அன்பு கடாட்சத்திற்குத் தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்ட கவிஞர் வாலி, செப்டம்பர் 1963-ல் வந்த பேசும் படம் இதழில் “கவிதையில் ஒரு கலைஞர்” என்ற கவிதையை வடித்தார் வாலி.
“மின்னல் வேகத்தில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளங்கவிஞர் வாலி மக்கள் திலகத்தைப் பற்றி எழுதிய கவிதை” என்ற அறிவிப்புடன் வந்தது அது.
வங்கக் கடல் கடைந்த செங்கதிர் வண்ணம் போல்
சிங்கத் திருமுகம் செவ்விதழில் புன்சிரிப்பு!
வெள்ளம்போல் கருணை, வள்ளல் போல் வடிவம்
என்று எழுதுவதற்கு முன் ..
பாமலைப் பாடியிவன் பெருமைகளைப் பேசுகையில்
காமலைக் கண்கள் என்னை காக்காய் எனத் தூற்றும்!
நாய்க் குரைத்தால் நாய்க்குத்தான் வாய் வலிக்கும் தெரியாதா?
நேற்றுவரை போற்றுவதும், போற்றிப் பின் தூற்றுவதும்
காற்றடிக்கும் திசை மாறும் காற்றாடி குணம் கொண்டு
நாவிதன் கத்தியென நாவைப் புரட்டுவோர்
காவியக் கவிஞரென கொலுவிருக்கக் கண்டதுண்டு!
அதுபோல வரவில்லை, அவதூறும் பெறவில்லை! ..
எம்.ஜி.ஆருக்கு புகழ் மாலை மட்டுமல்ல, கண்ணதாசனுக்கு சாட்டையடி போல் ஒலிக்கும் வரிகள்.
===============================================================Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,