பழநி தைப்பூச தேரோட்டம் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

 பழநி தைப்பூச தேரோட்டம் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை


பழநி :பழநி தைப்பூச திருவிழா தேரோட்டத்தில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இவ்விழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 28ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தைப்பூச தேரோட்டத்தில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


இதுகுறித்து கலெக்டர் விஜயலட்சுமி கூறுகையில், ‘‘தைப்பூச தேர் திருவிழாவிற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை. விழாவை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.  வரும் 14ம் தேதி முதல் 31ம் தேதி வரை அதிகபட்சமாக மலைக்கோயில் வளாகத்திற்குள் நாளொன்றிற்கு 25 ஆயிரம் பக்தர்கள் உரிய இடைவெளியை பின்பற்றி அனுமதிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வர வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களை காவடி மண்டபங்களில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து தங்க அனுமதிக்கலாம். இடும்பன்குளம் மற்றும் சண்முக நதியில் குளிப்பதற்கு அனுமதிக்கலாம். தைப்பூச திருவிழாவிற்கு எடப்பாடியில் இருந்து வரும் பக்தர்கள் 500 பேர் மட்டும் மலைக்கோயிலில் தங்கிக் கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார்....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,