கொச்சையாக அசிங்கப்படுத்துறாங்களே
நம்மளை தெருவில இழுத்துவிட்டவங்களே இப்படி கொச்சையாக அசிங்கப்படுத்துறாங்களே...செம ஷாக்கில் ரஜினி

அரசியல் களம் எனும் தெருவுக்கு வந்தாக வேண்டும் என ஒவ்வொரு நிமிடமும் நெருக்கடி கொடுத்தவர்களே இப்போது மிக மோசமாக கொச்சைப்படுத்தி விமர்சித்தி வருவது ரஜினிகாந்தை ரொம்பவே அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். ரஜினிகாந்த் என்கிற தனிமனிதருக்கு அரசியல் ஆசைகள் துளிர்விட்ட தருணங்கள் உண்டு. அது அத்தனை மனிதர்களுக்கும் இயல்பானது.
ஆனால் கட்டாயம் நீங்க அரசியலுக்கு வந்தாக வேண்டும் என அவரது சூப்பர் ஸ்டார் இமேஜை முன்வைத்து அறுவடை செய்ய கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர முயற்சிகள் நடந்தன. இதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளும் ஏராளம்.
இதனால் வேறுவழியே இல்லாமல் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வருவேன் என்றார். ஆனால் தமிழகத்தின் களநிலவரம் தெரியாமல் மேம்போக்காக ரஜினி தெரிவித்த கருத்துகள் மக்களிடத்தில் இருந்து அவரை மிகவும் அன்னியப்படுத்திவிட்டன. இதனால் அவர் அரசியல் கட்சியை தொடங்காமலேயே இருந்தும் வந்தார்
இருந்தபோதும் தேர்தல் நெருங்கிவிட்டது.. எப்படியாவது கட்சியை தொடங்கியேதான் ஆக வேண்டும் என வழக்கம் போல நெருக்கடி கொடுத்தனர். கொரோனா அச்ச சூழலிலும் கூட இந்த நெருக்கடிக்கு உடன்பட்டவராக இருந்தார் ரஜினி. இதனால் அவருக்கு நெருக்கடி கொடுத்து அரசியல் களத்துக்கு இழுத்து வந்த அத்தனை கூட்டமும் ஒருசேர கூடி கும்மாளமிட்டது. எதிர்க்கட்சிகளை ஏகடியம் பேசினர்.
இப்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலை சுட்டிக்காட்டி தம்மால் அரசியலுக்கு வர முடியாது; மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பகிரங்கமாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத அவரை இழுத்துவிட்ட கூட்டம், இப்போது எந்த அளவுக்கு கீழிறங்கி அர்ச்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சிக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஊடகங்களில் எத்தனை இழிவுபடுத்த முடியுமோ அத்தனை இழிவுபடுத்துகின்றனர்.
தனக்கு நெருக்கமானவர்கள் என காட்டிக் கொண்ட இந்த கூட்டமே இப்படி செய்கிறதே என்பதுதான் ரஜினிக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம். நெருக்கடிக்குள்ளாகாமல் மக்களின் மனநிலைக்கு ஏற்ப நடந்து கொண்டிருந்தால் சினிமாவை போல நம்மை கொண்டாடி இருப்பாங்க இந்த ஜனங்க என ஆதங்கப்பட்டும் கொண்டார் ரஜினிகாந்த் என அவரது நீண்டகால விசுவாசிகள் கூறுகின்றனர்.
பாவம் அவரு? மக்கள் உண்மையிலே அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. அதை அவர் உணரவில்லை
நடிப்பு வேறு .அரசியல் வேறு இப்பவாது தெரிந்திருக்கமா தெரியல
அவரிடமிருந்த நேர்மை இப்போது கேலிக்கூத்தாகிவிட்டது
ஒரு ஆன்மிகவாதிக்கு இப்படி ஒரு எந்த முடிவு எடுக்கும் அளவுக்கு பக்குவமில்லாததது வேதனையே
Comments