நேஷனல் வோட்டர்ஸ் டே

 நேஷனல் வோட்டர்ஸ் டே




🇮🇳 👆🏼
✅உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்குவது தேர்தல் ஆணையம். 1950 ஜனவரி 25ம்தேதி துவங்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் வைர விழா கடந்த 2011ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம்தேதி, தேர்தல் ஆணையத்தை கவுரவிக்கும் வகையில் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. கண்ணியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு என்று தேர்தல் ஆணையம், அரசு சாரா அமைப்புகளோடு இணைந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் குறித்து மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே ஜனவரி 25ம்தேதியை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தி, வாக்களிப்பதை அதிகப்படுத்துவதே இதன் நோக்கம். தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைனில் பெயர் சேர்ப்பு, நீக்கம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை, வாக்குப்பதிவை ஆன்லைனில் கண்காணிப்பது, விரைவான தேர்தல் முடிவுகள் என புதுமைகளை புகுத்தி வருகிறது.
✅இந்தியாவில் ஊராட்சி மன்ற தலைவர் முதல் பிரதமர் வரை நேரடி அல்லது மறைமுக தேர்தலின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்தனைக்கும் மக்கள் பிரதிநிதிகளை வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை என்பது, தமிழ்நாட்டில் பராந்தக சோழன் காலத்திலேயே குடவோலை முறை மூலம் தொடங்கி விட்டதாக்கும் .அதாவது நம்ம இந்த தமிழ்நாட்டில் தேர்தல் விழிப்புணர்வு என்பதெல்லாம் ஆயிரத்து ஐந்நுாறு ஆண்டுகால பழைய சமாச்சாரம்தான். என்ன ஒண்ணு ஒவ்வொரு கால கட்டத்திலும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும், விதிமுறைகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.
✅வாக்களிப்பது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியரின் கடமை. இதை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். வாக்குப்பதிவு 100 சதவீதத்தை தொடும்போதுதான், மக்கள் விரும்பும் உண்மையான மாற்றம் ஏற்படும். வாக்களிப்பது எவ்வளவு அவசியமோ, அதேபோல 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதும் அவசியம். எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் நமது கடமையை செய்ய வேண்டும்.
Prabhala Subash and 4 others

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி