ஜீவா

 


1963 ல் இறக்கிறார். ஜீவாவின் மூத்தமகள் உஷாவின் திருமணம் பெரியாரின் ஏற்பாட்டில் (மாப்பிள்ளை பார்த்தது, திருமணச்செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டது என எல்லாம்) நடந்தது, திருமண விழாவிற்கு தமிழ் நாட்டின் முதலமைச்சரான அண்ணாவும் சென்றிருந்தார். அப்போது அந்த மணவிழாவில் பேசிய அண்ணா “நான் பெரியாருக்கு ஒரு கனி கொண்டுவந்துள்ளேன், சீர்திருத்தமுறை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் ஆகும் என்ற சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று வந்துள்ளேன் “எனக்கூறினார். தம் வாழ்நாள் முழுதும் சீர்திருத்தத்திற்காக பெரியாரோடு இணைந்து போராடியவர் மகளின் திருமணம் தமிழ்நாட்டில் முதன்முதலில் நடந்த அங்கீகரிக்கப்பட்ட சீர்திருத்த திருமணம் ஆக நடந்தது. எவ்வளவு பொருத்தமானது.

தமிழ் தமிழர் என்ற கொள்கைகளோடு வளர்ந்தெழுந்த தி. மு. க. பற்றி ஒரு சிலர் ஜீவாவிடம் உங்கள் கட்சியும் அதேமாதிரி விஷயங்களை முன்னெடுக்கலாமே என்று கேட்டதற்கு நாங்கள் சர்வலோகவாதிகள், எங்களுக்கு அப்படிப்பட்ட குறுகிய பார்வை தேவையில்லை என்று கூறியவர் மேடைக்கு மேடை யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பழந்தமிழரின் பெருமையைப்பற்றிப் பேசுபவர்கள் அதை மறந்து போய் இனம் மொழி என்று தங்களை குறுக்கிக்கொள்வது எந்தவகை நியாயம் என்றார்.
ஒரு சமயம் குமாரசாமிராஜாவுடன் ஜீவா பேசிகொண்டுள்ளபோது ராஜா, “இந்தியாவின் சுதந்திரத்திற்கு நாம எல்லாம் ஒன்னு சேர்ந்துதான் போராடிக்கொண்டிருந்தோம், ஒன்னாதான் ஜெயில்ல இருந்தோம், இப்ப சுதந்திரம் கிடைத்தப் பிறகு நம்மால முடிஞ்சமட்டும் பள்ளிக்கூடம் கட்டியிருக்கோம், ரோடு போட்ருக்கோம், அணைகட்டி இருக்கோம், தொழிற்சாலைகள் இப்பதான் படிப்படியாய் பெருகுது, இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறணும், நீங்க ஒரே நாள்ல புரட்சின்னு சொல்றீங்க, எதற்காக புரட்சி, எங்க நேருவே உங்கள் கொள்கைகளைத்தானே நிறைவேற்றியிருக்கிறார் என்று எங்கள் கட்சியிலே பேசிக்கிறாங்க, ஆனா, நீங்க நேருவை எதிர்க்கிறீங்க, ஏன் ஜீவா ஆவியை கெடுத்துகிறீங்க “என்று தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒருவர் பேசியதற்கு, ஜீவா அளித்த பதில், “நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா இவ்வளவுக்கும் பிறகு ஏழைகள் இருக்கத்தானே செய்றாங்க, அந்த ஏழைகளுக்காக இந்த ஏழைக்கட்சி இருந்தே ஆகணும், அந்த ஏழைகளின் விடுதலையை பார்க்காமல் எனக்கும் விடிவு இல்லை. பேசவேண்டியதுதான் சாகவேண்டியதுதான் “என்று கூறியதை படிக்கும்போது அந்த ஒப்பற்ற ஏழைபங்காளனை நினைத்து நம் மனம் ஒரு நிமிடம் கலங்கத்தான் செய்கிறது.
காரைக்குடி கம்பன் விழாவில் பலபேர் திரு சா. கணேசனிடம் அந்த விழாவிற்கு ஜீவாவை அழையுங்கள் என்று வற்புறுத்தியதால், வேறுவழியின்றி கம்பன் விழாவில் ஒரு கம்யூனிஸ்ட் வந்து என்ன பேசப்போகிறார் என்று வேண்டாவெறுப்பாக ஜீவாவை அழைக்கிறார் ஜீவா பேச வேண்டிய நேரம் மேடைத்தலைமை பெரும்புலவர் சரவண முதலியார், ஜீவாவிடம் தங்களின் பேச்சு நேரம் 45மணித்துளிகள் என்று நினைவு படுத்தி பேச அனுமதிக்கிறார். கம்பன் விழா வரலாற்றில்முதன்முறையாக குறிப்பிட்ட நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டேயிருந்தவர் ஜீவா மட்டுமே. தலைவரும் மணியடிக்காமல் விட்டு விட்டார். அதற்குப்பின்னான கம்பன் விழா ஜீவா இன்றி நடக்கவில்லை. அந்த அளவுக்கு பேச்சுத்திறன் வாய்ந்தவர் ஜீவா.
தா.பாண்டியன்
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,