கெட்டித் தயிர்: வீட்டில் செய்ய எளிய வழி

 

கெட்டித் தயிர்: வீட்டில் செய்ய எளிய வழி

வீட்டில் இருந்து கொண்டே ஆரோக்கியமான தயிர் செய்வது எப்படி என்று  சமையல் கலை வல்லுநர் நிஷா மதுலிகா கூறுகிறார்.

நமக்கு தேவையானவை

1 லிட்டர்- கொதிக்க வைத்த பால்
2 – பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்
1 – எலுமிச்சை

நீங்கள்  செய்ய வேண்டியது:

தயிர் செய்வதற்கு தேவையான முக்கிய மூலப்பொருள் ஸ்டார்டர் அல்லது ஈஸ்ட் ஆகும். முதலில் ஸ்டார்டர் செய்வது எப்படி என்று இங்கு காண்போம். ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த பாலை எடுத்து மிதமாக  சூடாக்க வேண்டும். இப்போது 2 பச்சை அல்லது சிவப்பு மிளகாயை பாலில் தண்டுடன் இட வேண்டும். பிறகு அதில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட வேண்டும். பின்னர் பாத்திரத்தை 10 முதல் 12 மணி நேரம் வரை மிதமான வெப்பம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். பிறகு திறந்து  பார்த்தால் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஸ்டார்டர்  ரெடியாகி இருக்கும்.

இப்பொழுது தயிர் எப்படி செய்வது என்று  காண்போம்.  ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த பாலை எடுத்து மிதமாக  சூடாக்க வேண்டும். பிறகு 2  டீஸ்பூன் ஸ்டார்டரை எடுத்து அதில் இட வேண்டும். பின்னர் வேறு ஒரு பாத்திரத்திற்கு பாலை மாற்ற வேண்டும். அதன் பின்  7 முதல் 8 மணி நேரம் வரை மிதமான வெப்பம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும் . இப்போது திறந்து பார்த்தால் நீங்கள் விரும்பிய ஆரோக்கியமான தயிர்  ரெடியாகி இருக்கும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,