ருத்ர தாண்டவம்

 

ருத்ர தாண்டவத்தை பூஜையுடன் தொடங்கிய 

திரௌபதி இயக்குநர்

திரௌபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி அடுத்து ருத்ர தாண்டவம் படத்தை தொடங்கியுள்ளார்

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் திரௌபதி. இந்தப் படத்தில் நடிகர் ரிச்சர்டு ரிஷி மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையிலும், ரசிகர்களிடையே திரௌபதிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதோடு, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் அமர்க்களப்படுத்தியது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜி, ருத்ர தாண்டவம் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திலும் ரிச்சர்டு ரிஷி தான் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடிப்பதன் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,